ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட இருப்பதற்காக சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே...

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதியை “சர்வதேச யோகா தின”மாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 12ம் தேதி வெளியிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஐ.நா சபையில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றியபோது, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் தீர்மானங்கள் வரையப்பட்டன. இதற்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த தீர்மானத்தை “உலக சுகாதார மற்றும் வெளியுறவு கொள்கை”யின் கீழ் ஐ.நா நிறைவேற்றியுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து சத்குரு அவர்கள் வழங்கிய செய்தி...

“வாழ்க்கை எப்படி இயங்குகிறது என்பதை அறிந்துகொள்ள உதவும் அறிவியல் யோகா. இயற்கை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறி மனிதன் தன்னை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற வாய்ப்பை, மதங்கள் தோன்றுவதற்கு முன்பே யோக விஞ்ஞானம் மனிதனுக்கு வழங்கியிருக்கிறது.

மகத்தான இந்த அறிவியலை அதன் தூய்மை மாறாமல் இவ்வுலகிற்கு வழங்குவது இந்தத் தலைமுறையின் பொறுப்பு. உள்நிலை வளர்ச்சி, நல்வாழ்வு, முக்தியை தரும் யோகா, வருங்கால தலைமுறையினருக்கு நாம் வழங்கக்கூடிய மாபெரும் சொத்து. ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கக் கோரி அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பிரதமருக்கு எனது பாராட்டுக்கள்!"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.