முதுகுத்தண்டு மற்றும் மூளையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் எப்படி ஒருவரின் ஆன்மீக சாதனையை பாதிக்கும் என்பது பற்றியும், நம் கிரகித்துக்கொள்ளும் திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் சத்குரு விளக்குகிறார்..

Question: முதுகுத்தண்டிலோ மூளையிலோ அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதாவது மருத்துவ சிகிச்சை செய்தால், அது ஒருவருடைய குண்டலினியையும் ஆன்மீக சாதனையையும் பாதிக்குமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதிர்ஷ்டவசமாக, அறுவை சிகிச்சை செய்பவர்கள் உடல்மீது மட்டுமே சிகிச்சை செய்கிறார்கள், சக்தி நாடிகள் சந்திக்கும் சக்கரங்களைத் தொடுவதில்லை. ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இருந்தாலே ஒழிய யாரும் மூளை அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போவதில்லை. அதனால் அதைப்பற்றி பேசத் தேவையில்லை.

முதுகுத்தண்டில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, அறுவை சிகிச்சைகள் செய்வதைவிட, முதுகுத்தண்டை பலப்படுத்துவதையே நாம் பரிந்துரைப்போம். உண்மையில், அவ்விடத்தில் என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு உள்ளவர்களைத் தவிர, வேறு யாரும் முதுகுத்தண்டினைத் தொடக்கூடாது.

முதுகுத்தண்டில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, அறுவை சிகிச்சைகள் செய்வதைவிட, முதுகுத்தண்டை பலப்படுத்துவதையே நாம் பரிந்துரைப்போம். உண்மையில், அவ்விடத்தில் என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு உள்ளவர்களைத் தவிர, வேறு யாரும் முதுகுத்தண்டினைத் தொடக்கூடாது.

உங்கள் அனுபவங்கள் அனைத்திற்கும் மூலமே முதுகுத் தண்டுதான். நாம் தற்போது இருக்கும் நிலையின் எல்லைகளைக் கடக்க விரும்புகிறவர்களுக்கு, உடலிலேயே மிகவும் முக்கியமான பகுதி முதுகுத்தண்டுதான். அதனால் முதுகுத்தண்டில் மசாஜ், கைரோபிராக்டிக் சிகிச்சைகள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அப்படிப்பட்ட சிகிச்சைகளைச் செய்பவர்கள் தவறாகச் செய்கிறார்கள் என்று கிடையாது. தன் ஆன்மீக நிலை விரிவடைய வேண்டுமென விரும்புபவர்கள் இதுபோன்ற சிகிச்சைகளைத் தவிர்ப்பது நலம். ஏனெனில் உங்கள் கிரகிக்கும் திறன் உங்கள் முதுகுத்தண்டிலிருந்துதான் துவங்குகிறது.

ஏதாவது விபத்து ஏற்பட்டு, நிச்சயமாக சிகிச்சை தேவைப்படும் என்கிற பட்சத்தில் மட்டும், முதுகுத்தண்டில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம். பொதுவாக, முதுகுத்தண்டு சார்ந்த அறுவைச் சிகிச்சைகளைத் தவிர்ப்பதே சிறந்தது. மற்றபடி கொஞ்சம் வலி, தொந்தரவு போன்றவை இருந்தால் இவற்றை நீங்களே சரி செய்துகொள்ளலாம். அதற்கு நீங்கள் சிறிது பாடுபட வேண்டியிருக்கும். ஆனால் உங்களால் சரிசெய்துகொள்ள முடியும்..

உடலின் எந்தப் பாகத்தை விடவும் முதுகுத் தண்டு தன்னை உயிர்ப்பித்து, சீர்செய்து கொள்வதில் சிறப்பாக செயல்படுகிறது. தேய்ந்து போன டிஸ்க்கு பிரச்சனையால் அவதிப்பட்டோர் பலர், சில பயிற்சிகள் செய்வது மூலமாகவே அதிலிருந்து முழுமையாக வெளி வந்திருக்கிறார்கள்.

உயிர்த்தன்மையைப் பொருத்தவரை, அழிந்துபோன செல்களை சுலபமாக மறுஉருவாக்கம் செய்து புத்துயிரூட்டக்கூடிய உயிரோட்டமான இடம், முதுகுத்தண்டு. இதை உங்கள் மூளையிலும் மிகச்சுலபமாக செய்யலாம். டிமென்ஷியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சரியான செயல்களைச் செய்தால், மூளையின் செல்களைப் புதுப்பிக்க முடியும்.

உங்கள் மூளையை, மனதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, எத்தனை நரம்பணுக்கள் உயிர்ப்பாக இருக்கின்றன என்பது மாறுபடுகிறது. இந்த மாறுபாடு பெரிய அளவில் இருக்கிறது. நீங்கள் போதையில், மனச்சோர்வில் இருந்தால், இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். சரியான செயல்களைச் செய்வது மூலமாக இந்த எண்ணிக்கையை உயர்த்தலாம். யாராக இருந்தாலும் சரி, கட்டாயமாக ஒவ்வொரு மனிதருக்கும் இது வரப்பிரசாதமாக இருக்கும்.

ஹென்ரி மார்க்மேன் என்பவர், ப்ளூ பிரெயின் பிராஜெக்ட் எனும் திட்டத்தில், மூளை மீது அபாரமாக ஆராய்ச்சி செய்துள்ளார். முதல்முறையாக, மூளையின் உறுப்புகள், செயல்பாடுகள் முழுவதையும் கண்டறிந்து வரைபடம் செய்துள்ளார்கள். ஒரு மெய்நிகர் எலக்டிரானிக் மூளையை உருவாக்கி, மனித மூளையைப் போலவே செயல்படும் ஒரு பிரதியை கீபோர்டுடன் வைத்திருக்கிறார்கள். மூளை இருந்தாலும், அதை இயக்கும் கீபோர்டு தங்களிடம் இல்லாததுதானே பலரது பிரச்சனை.

மூளையை முழுமையாய் இயக்கும் கீபோர்டு இருந்தால், நம் தேவை எதுவாக இருந்தாலும் அதை டைப் செய்யவும் முடிந்தால், நீங்கள் ஆயிரம் மடங்கு அதிக திறமைசாலியாக இருப்பீர்கள் அல்லவா? ஏனென்றால், மனித மூளை பலதரப்பட்ட செயல்களைச் செய்யும் திறமை வாய்ந்தது. மூளை என்பது அத்தனை நுணுக்கங்களைக் கொண்ட ஓர் இயந்திரம். பலரும், இதனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெறுவது கிடையாது. மூளையைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள அதீத கவனமும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது.

பலருக்கு, தங்கள் கம்ப்யூட்டரையே முழுமையாகக் கையாளத் தெரிவதில்லை. அதன் செயல்பாட்டுத் திறனில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த பல்வேறு வழிகள் இருந்தாலும், எல்லோருக்கும் அதனை முழுமையாக பயன்படுத்தத் தெரிகிறதா என்ன? அதுபோலவே, மூளையையும் நாம் முழுமையாய் பயன்படுத்துவதில்லை. மூளையை முழுமையாய் பயன்படுத்தினால் உங்களால் பலவிதமான செயல்களைச் செய்யமுடியும். ஆனால் அதனை பயன்படுத்தும் அறிவு விரல் நுனிகளில் இருக்க வேண்டுமல்லவா? பிரச்சனை எங்கிருக்கிறது புரிகிறதா?