மாற்றத்தை வரவேற்கும் காலம்... அக்னி நட்சத்திரம்!
‘அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்டதால், வெப்பம் அதிகரிக்கும்!’ வானிலை ஆராய்ச்சி மையத்தின் இந்த அறிவிப்பு செய்தியைக் கேட்டதும், அது வெறும் தட்பவெப்பம் சார்ந்த மாற்றம் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால்... அக்னி நட்சத்திரம் காலம் உயிர்த் தீவிரம் அதிகரிக்கும் காலம் என்பதை சத்குரு இதில் உணர்த்துகிறார்!
 
 

‘அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்டதால், வெப்பம் அதிகரிக்கும்!’ வானிலை ஆராய்ச்சி மையத்தின் இந்த அறிவிப்பு செய்தியைக் கேட்டதும், அது வெறும் தட்பவெப்பம் சார்ந்த மாற்றம் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால்... அக்னி நட்சத்திரம் காலம் உயிர்த் தீவிரம் அதிகரிக்கும் காலம் என்பதை சத்குரு இதில் உணர்த்துகிறார்!

சத்குரு:

வெயில் காலம் துவங்கிவிட்டது. இந்த மாதத்தில் அக்னி நட்சத்திரம் வருகிறது. நாம் விவசாய கலாச்சாரத்தில் இருந்திருந்தால், இந்த அக்னி நட்சத்திரம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வு. ஏனெனில் வெயில் காலம் வந்தால் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த தமிழ் கலாச்சாரத்தில், இந்த தென் இந்தியாவில், அக்னி நட்சத்திரம் ஏற்படப் போகையில், உணவு, உடை, செயல் என்று பல வகைகளிலும் மனிதன் தன் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் வீட்டிற்குள்ளேயே மின்விசிறி, ஏசி போட்டு இருப்பதால் நம் சுற்றுசூழலில் என்ன ஏற்படுகிறது என்பதை அறியாமல் இருக்கிறோம். அப்படியில்லாமல், சற்று வெளியே வந்து உணர்ந்து பார்த்தீர்களென்றால்... ஒரு பெரிய மாற்றம், ஒரு புது தன்மை நடைபெறுவதை பார்க்க முடியும். இந்த தமிழ் கலாச்சாரத்தில், இந்த தென் இந்தியாவில், அக்னி நட்சத்திரம் ஏற்படப் போகையில், உணவு, உடை, செயல் என்று பல வகைகளிலும் மனிதன் தன் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும்.

நமது உயிருக்கு பல வகைகளில் மூல காரணமாக உள்ள சூரியன் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறான். தீவிரமின்றி எந்த செயலும் முழுமை பெறாது. நாமும் நமது செயல்களில் தீவிரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நமது ஆன்மீக தீவிரம், உயிர் தீவிரம், மனத் தீவிரம் என அனைத்தையும் ஒரு புதிய நிலைக்கு நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இப்போதுள்ள பரிமாணத்திலிருந்து அடுத்த பரிமாணத்திற்கு செல்ல முடியும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1