சத்குரு:

உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்களுக்காகச் சிறப்பானதைச் செய்ய வேண்டுமென்கிற விருப்பத்தோடு இருந்தால் மட்டும்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் உங்கள் நிர்வாகம் அற்புதமாக இருக்கும்.

சுற்றியுள்ளவர்கள் உங்களை அன்பு செய்து, தங்களால் முடிந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல் செய்ய முன்வந்தால்தான், மன அழுத்தம் இல்லாமல் நிர்வாகம் செய்வீர்கள். சுற்றியிருப்பவர்கள் உங்களைக் கீழே இழுக்கும் முயற்சியில் ஈடுபடும் நிலையிருந்தால், அவ்வாறான சூழ்நிலைகளை நிர்வாகம் செய்யும்போது, மன அழுத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. உங்களை உண்மையாகவே நேசித்து, அவர்களது சிறந்த பங்காற்றலை அளிக்கக்கூடிய மனிதர்களை நீங்கள் உருவாக்கவில்லை எனில் நிர்வாகம் மிகப்பெரும் வலியாகவும், துன்பமாகவும் ஆகிவிடும். உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்களுக்காகச் சிறப்பானதைச் செய்ய வேண்டுமென்கிற விருப்பத்தோடு இருந்தால் மட்டும்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் உங்கள் நிர்வாகம் அற்புதமாக இருக்கும். நீங்கள் எல்லாரும், உங்களுக்கும், உங்களைச் சுற்றிய உலகத்திற்கும் சிறந்த மேலாளராக வேண்டுமென்பது என்னுடைய விருப்பமும், ஆசீர்வாதமும் ஆகும். நம் வாழ்வு அழகு பெறுவது எதைச் செய்கிறோம் என்பதில் இல்லை; நலவாழ்விற்கான கனவில் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் இணைத்துக்கொள்வதில்தான் நமது வாழ்வின் அழகு இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.