நம்பிக்கை தரும் சத்குருவின் வாசகங்கள்! (Motivational Quotes in Tamil )

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன்

நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு, மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கல்ல.

மன அழுத்தம், Stress

நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால், இயல்பாகவே நீங்கள் அன்பாகவும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பீர்கள்.

புத்திசாலித்தனம், Intelligence, அன்பு, Love

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், கவலை, Worry

மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்.

மகிழ்ச்சி, Happiness, அழகு, Beauty

விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது. உங்கள் விதியை நீங்களே உருவாக்கத் தவறும்போது அது தலைவிதியாகிறது.

Alt Text: Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், விதி, Fate

உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருந்தால், நீங்கள் விவேகமானவராக மாறவேண்டும், காயப்பட்டவராக அல்ல.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், விவேகம், Wise

கடைவீதியில், குறைவாகக் கொடுத்து அதிகமாகப் பெற்றுக்கொள்வது சாமர்த்தியமாகக் கருதப்படுகிறது. உண்மையான உறவில், உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கவலைப்படாமல் உங்களால் முடிந்ததையெல்லாம் கொடுப்பீர்கள்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், உறவு, Relationship

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை - உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது.

மன அழுத்தம், Stress

வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகப் பார்த்தால், எங்கும் சாத்தியங்களையே காண்பீர்கள். வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்த்தால், எங்கும் பிரச்சனைகளையே பார்ப்பீர்கள்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், பிரச்சனை, Problem, சாத்தியம், Possibility

உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும். உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது.

மனம், Mind

சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான், மனிதர்கள் சாதாரணமாக தாங்கள் இருக்கும் நிலையைவிட மேன்மையான நிலைக்கு உயரமுடியும்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், பிரச்சனை, Problem, சவால், Challenge

யோகா என்றால் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருப்பது - உடலளவில் மட்டுமில்லாமல் எல்லாவிதத்திலும். அப்படி இருந்தால் நீங்கள் எங்கு இருந்தாலும் நலமாக இருப்பீர்கள்.

 Alt Text: யோகா, Yoga

நீங்கள் எந்த அளவு வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்பது, உங்கள் உடலையும் மனதையும் உங்களால் எந்த அளவு சிறப்பாக பயன்படுத்த முடிகிறது என்பதை சார்ந்திருக்கிறது.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், வெற்றி, Success

தனிமனிதர்களிடத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் உலகில் மாற்றம் ஏற்படுத்தமுடியாது.

மாற்றம், Transformation, Change

யாருமே நீங்கள் குறைபாடற்ற சிறந்த மனிதராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால், இன்னும் சிறந்தவராக மாற நீங்கள் தொடர்ந்து முயல்கிறீர்களா என்பதே மிக முக்கியமானது.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், முயற்சி, Effort

உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை - போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், தோல்வி, Failure

உங்களுக்குள் நீங்கள் நல்ல சமநிலையுடன் இருக்கும்போது மட்டும்தான், உங்கள் புத்திசாலித்தனம், திறமை மற்றும் ஆற்றல் முழுமையாக வெளிப்படும்.

சமநிலை, Balance

நீங்கள் ஆனந்தமாகவோ துக்கமாகவோ இருப்பதை வேறொருவரால் முடிவுசெய்ய இயன்றால், அதுவல்லவா இருப்பதிலேயே மோசமான அடிமைத்தனம்?

அடிமை, Slave

நீங்கள் எங்கிருந்தாலும், எத்தகைய சூழ்நிலைக்கு வெளிப்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்வனுபவம் வீண்போக விடாதீர்கள்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், வாழ்க்கை அனுபவம், Life Experience

நீங்கள் எப்போதும் சந்தேகத்துடன், எல்லோரும் உங்களிடம் குற்றம் கண்டுபிடிக்கவே செயல்படுகிறார்கள் என்கிற நினைப்பில் இருந்தால், வாழ்க்கையில் மிகச் சிறிய விஷயங்களை மட்டுமே உங்களால் செய்ய முடியும். நம்பிக்கை மிக முக்கியம்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், வாழ்க்கை அனுபவம், Trust

உங்களால் செய்யமுடியாததை நீங்கள் செய்யாவிட்டால் பரவாயில்லை. ஆனால் உங்களால் செய்யமுடிந்ததை நீங்கள் செய்யாவிட்டால், உங்கள் வாழ்க்கை பரிதாபத்திற்குரியதாய் ஆகிவிடும்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், பரிதாபம்

நீங்கள் கடந்தகாலத்தை நினைவுகூர்ந்திட முடியும், நிகழ்காலத்தை அனுபவித்துணர முடியும், ஆனால் வருங்காலத்தை விரும்பும்படி உருவாக்கிட முடியும்.

Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம், Past Present and Future