மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை!
இது கேட்டுப் பழகிய பழமொழிதான். இதில் எந்தளவிற்கு உண்மை பொதிந்துள்ளது? உண்மையில் பொய் சொல்லி வாழ்ந்தவன் இல்லையா? இதற்கு சத்குரு தரும் விளக்கம் என்ன? தொடர்ந்து வாசியுங்கள்...
 
 

இது கேட்டுப் பழகிய பழமொழிதான். இதில் எந்தளவிற்கு உண்மை பொதிந்துள்ளது? உண்மையில் பொய் சொல்லி வாழ்ந்தவன் இல்லையா? இதற்கு சத்குரு தரும் விளக்கம் என்ன? தொடர்ந்து வாசியுங்கள்...

சத்குரு:

முதலில் மெய் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தகவலை மாற்றாமல் சொல்வது மெய்யாக இருக்கலாம். உண்மை என்பது அதைவிட ஆழமானது. அது வாழ்வின் அடித்தளம். ஆணிவேர். உண்மை என்பதை இங்கே சத்தியம் என்ற உணர்வுப்பூர்வமான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்மை என்பதை இங்கே சத்தியம் என்ற உணர்வுப்பூர்வமான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, எதெல்லாம் வாழ்வை வளம் பெறச் செய்கிறதோ, அதெல்லாம் உண்மைதான். எதெல்லாம் வாழும் தன்மையை குறைபாடுள்ளதாக ஆக்குகிறதோ, அதெல்லாம் பொய்தான். வார்த்தைகளில் உள்ள மெய் மற்றும் பொய்யை மட்டும் உத்தேசித்து இப்படிச் சொல்லப்பட்டிருக்காது.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சூழ்நிலையை சமாளிப்பதற்காக பொய் சொல்வது வேறு. பொய் சொல்வதையே வாழ்வின் ஆதாரவிதியாக மாற்றிக் கொள்வது வேறு. வாழ்வா, மரணமா என்ற இக்கட்டான நிலை வரும்போது, ஒரு பொய் அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு பொய் உங்களுக்கு தகுதிக்கு மீறிய ஓர் அனுகூலம் பெற்றுத் தரக்கூடும். ஆனால் நாளடைவில் அதற்கான விலையை நீங்கள் தந்தாக வேண்டியிருக்கும். ஒற்றைப் பொய்யாக இருந்தாலும், அதற்கான பின்விளைவுகளைத் தவிர்க்க முடியாது. பொய்யையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவர்கள், அதற்கானப் பெரும் பின்விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும். பொய் வெகு காலத்துக்கு வேலை செய்யாது.

பொய் வெகு காலத்துககு வேலை செய்யாது.

எவ்வளவு பெரிய உண்மையைச் சொல்வதற்கும் பெரிய சாமர்த்தியம் தேவையில்லை. ஆனால், எளிதான ஒரு பொய்யைச் சொல்வதானால்கூட அதற்கு சாமர்த்தியம் வேண்டும். சொன்ன பொய்யை மனதில் நிலை நிறுத்த பெரு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்மைகளை மறந்து போவது பெரிய ஆபத்தில்லை. ஆனால், அவ்வப்போது சொன்ன பொய்களை நினைவில் வைத்துக் கொள்வது வெகு ஆபத்தானது. ஏனெனில், சேகரிக்கப்படும் பொய்கள் உங்கள் மனநிலையை ஒழுங்கற்றதாக ஆக்கி, சிதைத்துவிடக்கூடியவை.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொய் வேலை செய்யும் அளவுக்கு மெய் வேலை செய்யாமல் போகலாம். ஆனால், அதை வாழ்வின் விதிமுறையாக மாற்றிக் கொள்பவர்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் எச்சரிக்கை இது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1