பாவம் - புண்ணியம் பார்ப்பதில் அர்த்தம் உள்ளதா?
பாவம் செய்தால் நரகம் கிடைக்குமென்றும் புண்ணியம் செய்தால் சொர்க்கம் செல்லலாமென்று இன்றும் நம்மிடையே மக்கள் பேசுவதைப் பார்க்கிறோம்! இப்படியான பிம்பங்களை யார், எதற்காக உருவாக்கினார்கள்? இதனால் ஏன் நல்ல விளைவுகள் ஏற்படவில்லை! இதற்கு பதிலாக செய்ய வேண்டியது என்ன? பதிலை அறிய தொடர்ந்து படியுங்கள்!
 
பாவம் - புண்ணியம் பார்ப்பதில் அர்த்தம் உள்ளதா?, pavam punniyam parppathil artham ullatha?
 

பாவம் செய்தால் நரகம் கிடைக்குமென்றும் புண்ணியம் செய்தால் சொர்க்கம் செல்லலாமென்று இன்றும் நம்மிடையே மக்கள் பேசுவதைப் பார்க்கிறோம்! இப்படியான பிம்பங்களை யார், எதற்காக உருவாக்கினார்கள்? இதனால் ஏன் நல்ல விளைவுகள் ஏற்படவில்லை! இதற்கு பதிலாக செய்ய வேண்டியது என்ன? பதிலை அறிய தொடர்ந்து படியுங்கள்!

சத்குரு:

பாவம், புண்ணியம் இவற்றை உருவாக்கியது யார்? பாவம், புண்ணியம் இவை ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றது. ஒரு நாட்டில், ஒரு சமூகத்தில் நல்ல செயலாகக் கருதப்படுவது அல்லது வேறொரு சமூகத்தில் நல்ல செயலாகக் கருதப்படுவது இங்கே பாவமாக கருதப்படுகிறது. ஏனென்றால் பாவம் புண்ணியம் என்பவை மதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால்தான். பாவம், புண்ணியம் இவையெல்லாம் மனிதனின் மனதில் குற்றங்கள் உருவாகாமல் நல்ல மனிதனாக வாழ வகை செய்யும் என்பதால்தான் உருவாக்கப்பட்டன. மதங்களை வளர்ப்பதாகச் சொல்பவர்களுக்கு மனிதனிடம் உள்ள தெய்வீகத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாதது போலத் தெரிகிறது. அவர்கள் எப்போதுமே மனிதனை கடவுள்தான் படைத்தார் என்கிறார்கள்.

எப்போது நம் உயிர்த்தன்மையில் இந்த உயிர், அந்த உயிர் என்ற வேறுபாடில்லையோ, இதுவும் அதுவும் வேறுபட்டதல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று எப்போது உணருகிறோமோ அப்போது பாவம், புண்ணியம் என்பவை நமக்குத் தேவைப்படாது.

ஆனால் அதேநேரத்தில் மனிதத்தன்மை பற்றிய நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள். பாவம், புண்ணியம் என்றெல்லாம் சொல்லி அவருக்குள் ஒரு குற்றவுணர்வை உருவாக்கவில்லையென்றால் அவர் தவறாகச் சென்றுவிடுவார் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் பாவம், புண்ணியம் உருவாக்கப்பட்டது.

நீங்கள் இதைச் செய்தால் பாவம், அதைச் செய்தால் புண்ணியம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உடல்நிலையில், மனநிலையில், உணர்ச்சி நிலையில் தனித்தனி மனிதராகியிருந்தாலும் அடிப்படையாக மனிதன் என்கிற தன்மை, நான் என்கிற தன்மை. உங்கள் உயிர்த்தன்மை ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான் என்று உணர்கிற நிலையை நமக்குள் கொண்டு வரவேண்டும். எப்போது நம் உயிர்த்தன்மையில் இந்த உயிர், அந்த உயிர் என்ற வேறுபாடில்லையோ, இதுவும் அதுவும் வேறுபட்டதல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று எப்போது உணருகிறோமோ அப்போது பாவம், புண்ணியம் என்பவை நமக்குத் தேவைப்படாது.

பாவம், புண்ணியம் என்று பார்ப்பதற்குப் பதிலாக, நம் மனதிற்கு உயிர்த்தன்மைக்கு ஏற்ற எந்த செயலையும் செய்யலாம். நம் உயிருக்கு ஒத்திசைவாய் உள்ள எந்த செயலும் மற்ற உயிருக்கு எதிர்மறையாய் இருக்காது. இந்த புரிந்து கொள்ளும் தன்மையோடு மனிதன் செயல்பட்டால், இந்தக் குற்றங்கள் அகற்றப்படுவதோடு, நாம் புண்ணியம் செய்திருக்கிறோம். மற்றவரை விட ஒருபடி மேலே இருக்கிறோம் என்ற எண்ணங்களும் இல்லாமல் போகும்.

பாவம், புண்ணியம் என்பவை இருக்குமாயின், குற்றம், பயம் போன்றவையும் எப்போதும் இருக்கும். மனிதனுக்குள் குற்றம், பயம் இவற்றை உருவாக்குவற்குப் பதிலாக அன்பு, அமைதி, ஆனந்தம் இவற்றை உருவாக்கினால் அவனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய மனிதனாகவே இருப்பான்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1