சத்குரு சொல்லும் குட்டிக் கதைகள் இரண்டு - அதிகமாக குடித்ததில் ஏற்பட்ட விபரீதமும், காட்டுமிராண்டிகள் செய்த சூப்பில் நடந்த காமெடியும் இரு கதைகளாக இங்கே...

சத்குரு:

மீண்டும் உள்ளே போன குடல்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு இளைஞன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினசரி குடித்துக் கொண்டே இருந்தான். இப்படியே குடித்துக் கொண்டிருந்தால் சீக்கிரம் செத்துவிடுவான் என நினைத்த அவனது நண்பர்கள் குடிப்பதிலிருந்து அவனை மீட்ªடுப்பதற்காக அவனிடம், "இப்படி நீ சாராயம் குடித்துக் கொண்டிருந்தால், ஒரு நாள் உன் குடல் வெளியே வந்துவிடும்," என்று எச்சரித்தனர். சட்டை செய்வானா அவன்? கேட்காமல் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருந்தான். ஒவ்வொரு நாளும் மூச்சு முட்ட குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து குடல் வெளிவந்துவிடும் அளவிற்கு வாந்தி எடுப்பது வழக்கம். அதனால் அவனது நண்பர்கள் ஒரு கோழியை வாங்கி, அதன் வயிற்றுப்பகுதியில் இருப்பவற்றை வெளியே எடுத்து இவன் வாந்தி எடுக்கும் இடத்தில் போட்டுவிட்டனர்.

வீட்டிற்கு வந்தவனுக்கு, தான் வாந்தி எடுத்த பகுதியில் குடல் பகுதி சிதறிக் கிடப்பதைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. அவனது நண்பர்கள் அவனிடம் என்ன நடந்தது என்று கேட்க அவன், "நீங்கள் சொன்னதைப் போலவே என் உள்ளே இருந்த குடலெல்லாம் வெளியே வந்துவிட்டது," என்றான். நண்பர்கள், "ஐயோ, நீ உன் குடலை இழந்துவிட்டாய், இப்போதாவது குடிப்பதை நிறுத்து," என்றனர். அதற்கு அவன், "சே! கவலைப் படாதீர்கள், வெளியே விழுந்த என் குடலை மீண்டும் வயிற்றுக்குள்ளே அனுப்பிவிட்டேன்," என்றான்.

சூடான சூப் ரெடி!

வன ஆராய்ச்சின் ஒரு பகுதியாக இரண்டு ஆய்வாளர்கள் மத்திய ஆப்பிரிக்காவிற்கு சென்றனர். வழி தெரியாமல் திக்கு முக்காடிய அவர்கள் ஒரு நரமாமிச கூட்டத்திடம் சிக்கிக் கொண்டனர். நீண்ட காலத்திற்குப் பின் நல்ல விருந்து கிடைத்ததால் முழு கூட்டமும் கொண்டாட்டத்தில் குதூகலித்தது. இரண்டு ஆய்வாளர்களையும் அலங்கரித்து ஊருக்கே காண்பித்து, ஆடிப் பாடி, பறை அடித்து மகிழ்ந்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக ஊர் மத்தியில் ஒரு பெரிய குண்டாவில் நீர் நிரப்பி, இருவரையும் அதில் நிற்க வைத்து, தீ மூட்டி, முறைப்படி அவர்களது சடங்குகளைத் துவக்கினார்கள். தனக்குச் சம்பவிக்கப் போகும் மரணம் ஏற்படுத்தும் பயத்தால் ஒரு ஆய்வாளர் குலை நடுங்கி அழத் துவங்கினார். தண்ணீர் சூடாகத் துவங்கியது. இன்னொரு ஆய்வாளரோ பயமில்லாமல் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தார். அழுது கொண்டிருந்த ஆய்வாளர், “உனக்குக் கிறுக்குப் பிடித்திருக்கிறதா? நம்மை உயிரோடு சமைத்துக் கொண்டிருக்கிறார்கள், இப்படிச் சிரிக்கிறாயே, உனக்குப் பயமாய் இல்லையா,” என்றார்.

அதற்கு இரண்டாமவர், “இந்தக் காட்டுமிராண்டிகளுக்கு நான் அவர்கள் சூப்பில் சிறுநீர் கழித்து விட்டேன் என்பது தெரியாதே!” என்று தொடர்ந்து சிரித்தார்.