சத்குரு:

தமிழ்நாட்டில் நாம் முருகனென வழிபடும் சுப்ரமணியனது கதை சற்றே சுவாரஸ்யமானது. சிவனை யக்ஷ ஸ்வரூபன் என்று அழைக்கிறோம். அவன் இவ்வுலகத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவன் குறிப்பிட்ட விதமான சில சடங்குகளைச் செய்து வந்ததால், அவனுக்கு சில குணங்களுள்ள மனைவி தேவைப்பட்டாள். அவனுக்கு மனித மனைவி கிடைத்தாலும் அவனது விந்தை ஏந்திக் கொண்டு குழந்தையை ஈன்று தரும் ஒரு துணைவி அவனுக்கு அமையவில்லை. பார்வதியால், சிவனின் விந்தை தனக்குள் ஏந்திக் கொள்ள முடியாததால், 6 யக்ஷ குலப் பெண்களை அழைத்து வந்தனர். அவனுடைய விந்து அவர்களுடன் பகிரப்பட்டது. அவர்களாலும் சிவனின் விந்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை, அதனால் அது புனிதமான வேள்வியில் விடப்பட்டது.

தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள காட்டி சுப்ரமண்யா என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கிருந்த நதியில் தன் வாளை கடைசி முறையாக கழுவினான். அங்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருந்து தியானம் செய்தபின், மலைமேல் ஏறி, அதன் உச்சியில் ‘நின்ற’ நிலையில் தன் உடலை விட்டான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிவனின் வாரிசைக் காணத் துடித்துக் கொண்டிருந்த பார்வதி, இதைப் பார்த்ததும் பேரார்வம் கொண்டாள். யக்ஷ குலப் பெண்களும் அந்தக் கருவை வெகுநாட்களுக்கு சுமக்கவில்லை. வெறும் 38, 40 நாள் கரு என்றே இதனைச் சொல்கிறார்கள். இந்தக் கருக்களை ஒன்று சேர்த்து, அவற்றை தாமரை இலையில் வைத்து, ஊட்டமளித்து வளர்த்தாள் பார்வதி. ஆறு குழந்தைகளும் தாமரை இலையில் வளர்ந்தன. ஒவ்வொன்றும் பிரம்மிப்பான குணங்களை கொண்டவையாய் இருந்தன. ஆனால், 6 உயிர்களுக்குமே தனியுடல் எடுப்பதற்கு தேவையான உடலமைப்பு இல்லை. ஒரு உயிர், இந்த ஆறு குணங்களையும் ஒருங்கே பெற்றால் அது அற்புதமான ஒரு உயிராக இருக்கும் என்பதைப் பார்த்தாள் பார்வதி. உடல் குறைபாடோடு உள்ள இந்த உயிர்களை தன்னுடைய தாந்திரீக சக்தியால் ஒன்று சேர்ப்பதில் வெற்றி கண்டு, அவற்றை ஒரே குழந்தையாய் மாற்றினாள்.

இதனால் கார்த்திகேயன் ஆறுமுகன் ஆனான். அவனுடைய குணமும் ஆறுமுகமானது. ஆறு உயிர்களை ஓர் உடலிற்குள் அடைக்கும் ஒரு முயற்சி இது. பல தருணங்களில் இதுபோன்ற முயற்சிகள் நடைபெற்றிருந்தாலும் அவை யாவும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. இங்கு ஈஷாவிலும் நாம் 2 உயிர்களை ஒரு உடலிற்குள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருந்திருக்கிறோம். ஆனால், 6 உயிர் ஓருடலினுள் இருந்தது அரிதினும் அரிதான ஒரு நிகழ்வு. இதுபோன்ற ஒரு நிகழ்வைப் பற்றி நாம் கேள்விப்பட்டதே இல்லை. பார்வதியின் அரும்முயற்சியால் 6 உயிர்கள் ஓருடலாய் வளர்ந்தன. அவன்தான் கார்த்திகேயன்.

தன் 8 வயதில், அவன் அசாத்தியமான சக்தியுடன், கற்பனைக்கு எட்டாத தனித் திறமைகளுடன் விளங்கினான். வீழ்த்த முடியாத போர் வீரனாகவும் திகழ்ந்தான். அவன் இருந்த விதம் ஒரு போராளியைப் போன்று இருந்தது. எங்கெல்லாம் அக்கிரமங்கள் நிகழ்ந்தனவோ அங்கெல்லாம் கார்த்திகேயன் இருந்தான். அதனை ஒரு முடிவிற்கு கொண்டு வந்தான்.

தேசம் முழுவதும் அக்கிரமங்களைத் தேடித் திரிந்தான் கார்த்திகேயன். அக்கிரமத்தைப் பார்த்த இடங்களிலெல்லாம் வெட்டிச் சாய்த்தான். தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள காட்டி சுப்ரமண்யா என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கிருந்த நதியில் தன் வாளை கடைசி முறையாக கழுவினான். அங்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருந்து தியானம் செய்தபின், மலைமேல் ஏறி, அதன் உச்சியில் ‘நின்ற’ நிலையில் தன் உடலை விட்டான். இன்றும் இம்மலை குமாரபர்வதம் என்று அவன் பெயரால் அழைக்கப்படுகிறது. பொதுவாக, யோகிகள் உடலை விடும்போது, ஒன்று அமர்ந்து கொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ உடல் விடுவது வழக்கம். ஆனால், இந்தத் தீவிர யோகி நின்று கொண்டே தன் உடலை நீத்தான்.

குமாரபர்வத மலை உச்சிக்கு செல்வதே கடினம், அதுபோன்ற ஓரிடத்தில் எங்கேயோ லேசாகத் தோண்டினால் ஒரு ஆறுமுக கல் கிடைக்கிறது. இதனை சண்முக லிங்கம் என்கிறார்கள். இந்த கற்கள் மிக மிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன.

அவன் உடல்விட்ட அந்த இடம் சக்திப் பிரவாகமாய் திகழ்கிறது. சக்தி அதிர்வுகளுடன் விளங்குகிறது. இதில் நம்ப முடியாத ஒரு விஷயம் என்னவென்றால், அந்த மலை உச்சிக்கு போய், அங்கிருக்கும் சில கற்களைப் புரட்டிப் பார்த்தால், அவை யாவும் ஆறு முகங்களை செதுக்கி வைத்ததைப்போல் இருக்கின்றன. குமாரபர்வத மலை உச்சிக்கு செல்வதே கடினம், அதுபோன்ற ஓரிடத்தில் எங்கேயோ லேசாகத் தோண்டினால் ஒரு ஆறுமுக கல் கிடைக்கிறது. இதனை சண்முக லிங்கம் என்கிறார்கள். இந்த கற்கள் மிக மிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன.

இந்த கற்கள், இந்த வடிவம் பெற்றமைக்குக் காரணம், அவன் விட்டுச் சென்ற அந்த சக்தி சூழ்நிலை. அவனது ஆறுமுக சக்தி, அங்கிருக்கும் கற்களையும் விட்டு வைக்கவில்லை. அந்த இடத்தில் எதுவுமே அவனது சக்தி நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலாத வகையில் இருக்கிறது. சுப்ரமணியன் ஒரு பேரற்புதம், ஆனால் அவன் குறிப்பிட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, அதன்படி வாழ்ந்தான். தனக்கு 21 வயது இருக்கும்போதே அவன் தன் உடலை நீத்தான். பெரும்பாலான பால யோகிகளின் நிலை இப்படித்தான். மிகச் சிறிய வயதிலேயே அவர்கள் தங்கள் உடலை விட்டுச் சென்று விடுவர்.

தமிழில், சுப்ரமணியனுக்கு முருகன் என்ற பெயருள்ளது எத்தனை பொருத்தமான ஒரு விஷயம்! முருகன் என்றால் அழகு என்று கேள்விப்பட்டேன். அவன் அத்தனை அற்புதமான ஒரு உயிராக வாழ்ந்தான். அந்த அழகு, அவனிருந்த அத்தனை இடத்திலும் பிரதிபலித்தது.