உடலை வளைப்பதற்கும் உடல் எடை குறைவதற்கும்தான் ஆசனப்பயிற்சிகள் என்று பலர் தவறாக நினைத்துக்கொண்டிருப்பதை தகர்க்கும் விதமாக இந்த பதிவு அமைகிறது. ஒருவரின் சூட்சும உடலில் ஆசனப்பயிற்சிகள் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதையும், சக்தி உடல் பெரிதாகும்போது ஆசனப் பயிற்சிகள் எப்படி உதவுகின்றன என்பதையும் சத்குரு இங்கே விளக்குகிறார்!

Question: ஈஷாவில் கற்றுத்தரப்படும் அடிப்படை ஹடயோகா நிகழ்ச்சியில், பாரம்பரிய ஆசனங்களான 84 ஆசனங்களில் 21 ஆசனங்களைக் கற்றுத்தருகிறீர்கள். இந்த ஆசனங்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

84 ஆசனங்களையும் ஆரம்பத்திலேயே கற்பது கடினமாக இருக்கும். இந்த 84 ஆசனங்களில், சில ஆசனங்கள் தயார்செய்யும் விதமாக இருக்கும், அதாவது அவை சாதனா பாதையை சேர்ந்தவை. தன்னிலை மாற்றத்திற்கான கருவிகளாக விளங்கும். மற்ற ஆசனங்கள், கைவல்ய பாதையைச் சேர்ந்தவை. இந்த இரண்டு பாதைகளும் வருடத்தின் இருவேறு காலங்களுக்கு பொருந்தும் விதமானவை.

சக்தி உடலை பெரிதாக்குவது

இதை எளிமையாக விளக்கவேண்டும் என்றால், பொருள்நிலையில் உடல் இருக்கிறது, கர்ம உடல் அல்லது மனஉடல் இருக்கிறது, சக்தி உடலும் இருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், இந்த உதாரணம் முழுவதும் பொருந்தாது, இருந்தாலும் விளக்குவதற்காகச் சொல்கிறேன். இந்த மூன்று உடல்களும் ஒன்றிற்குள் ஒன்று பொருத்தப்பட்டிருப்பது போன்றது என்று சொல்லலாம். சக்திஉடலை பெரிய அளவில் பெரிதாக்கினால் - அதைத்தான் நாம் காலப்போக்கில் செய்ய விரும்புகிறோம் - அப்போது மற்ற இரண்டு உடல்களும் அதற்கு இடம் கொடுக்காவிட்டால், ஏதோவொன்று உடைந்துவிடும். அதனால் முதல் படி, உடலில் ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்குவது, இதனை பலவிதங்களில் அணுகமுடியும். பூதசுத்தி பயிற்சி செய்வது ஒரு எளிமையான வழி. பஞ்சபூதங்கள், உடலின் எல்லையைத் தாண்டி எப்போதுமே பரிமாற்றத்தில் இருக்கிறது. நீங்கள் சுவாசிக்கும் காற்றை மட்டுமே நீங்கள் உணர்கிறீர்கள்.

உங்கள் சக்தியை பெரிய அளவில் உயர்த்துவதற்கு முன்பு, தேவையான அளவு தயார்செய்வதும், விரிவடைவதும், கண்ணாடி போல இலகுவாகுவதும் நிகழவேண்டும்.

தொடர்ந்து நிகழும் இந்தப்பரிமாற்றம் எல்லா நிலைகளிலும் நடக்கிறது. வெளியில் தட்பவெப்பம் மாறும்போது உடலின் வெப்பநிலையும் மாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். பஞ்சபூதங்களில் நெருப்புத் தத்துவத்தின் பரிமாற்றத்தை இது காட்டுகிறது. உண்ணும் உணவையும், பருகும் தண்ணீரையும் பொருத்தவரை, நிலம் மற்றும் நீரின் பரிமாற்றத்தை இது காட்டுகிறது. இந்தப்பரிமாற்றம் நீங்கள் கவனிக்கக்கூடிய நிலையில் மட்டுமின்றி, இன்னும் அடிப்படையான நிலையில் நிகழ்கிறது. பஞ்சபூதங்களின் பரிமாணம், நீங்கள் வரைந்திருக்கும் எல்லைக்கோடுகளை மதிப்பதில்லை.

"நான்" என்று நீங்கள் கருதுவதன் எல்லைகள், உடல் மற்றும் மனம் சார்ந்தவை மட்டுமே. பஞ்சபூதங்களின் அளவில் பார்த்தால், எல்லைகள் கிடையாது. யோகா என்றால், தனிமனிதராக உங்கள் எல்லைகளை அழித்துவிடுவது. ஏனென்றால் ஒருமை நிலைதான் உயிர் இருக்கும் இயல்புநிலை. யோகாவின் மூலம், உயிரை அது இருக்கும் நிலையிலேயே உணர விரும்புகிறோம். காற்று எல்லாப்பக்கமும் நகர்ந்து கொண்டிருப்பது போலவே, வெவ்வேறு விதங்களில் மற்ற பஞ்சபூதங்களும் உள்ளன. பஞ்சபூதங்கள் உங்களுக்குள் எந்த விகிதத்தில், எந்த அளவு இருக்கிறது என்பது நாளுக்கு நாள் மாறுபடுகிறது. பரிமாற்றம் எப்போதும் நிகழ்ந்தபடி உள்ளது.

இந்த 84 ஆசனங்களில் பல ஆசனங்கள் உங்கள் சக்தியை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் சக்தியை பெரிய அளவில் உயர்த்துவதற்கு முன்பு, தேவையான அளவு தயார்செய்வதும், விரிவடைவதும், கண்ணாடி போல இலகுவாகுவதும் நிகழவேண்டும். அப்போதுதான் உடலும் மனதும் அதை ஏற்றுக்கொள்ள முடியும். உடலையும், மனதையும் போதுமான அளவு தயார்செய்யாமல் சக்தியை அதிகப்படுத்துவது, ஒரு பலூனால் கொள்ளமுடியாத அளவு காற்றைப் புகுத்துவது போன்றது. முதல் பயிற்சி வரிசை, உங்கள் உடல் மற்றும் மனதின் எல்லைகளை மென்மையாக்கும். அப்போது, "இது நான், அது நீ" என்ற கருத்து நடைமுறை தேவைகளுக்கு மட்டுமே என்ற விழிப்புணர்வு அதிகரிக்கும். இன்னும் அடிப்படையான அளவில், "இது", "அது", இரண்டிற்கும் இடையே எவ்விதமான முழுமுதல் எல்லைக்கோடும் கிடையாது.

குறிப்பு: ஹடயோகா நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களுக்கும் தேதிகளுக்கும் ishayoga.org வலைப்பக்கத்திற்குச் செல்லவும்.