தியானலிங்கம் - ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசம நிலையில்
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஆண்தன்மையையும் பெண்தன்மையையும் விளக்கி, அவ்விரண்டையும் சமநிலையாக வைத்திருப்பதன் அவசியத்தையும் சத்குரு விளக்குகிறார். அதோடு தியானலிங்கம் அதன் இயல்பினாலேயே, ஒருவருக்குள் உள்ள இவ்விரு தன்மைகளையும் சமன்படுத்துவதையும் எடுத்துரைக்கிறார்.
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஆண்தன்மையையும் பெண்தன்மையையும் விளக்கி, அவ்விரண்டையும் சமநிலையாக வைத்திருப்பதன் அவசியத்தையும் சத்குரு விளக்குகிறார். அதோடு தியானலிங்கம் அதன் இயல்பினாலேயே, ஒருவருக்குள் உள்ள இவ்விரு தன்மைகளையும் சமன்படுத்துவதையும் எடுத்துரைக்கிறார்.
சத்குரு:
சந்திரன் வளர்வதும் தேய்வதும் தான் வித்தியாசம் - அதுதான் நிகழ்கிறது. ஒன்றில் சந்திரனின் தாக்கம் தேய்கிறது, இன்னொன்றில் வளர்கிறது. சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் மட்டுமேதான் உங்களுக்கு சந்திரனைத் தெரியும். சூரியன் எரிவதால் உங்களுக்கு சூரியனைத் தெரியும். சந்திரனோ குளுமையானது. அல்லது ஒருவிதத்தில் பார்த்தால், நம் அனுபவத்தில் சந்திரன் என்பது சூரியனிலிருந்து தோன்றியது. நம் அனுபவத்தில் மட்டுமல்ல, அறிவியல் ஆராய்ச்சிகள் சில, சூரியனிலிருந்து தெரித்துச் சுழன்ற பகுதிகளே கோள்களாகவும் அவற்றின் நிலாக்களாகவும் மாறின என்கிறார்கள். ஒரு சிறு துளி சந்திரனானது. மனித புரிதலுக்காக, எல்லாவற்றையும் இருமுனை கொண்டதாக நாம் விவரிக்கிறோம், ஏனென்றால் பொருள்தன்மைக்கு இருமுனை சார்ந்த போக்குகள் உண்டு.
சூரியனும் சந்திரனும் ஆண்தன்மையையும் பெண்தன்மையையும் குறிக்கின்றன
தியானலிங்கத்தின் உள்பரிகார நுழைவாயில்
சொல்லப்போனால், இந்தியாவில் மரங்களில்கூட சில மரங்களை ஆண் மரங்களாகவும் சில மரங்களை பெண் மரங்களாகவும் அடையாளம் கண்டனர். கிராமங்களில் மரங்களுக்குக் கல்யாணம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? கிராமங்களில், இளம் பெண்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி இம்மரங்களை வழிபடுவர். இரண்டு மரங்களுக்குக் கல்யாணம் என்றால் கிராமத்தில் மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும். கிராமம் முழுவதும் இத்திருமணத்தில் கலந்துகொள்ளும். மக்கள் ஒரு மரத்தை ஆண்தன்மை கொண்டது என்றும், ஒன்றை பெண்தன்மை கொண்டது என்றும் கண்டதற்குக் காரணம், அத்தன்மைகள் நோக்கிய சாய்வை அம்மரங்களில் அவர்கள் கண்டார்கள்.
Subscribe
ஒரு சந்நியாசி தியானலிங்கத்திற்கு மலர்மாலை எடுத்துவருகிறார்
சின்னஞ்சிறு விஷயங்களுக்கும் கவனம்
அதேபோல, சூரியனைக் கண்டபோது அதை ஆண்தன்மை என்று கண்டனர். சந்திரனை பெண்தன்மை என்று கண்டனர். இது கிராமத்து மனதின் தவறான புரிதலல்ல. இதுதான் உண்மை. அவர்கள் தவறாகப் புரிந்திருந்தால், பெண் உடலின் சுழற்சி சந்திரனின் சுழற்சியோடு ஒத்திசைவாக இருந்திருக்காது. பல விதங்களில் சந்திரன் பெண்தன்மையைக் குறிக்கிறது. நீங்கள் ஆணாக இருந்தால், உங்கள் பிரச்சனை, பெண்ணை நோக்கிப் பார்ப்பதாக இருக்கிறது. நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் பிரச்சனை, ஆணை நோக்கிப் பார்ப்பதாக இருக்கிறது. ஏனென்றால் ஏதோவொரு விதத்தில் அது உங்களிடம் இல்லாதிருக்கிறது. அதனால் நீங்கள் ஆணாக இருந்தால், உங்களுக்குள் பெண்தன்மை மேலெழ விரும்புகிறோம். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்களுக்குள் ஆண்தன்மை மேலெழ விரும்புகிறோம். இது இயற்கையை சிதைப்பதற்காக அல்ல, இயற்கையை சமன்படுத்துவதற்காக இது.
தியானலிங்கத்திற்கு அர்ப்பணமாக மலர் அலங்காரம்.
ஆதியோகி சிவனை நாம் முழுமையான ஆண் என்று கூறுவதற்குக் காரணம், அவன் ஆண்மையின் உச்சம் என்பதால் அல்ல - அவன் ஆண்மையின் உச்சமாகவும் இருக்கிறான் - ஆனால் அவன் முழுமையான ஆணாக இருப்பது அவனின் ஒருபாதி பெண்ணாக இருப்பதால்தான். அதனால் இங்கு நடக்கும் முயற்சியே, ஆண்தன்மையையும் பெண்தன்மையையும் சரிவிகிதத்தில் சுமந்திருக்கும் முழுமையான மனிதராக உங்களை மாற்றுவதுதான். அப்போது உங்களால் வாழ்க்கையை சமநிலையாக நடத்தமுடியும், ஏனென்றால் இவ்விரு அம்சங்களும் உங்களுக்குள் சமமாக இருக்கும். நீங்கள் ஆண்தன்மையாக இருந்தால் பெண்தன்மை இல்லாதிருக்கிறீர்கள், பெண்தன்மையாக இருந்தால் ஆண்தன்மை இல்லாதிருக்கிறீர்கள். ஒன்று இல்லாததால், மனிதர்கள் வேதனைப்படும் விதங்கள்தான் எத்தனை எத்தனை!
தியானலிங்கத்தில் விபூதி
தியானலிங்கத்திற்கு வருகைதரும் பக்தர்களை வரவேற்கும்போது
தியானலிங்கத்தில் இதை உருவாக்குவதன் நோக்கமே - இது குறிப்பிட்ட அந்த பதினைந்து நாட்களில் மட்டுமல்ல, அது அப்படித்தான் நிலைநாட்டப்பட்டுள்ளது - அதன் இருப்பில் நீங்கள் இருந்தால், மெதுமெதுவாக, நீங்கள் தன்னளவிலேயே முழுமையாக உணர்வீர்கள். ஒரு பெண்ணைப் பார்த்தால், உலகில் வேறு எதையும் பார்ப்பதைப் போல உங்களால் அவளைப் பார்க்கமுடியும். குழந்தையாக இருந்தபோது அப்படித்தானே பார்த்தீர்கள். உங்களுக்குள் ரசாயனங்களின் விஷம் ஊறியதும், இன்னொரு மனிதரை சகமனிதராகப் பார்க்கும் திறனை இழந்தீர்கள். உடலின் சிறு மேடுபள்ளங்கள், பெரும் உலகமாக மாறியது. நீங்கள் அவற்றை சிதைத்ததால், சின்னச்சின்ன விஷயங்கள் பெரிதாகின. அந்த சிதைவுகளை சீர்செய்வதற்காகவே இது. இது மிகப்பெரிய சக்திவெளியாக இருப்பதால், இதில் பெண்தன்மை மிகவும் அதிகமானாலோ, ஆண்தன்மை மிகவும் அதிகமானாலோ, மனிதர்களை வேறு திசைகளில் கொண்டுசென்றுவிடும். மனிதர்களை இப்படி அதிகப்படியான ஆண்தன்மை, அல்லது அதிகப்படியான பெண்தன்மை நோக்கி கொண்டுசென்றால், அது குறிப்பிட்ட சில வேலைகளுக்கு உதவியாக இருக்கலாம், ஆனால் சமநிலையான வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது.
மஹாசிவராத்திரியில் நிகழ்ந்த பஞ்சபூத ஆராதனையின்போது சத்குரு
தியானலிங்கம் எல்லோருக்குமானது. இங்கு நிகழும் செயல்முறைகள் அனைவருக்கும் திறந்திருக்கிறது. இதனால்தான் இது இப்படி பராமரிக்கப்படுகிறது. இவர்கள் மூன்று, நான்கு, அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் லிங்கார்ப்பணம் செய்கிறார்கள். அவர்கள் அப்போது எப்படி உணர்ந்தார்கள் என்ற பல பகிர்வுகள் படித்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான அனுபவங்கள், இதுவரை அவர்கள் உணராதவற்றை உணரச் செய்துள்ளது. இது அவர்களுக்கு வேறெங்கும் நடந்திருக்க வழியேயில்லை. அவர்களுக்கு ஒரு நிலையில் என்ன நடந்ததென்றால், அவர்களுக்குள் இருந்த ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசமமாகிவிட்டது. அது சரிசமமாக இருந்து, அதை நீங்கள் அப்படியே வைத்திருந்தால், ஆண்தன்மையையும் பெண்தன்மையையும் சரிவிகிதத்தில் வைத்திருந்தால் மட்டுமே, இவ்விரண்டும் முழுவீச்சில் இயங்கத் தேவையான உறுதி வரும். இரண்டும் முழுவீச்சில் இருந்தால், அப்போது மட்டும்தான் நீங்கள் முழுமையான உயிராக இருப்பீர்கள். நீங்கள் முழுவீச்சில் இருக்கும் உயிராக இருந்தால், திடீரென உங்கள் மன செயல்முறையும், உணர்ச்சி செயல்முறையும், உங்களைச் சுற்றி நிகழும் சமுதாய செயல்முறையும் அர்த்தமற்றுப் போவதை கவனிப்பீர்கள், ஏனென்றால் அவை வாழ்க்கையின் உபகரணங்கள் மட்டுமே. மனிதர்கள் முழுவீச்சில் இல்லாதபோதுதான் அவர்களுக்கு இந்த உபகரணங்கள் தேவைப்படும். ஊன்றுகோல் ஊன்றி நடக்கும் ஒரு மனிதரைக் கண்டு, "அவருக்கு நான்கு கால்கள் இருக்கிறது, எனக்கு இரண்டுதான் இருக்கிறது" என்று நீங்கள் ஒருபோதும் பொறாமைப்பட்டது கிடையாது. அவரிடம் தங்கத்தால் ஆன ஊன்றுகோல் இருந்தால் நீங்கள் பொறாமைப்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் இவ்விரண்டு தன்மைகளும் சரிசமமாக ஆகிவிட்டால், இந்த உயிர் முழுவீச்சில் இயங்கும். இந்த உயிர் முழுவீச்சில் இருந்தால், யாரிடம் என்ன இருக்கிறது என்பது உங்கள் கவனத்திற்கே வராது, ஏனென்றால் உயிருடன் இருப்பதே வேறெதையும்விட மேலானது.
தியானலிங்கத்திற்கு அர்ப்பணிப்பாக தீபங்கள் ஏற்றும்போது
தியானலிங்கத்தின் ஆவுடையாரை அலங்கரிக்கும்போது