இந்தியாவில், ஞானமடைந்த மனிதர்களை "த்விஜாஸ்" என்றழைப்பார்கள். த்விஜாஸ் என்றால் இருமுறை பிறந்தவர்கள். முதல் பிறப்பு தாயின் கருவிலிருந்து, இரண்டாவது ஞானமடைதல். நாம் அனைவரும் த்விஜாஸாக மலர சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எப்போது ஒருவர் உருவெடுக்கிறார்?

தாயின் கருப்பையிலிருந்து இந்த உடல் வெளிவருவது, பெரிய நிகழ்ச்சி அல்ல. உயிர் கருவாவது தாயிடம். அது உருவாவது இந்த உடலைக் கடக்கும்போதுதான். உங்களை நீங்களே பார்த்து, அறிந்து, உணர்ந்து, அனுபவிப்பதுதான் மிகவும் முக்கியத்துவமானது. உயிர்ப் பூவை மலரவைப்பது. இந்த உடல்தன்மையைக் கடந்து செல்வதுதான் நிச்சயமாக அரிய செயல். பேரின்பத்தின் கதவுகளைத் திறக்கும் சாவி அதுவே!

என் கனவைச் சொல்லவா... ஞானோதயம் அடைந்த மனிதர்கள் அனுதினம் தெருக்களில் தென்பட வேண்டும். அது நாமாக இருக்க வேண்டும். அவர்களைத் தேடி யாரும் இமாலயத்துக்கோ வேறு மலைக் குகைகளுக்கோ போகக் கூடாது. உலகின் உயிரனைத்தும் ஞானத்தின் பெரு வனத்தில் மலர வேண்டும். அப்படி மாறினால், இந்த உலகம் வாழ்வதற்கு ஆகச் சிறந்த உலகமாக இருக்கும்.

அப்போது... அனைவரும் இறைவனே பெருமைகொள்ளும் அற்புதப் பூக்களாய் மலர்வோம்!

Love & Grace