தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

கடந்த மூன்று நாட்களாக தரிசனம் கிடைக்காமல் தவித்த பல தியான அன்பர்களுக்கு இன்று மனம் குளிர்ந்தது. ஆம்! இன்று, சத்குரு தீர்த்தகுண்டத்தின் முன் தரிசனம் தந்தார்.

"யோக யோக யோகீஷ்வராய; ... " உச்சாடனையை சத்குரு செய்ய, பின் தொடர்ந்தனர் பங்கேற்பாளர்கள். மூன்று சுற்றுகள் உச்சாடனையின் இறுதியில் சத்குருவின் அருள் அதிர்வுகள் அனைவரையும் ஆட்கொண்டது. அந்த வெடி அனுபவத்தில் பலர் கூச்சலிட்டு, பின் சில கணங்களில் சாந்தமாகினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யக்ஷா, மஹாசிவராத்திரி, சம்யமா

யக்ஷா, மஹாசிவராத்திரி, சம்யமா என தொடர்ந்து நிகழ்வுகள் நிறைந்த இந்த பிப்ரவரி மாதம், ஈஷாவில் தன்னார்வத் தொண்டர்களுக்கு பல செயல்பாடுகள் நிறைந்த மாதமாக மட்டுமல்லாமல், சவால்களும் நிறைந்த மாதமாக இருக்கவிருப்பதைச் சுட்டிக் காட்டிய சத்குரு, நாம் சவால்களை சமாளிக்க வேண்டுமென்றால் நம் உடலையும் மனதையும் கையாளத் தெரிந்திருப்பது அவசியம் என்பதையும் உணர்த்தினார்.

112 அடி ஆதியோகி

வட இந்தியாவில் 112 அடி ஆதியோகி முகத்தை நிறுவி, அங்கே ஒரு ஈஷா யோகா மையத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதை தெரிவித்த சத்குரு, அதற்கான சரியான இடத்தை தேர்ந்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதையும் கூறினார்.

தேவை - யோக ஆசிரியர்களும் யோகிகளும்

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொழிற்நுட்பமும் அறிவியலும் வளர்ச்சியடைந்துள்ள இந்த தருணத்தில், மக்களுக்கு உள்நிலை அனுபவம் மிகவும் முக்கியம் என்பதை எடுத்துரைத்த சத்குரு, உள்நிலையில் வளர்ச்சியற்ற சமுதாயம் விரைவிலேயே அழிவைச் சந்திக்க வாய்ப்புண்டு எனவும் எச்சரித்தார். நிறைய டாக்டர்களையோ இஞ்சினியர்களையோ உருவாக்க நினைப்பதற்கு பதிலாக, நிறைய யோகா ஆசிரியர்களையும் யோகிகளையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு என்பதையும் தெரிவித்த சத்குரு, ஈஷாவில்தான் மற்ற ஆன்மீக இயக்கங்களில் உள்ளவர்களைக் காட்டிலும், உள்நிலை அனுபவத்தை பெற்றவர்கள் அதிகம் உள்ளனர் என்பதைத் தெரிவித்தார்.

கேட்கப்பட்ட ஒரு கேள்வி

உங்கள் வார்த்தை அற்புதமாக உள்ளது. இதைப் பரவச் செய்ய நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்வியை நார்வே நாட்டுக்காரர் ஒருவர் கேட்ட்டபோது,

"நீங்கள் வார்த்தையைப் பரப்ப நினைப்பதற்குப் பதிலாக அந்த வார்த்தை அனுபவமாக நீங்களே மாற வேண்டும்" என்று பதிலளித்த சத்குரு, இப்போதுள்ள தொழிற்நுட்ப வளர்ச்சியில் நாம் நமது வார்த்தைகளைப் பரப்புவது மிகவும் எளிதாகி உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

"புத்தரைப் போல், மற்ற யோகிகளைப் போல் கிராமம் கிராமமாக திரிய வேண்டிய சூழல் இப்போது இல்லை. நாம் இப்போது மக்களின் வீட்டுக் கணினி திரைகளில் தோன்றி, நேரடியாக இந்த தரிசனத்தை வழங்க முடியும். எனவே இந்த தொழிற்நுட்பத்தை இன்னும் நன்றாகப் பயன்படுத்தி, இதைச் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்." இப்படி தன் பதிலை வழங்கி, ஆசியும் வழங்கி விடைபெற்றார் சத்குரு.

மீண்டும் விரைவில் குருவின் தரிசனத்தில் இணைவோம்!