வெறுப்புணர்ச்சியின் உந்துதலில் தீவிரவாதிகளாக மாறியிருப்போரின் பக்கம் தராசுமுள் சாயாமல், அன்புணர்வுடன் இயங்குபவர்களின் பக்கம் சாய்வதற்கு சத்குருவின் ஆசிகள் இங்கே!

சத்குரு:

உலகத்தையே அச்சுறுத்தி வரும் தீவிரவாதிகள் அவ்வப்போது வெளிப்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் நாம் எப்போதும் பார்க்கிறோம். அவர்களுக்கு இருக்கும் திறமை பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளத் தேவையான ஒவ்வொன்றையும் நிச்சயமாக தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களை இயக்கும் சக்தியாக வெறுப்புணர்ச்சி இருக்கிறது. வெறுப்புணர்ச்சி ஒருவருக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டால் பிறகு அவர் இறப்பது பற்றி கவலைப்பட மாட்டார். ஏனெனில் வாழ்வதற்கான ஒரு அழுத்தமான வாய்ப்பை வெறுப்புணர்ச்சி அவர்களுக்குத் தந்திருக்கிறது. தான் ஈடுபட்டுள்ள ஒன்றிற்காக அவர் உயிரையும் விருப்பத்துடன் கொடுப்பார். பொதுவாக இத்தகையை தீவிரம்தான் ஏதோ ஒன்றை சாதிப்பதற்கு உதவும். ஆனால் அவர்களிடம் உள்ள தீவிரம் தற்போது எதிர்மறையாக இருக்கிறது.

தராசுமுள், வெறுப்பின் காரணமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் பக்கம் சாயும்போதெல்லாம் உலக மக்களின் மக்களின் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்குள்ளாகிறது. எனவே அன்புணர்வுடன் இயங்கும் மக்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இந்த உலகம் மிகப்பெரியது. எல்லாவித மக்களையும் தனக்குள் அடக்கியிருக்கிறது. உண்மை என்னவென்றால் எல்லாவித மக்களும் எப்போதும் இருந்தார்கள். இனியும் இருக்கவே செய்வார்கள். எனவே வெறுப்புணர்ச்சியால் இயக்கப்படும் மக்கள் அவ்வளவு திறமையாக இருக்கும்போது, அன்பால் இயக்கப்படும் மக்கள் அதைவிட அதிக திறமையுடன் இருக்க வேண்டும். தராசுமுள், வெறுப்பின் காரணமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் பக்கம் சாயும்போதெல்லாம் உலக மக்களின் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்குள்ளாகிறது. எனவே அன்புணர்வுடன் இயங்கும் மக்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு பல செயல்கள் நடக்க வேண்டியிருக்கிறது. அதற்கான விழிப்புணர்வு உடனே வரவேண்டும். ஈஷாவில் நாம் செய்யும் முயற்சிகள் அனைத்துமே, தராசுமுள் எப்போதும் அன்பால் இயங்குபவர்கள் பக்கம் சாயும்படி பார்த்துக் கொள்வதாகவே இருக்கிறது. ஈஷாவின் இந்த முயற்சியில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை நல்க வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.