ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்!
கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், களரி, யோகக்கலை போன்றவற்றை நீங்கள் ஒரு பொழுதுபோக்காக, பகுதி நேரமாகக் கற்றுக்கொள்ள முடியாது. அதிலேயே அமிழ்ந்துவிட வேண்டும். அதனால்தான், எல்லா நேரங்களிலும் இந்தக் கலைகளிலேயே அமிழ்ந்திருக்கும் சூழலை இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கியுள்ளோம். அந்தச் சூழலும், கலாச்சாரமும் இல்லாமல் இந்தத் தரத்தை உருவாக்க இயலாது.
 
ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்!
 

சத்குரு:

சம்ஸ்க்ருதி என்றாலே வாழ்வைத் தீவிரமாகவும் சமச்சீராகவும் வாழ்வது என்று பொருள். இன்று, மனிதர்களுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், அவர்கள் சமமான தன்மையில் இருந்தால் அவர்களிடம் தீவிரம் இருப்பதில்லை. தீவிரமாக இருந்தால் சமநிலை குறைகிறது. ஒரே நேரத்தில் தீவிரமாகவும் சமநிலையோடும் இருக்க முடிந்தால் அங்கே அச்சம் இருக்காது. எவ்விதமான சூழலை எதிர்கொண்டாலும் வாழ்க்கை அழகானதாகவே இருக்கும். இந்நிலையை எட்டிவிட்டால், உங்களைச் சுற்றி நடப்பவை உங்கள் விதியைத் தீர்மானிக்காது. மாறாக, உங்களுக்குள் என்ன நடக்கிறதோ, அதுவே உங்கள் விதியைத் தீர்மானிக்கும்.

கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், களரி, யோகக்கலை போன்றவற்றை நீங்கள் ஒரு பொழுதுபோக்காக, பகுதி நேரமாகக் கற்றுக்கொள்ள முடியாது. அதிலேயே அமிழ்ந்துவிட வேண்டும்.
அதனால்தான், எல்லா நேரங்களிலும் இந்தக் கலைகளிலேயே அமிழ்ந்திருக்கும் சூழலை இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கியுள்ளோம். அந்தச் சூழலும், கலாச்சாரமும் இல்லாமல் இந்தத் தரத்தை உருவாக்க இயலாது.

ஒரு குழந்தையை மருத்துவராக்க வேண்டும், பொறியாளராக்க வேண்டும் என்று தோன்ற உத்தேசங்கள் எதுவுமின்றி, அந்தக் குழந்தை உடலளவிலும், மனதளவிலும், முழுமையான தன்மையில் வளர்வதுதான் சம்ஸ்க்ருதி.

குழந்தைகள், வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்கிற கேள்வி பெற்றோருக்கு இருக்கிறது. ஆனால், குழந்தைகள் தங்களின் முழுமையான தன்மையில் வளர்கிறபோது வாழ்வாதாரம் எளிதில் நடைபெறும். ஒரு மண்புழுகூட தனக்குத் தேவையானதைத் தேடிக்கொள்கிறது. அப்படி இருக்கும்போது இந்த உலகில் பரிணாமத்தின் உச்சமான மனிதப் பிறவி, தன் உடலும் மனமும் முழுமையாக வளர்ந்த நிலையில் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இந்த நிலையை எட்ட சம்ஸ்க்ருதியில் இசை, நடனம், தற்காப்புக் கலை, யோகா, சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றுடன், உலகின் எந்தப் பகுதிக்கும் செல்ல வாய்ப்பாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகிறது. வெற்றுப் பொழுதுபோக்காக உந்துதலாகத் திகழும் சில நவீன கலைகளைப் போல் இல்லாமல், மனித குலம் தன் உச்சபட்ச சாத்தியத்தை அடைவதற்கான ஆழமான புரிதலோடும் விழிப்புணர்வோடும் இக்கலைகள் உருவாக்கப்பட்டன.

சம்ஸ்க்ருதியில் சேர, குழந்தைகள் ஆறு முதல் எட்டு வயதுக்குள் வருகிறார்கள். வர்ணாசிரம தர்மம் நடைமுறையில் இருந்தபோது 12 வயது வரையிலான பருவம் பாலவஸ்தா என்றும், 12 முதல் 24 வயது வரையிலான பருவம் பிரம்மச்சர்யா என்றும் அழைக்கப்பட்டது.

இதுபற்றிப் பேசும்போதெல்லாம், மனிதர்கள் குரு-சிஷ்ய உறவு என்ற ஒன்று இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். இது ஒரு தவறான புரிதல் ஆகும். குரு, தன் சீடர்களுடன் எவ்விதமான உறவையும் மேற்கொள்வதில்லை. ஒரு குருவின் பங்கை நீங்கள் உணர வேண்டுமென்றால், உங்கள் வாழ்வில் சூரியனுக்கு இருக்கும் பங்குடன் ஒப்பிடலாம். சூரியன் வெறும் வெளிச்சம் பரப்பி எல்லாவற்றையும் நீங்கள் தெளிவாகக் காணச் செய்கிறது, அவ்வளவுதான்.

இந்தக் குழந்தைகள் உலகில் சென்று செயல்படும்போது, சூட்சுமமாக மாற்றத்தை உருவாக்குவார்கள். ஏனெனில், அபாரமான வலிமையோடும், ஒழுக்கத்தோடும் அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். இத்தகைய முழு வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் குழந்தைகள் மிகப் பெரிய உயரங்களை எட்டுவார்கள்.

நாம் தற்போது ஏற்படுத்தியிருக்கும் இந்தக் கல்வி முறை போல பழங்காலத்தில் இருந்தது என்றாலும், சம்ஸ்க்ருதி என்பது பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பது அல்ல. மனிதர்கள் தங்களைப் பாரம்பரியத்துடன் அடையாளப்படுத்திக் கொள்வதை நான் விரும்பவில்லை. இது மற்றுமொரு தடையாகவே இருக்கும்.

சம்ஸ்க்ருதி என்பது மனித உடலும் மனமும் செயல்படும் விதத்தினை விஞ்ஞான அடிப்படையில் காண்பதாகும். உடலும் மனமும் முழுமையாக மலர பெரிதும் உகந்த வழிவகைகளை வழங்குவதாகும். முந்தைய கல்விமுறையும் மனிதகுல உருவாக்கத்தின் தன்மையிலேயே இருந்தது.

எல்லா குழந்தைகளுக்கும் இந்தக் கல்விமுறை மிகவும் பிடிக்கும். உங்கள் குழந்தை கல்வி முறைக்குள் பொருந்துமா என்கிற கேள்விக்கே இடமில்லை. ஒரு குழந்தை எதற்குள்ளும் பொருந்த வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய இயல்பில் முழுமையாக மலர வேண்டும். அதற்காக, தனக்குத் தோன்றியதையெல்லாம் செய்வதாகப் பொருளல்ல. இது இன்றைய நவீன உலகின் ஓர் அவதானிப்பு. மனிதர்கள், தங்களின் சொந்த நிர்ப்பந்தங்களையெல்லாம் சுதந்திரம் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். மாறாக, சம்ஸ்க்ருதி கல்விமுறையில் ஒரு குழந்தை தன் நிர்ப்பந்தங்களிலிருந்து விடுபட்டு, விழிப்புணர்வு நிலையில் இருந்து செய்யத் தேவையான ஒன்றைச் செய்வதற்குரிய சூழல் உருவாக்கப்படுகிறது.

இந்தியாவில், பொருளாதார மேம்பாடு வளர வளர, பாரம்பரியக் கலைகளைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கும், கலைஞர்களுக்குமான தேவை பெருமளவு அதிகரிக்கும். இப்போதே அதற்கான தேவை தொடங்கிவிட்டது. இன்றைய சூழலில், ஒரு நல்ல இசை ஆசிரியர், ஒரு மருத்துவரைவிட அதிக வருமானம் பெற வாய்ப்புள்ளது. எனவே, சம்ஸ்க்ருதியில் பயிலும் குழந்தைகளின் சம்பாத்தியம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

சிலர், உள்ளூரில், தேசிய அளவில், ஏன் சர்வதேச அளவில் கூட புகழ்பெற்ற கலைஞர்களாக விளங்குவார்கள். இன்னும் சிலர், இசை, நடனம், களரி, சம்ஸ்க்ருதி, யோகா ஆகியவற்றை போதிக்கும் ஆசிரியர்களாக உருவாவார்கள். இப்போதே யோகா ஆசிரியர்களுக்கு பெரும் தேவை இருக்கிறது. ஆறு வயதிலேயே சம்ஸ்க்ருதி குழந்தைகளின் சூழலே யோகக்கலை சார்ந்ததாக இருப்பதால், அவர்கள் வெறுமனே யோகா கற்பவர்களாக இல்லாமல், அந்தச் சூழலுடன் கலந்தவர்களாக இருப்பதால், உலகில் இவ்வளவு ஆழமாக யோகக் கலையில் வேரூன்றிய வேறு ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள்.

யோகக் கலையில் ஆழமாக அமிழ்ந்தால் மட்டுமே கிட்டக்கூடிய தன்மைகள் வாய்த்ததால், போகும் இடமெல்லாம் இந்தக் குழந்தைகள் வெளிப்படுத்தும் யோகக்கலை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில், தொன்மையான யோக மரபுப்படி இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. யோகக் கலைக்கு மட்டுமின்றி ஈஷா சம்ஸ்க்ருதியில் எல்லாக் கலைகளுமே இந்தத் தன்மையில்தான் வழங்கப்படுகிறது. கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், களரி, யோகக்கலை போன்றவற்றை நீங்கள் ஒரு பொழுதுபோக்காக, பகுதி நேரமாகக் கற்றுக்கொள்ள முடியாது. அதிலேயே அமிழ்ந்துவிட வேண்டும்.

ஒரே நேரத்தில் தீவிரமாகவும் சமநிலையோடும் இருக்க முடிந்தால் அங்கே அச்சம் இருக்காது. எவ்விதமான சூழலை எதிர்கொண்டாலும் வாழ்க்கை அழகானதாகவே இருக்கும். இந்நிலையை எட்டிவிட்டால், உங்களைச் சுற்றி நடப்பவை உங்கள் விதியைத் தீர்மானிக்காது. மாறாக, உங்களுக்குள் என்ன நடக்கிறதோ, அதுவே உங்கள் விதியைத் தீர்மானிக்கும்.

அதனால்தான், எல்லா நேரங்களிலும் இந்தக் கலைகளிலேயே அமிழ்ந்திருக்கும் சூழலை இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கியுள்ளோம். அந்தச் சூழலும், கலாச்சாரமும் இல்லாமல் இந்தத் தரத்தை உருவாக்க இயலாது. இந்தக் கலைகளுக்கு பெரும் அர்ப்பணிப்பு உணர்வும் ஈடுபாடும் தேவை. இந்தக் கலைகள் பொழுதுபோக்குக்காகவோ, சண்டைக்காகவோ, சமூகத் தொடர்புக்கோ குழு சேர்க்கவோ அல்ல. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இவற்றை நிகழ்த்த மட்டுமின்றி ரசிப்பதற்குக்கூட ஒருவித புரிதலும் ஞானமும் தேவைப்படுகிறது.

நான் என் வாழ்வில் நீண்ட நேரம் தியானம் செய்யத் தொடங்கியபோது, என் புரிதல் ஆழமாக ஆக, இந்திய பாரம்பரிய இசை எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஈஷா சம்ஸ்க்ருதியிலிருந்து வெளிப்படும் இசை, நடனம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகள் வாழ்வின் ஞானம் குறித்த அறைகூவல்கள். ஏனெனில், இன்றைய நவீன உலகில் ஞானத்திலிருந்து சராசரியை நோக்கிய பயணமாக கல்வி இருக்கிறது. இதை மாற்றியமைக்கும் முயற்சியே சம்ஸ்க்ருதி.

இந்தக் குழந்தைகள் உலகில் சென்று செயல்படும்போது, சூட்சுமமாக மாற்றத்தை உருவாக்குவார்கள். ஏனெனில், அபாரமான வலிமையோடும், ஒழுக்கத்தோடும் அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். இத்தகைய முழு வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் குழந்தைகள் மிகப் பெரிய உயரங்களை எட்டுவார்கள். ஈஷா ஒரு நிறுவனம் என்கிற நிலையிலும், இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் வழியாகவும் அவர்களுக்குத் துணை நிற்கும்.

சம்ஸ்க்ருதி குழந்தைகள் பல வகைகளிலும் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள். உதாரணமாக, 15-18 வயதுக்கு உட்பட்டவர்களில் சிலர் ஈஷா யோகா கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்த, மெத்தப் படித்த பெரியவர்களைவிட சம்ஸ்க்ருதி குழந்தைகளே பயிற்சியில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் இப்போதே தங்கள் தகுதிகளை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அவசரப்படுத்த விருப்பமில்லை. முழுமையாக வளர்ந்த மரத்தில் பூக்களும் கனிகளும் தாமாக வரும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1