சத்குரு:

நோக்கமில்லா தீவிரமே, ஏட்டி போட்டிகள் இல்லாமல் மனிதனுக்குள் புதைந்திருக்கும் மேதமையை வெளிக்கொண்டுவரும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனை பிழிந்தெடுத்தால்தான் அவனிலிருந்து சிறந்தவை வெளிவரும் என்று நம்பப்படுகிறது. இந்தத் தவறான கண்ணோட்டம், வர்ணிக்கவே இயலாத, கடினமான அளவிலான போட்டி மனப்பான்மைக்கு சமூகங்கள் தங்களை தாங்களே ஆட்படுத்திக் கொள்ளச் செய்கிறது. தன்னுடன் இருக்கும் சக பிள்ளைகளுடன் போட்டி போட இயலாமல், பெற்றோரின் வற்புறுத்தல், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றை தாக்குபிடிக்க முடியாமல் பிஞ்சுக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மனிதர்கள் தியானத் தன்மையில் இருப்பது மட்டுமே இயல்பான மேதமையை வெளிக் கொண்டுவரும் சூழ்நிலையை உருவாக்கும்.

சரி, அப்போது போட்டியில்லாத சமூக அமைப்பை உருவாக்கி விடலாமா என்றால், இல்லை. இதற்கு மாற்று சோம்பேறித்தனமான நலிவுற்ற சமூக அமைப்பல்ல. தேவைப்படுவதெல்லாம் நோக்கமில்லா தீவிரம் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே. நோக்கம் உருவாக்கி செயல்படுவதில் உடனடிப் பலன்கள் கிடைத்தாலும், ஒரு மனிதனுக்குள் புதைந்திருக்கும் மேதமையை அது வெளிக் கொண்டுவராது. மனிதர்கள் தியானத் தன்மையில் இருப்பது மட்டுமே இயல்பான மேதமையை வெளிக் கொண்டுவரும் சூழ்நிலையை உருவாக்கும். நோக்கமில்லாமல் மிகுந்த உயிர்ப்புடன் இருப்பது மிக அவசியம். ஏனெனில், மனிதன் உருவாக்கும் நோக்கங்கள் எல்லாம் வாழ்க்கை நமக்கு உருவாக்கி வைத்துள்ள நோக்கத்தை விடுத்து பாதை மாறிப் போவதாய் உள்ளது. வாழ்க்கை நமக்கு வகுத்துக் கொடுத்துள்ள நோக்கத்தை அறிந்து அதனை அடைவதே நம் வாழ்வின் நோக்கம், உயிர்நோக்கம். இதற்காகவே நம் உயிர் ஏங்குகிறது. மக்கள் தங்களுக்குள் பல நோக்கங்கள் இருக்கிறது என்று வெளிப்படுத்திக் கொள்வதெல்லாம் தன் வாழ்வின் உண்மையான அர்த்தத்தை நோக்கி அவர்கள் கொண்டிருக்கும் ஆவலே!

இது என் வாழ்க்கையின் கடைசி கட்டம். தன்னுள் மலரவும் அந்த வாய்ப்பை மற்றவர்களுக்கு வழங்கவும் துடிக்கும் உங்கள் அனைவருக்கும் நான் முழுமையாய் கிடைப்பதற்காக என் வாழ்வின் இந்த கடைசிக் கட்டத்தை அர்ப்பணிக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.