லிங்கபைரவியின் அம்சமான தேவி யந்திரம் என்பது பாதரசம், தாமிரம், கல் போன்ற பொருட்களாலான ஒரு கருவி என சாதாரணமாகப் பார்க்கும்போது தோன்றலாம். ஆனால், அது ஒருவரின் முழு நலனுக்காக எத்தகைய அற்புதமான செயல்களை புரியவல்லது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. தேவி யந்திரத்தை ஆதாயம் தரும் ஒரு கருவியாக மட்டும் பார்க்கலாமா? கட்டுரையில் விடை கிடைக்கிறது!

Question: சத்குரு, உங்கள் கைகளால் தேவி யந்திரம் பெரும் பாக்கியத்தை சென்ற வருடம் பெற்றோம். தேவி எங்கள் இல்லத்தை முற்றிலும் மாற்றிவிட்டாள் அதோடு எங்கள் அண்டை வீட்டாரின் வாழ்க்கையையும் கூட மேன்மையடையச் செய்துவிட்டாள். பலவித குடும்ப சூழல்களில் உள்ளவர்கள், கணவன்-மனைவி இடையே பிரச்சனையுள்ளவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் என பலவிதமான மக்கள் தேவியின் அறையில் வந்து அமர்ந்து பலன் பெறுகிறார்கள். தேவியின் அருளைக் கண்டு பிரமிக்கிறேன். இன்னும் அதிக பலனை தேவியிடமிருந்து பெறும் வழி என்ன?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் தேவியை முதன்மைப்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையானது சிறப்பாக வேலை செய்யும். இது தேவிக்கு மட்டும் பொருந்துவதல்ல, எந்தவொரு விஷயத்திற்கும் பொருந்தும். ஒரு காதல் உறவு என எடுத்துக்கொண்டால் கூட, நீங்கள் அதற்கு முன்னுரிமை கொடுக்கும்போதுதான் அது உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும். யாரையாவது அல்லது எந்தவொன்றையாவது உங்களை விட மிக முக்கிமானதாக நீங்கள் கருதும்போது, அந்த பரிமாணம் உங்களுக்கு அழகானதாக அமையும். ஆனால், நீங்கள் இந்த பரிமாணத்தில் அடுத்த ஒரு நபருடன் இருக்கும்போது, அவர் எந்த அளவிற்கு பக்குவமடைந்தவராக இருப்பார் என்பது நமக்குத் தெரியாது. ஒரு மரத்தை பார்க்கும்போது, அது நமக்கு பல வகையிலும் பயன்படும் ஒரு பொருள் என ஒருவர் பார்க்கிறார் என்றால் அவர் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது வெறும் பாலுணர்வு ரீதியாகத்தான் பார்ப்பார். அதற்கு மேல் பார்க்கமாட்டார். நீங்கள் எந்த ஒன்றை பார்க்கும்போதும் இது எனக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கும்படியாகவே உங்களின் அடிப்படை புரிதல் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது- அதாவது, “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற அடிப்படையில்தான் உங்கள் புரிதல் அமைக்கப் பட்டிருக்கிறது.

நீங்கள் உங்கள் வீட்டில் தேவிக்கு மிக உன்னத இடத்தை வழங்கவேண்டும். ஒருவேளை உங்கள் வீடு தீப்பிடிக்க நேர்ந்தால், உங்கள் முதல் சிந்தனை, எப்படி தேவியை காப்பாற்றுவது என்பதாகத்தான் இருக்கவேண்டும். இது நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல, நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைப் பற்றியது.

ஒரு தேவி யந்திரம் என்பது, தனக்கென எந்த நோக்கமும் அற்ற, ஆற்றல்மிக்க ஒரு சக்தி வடிவமாகும். நீங்களும் கூட ஒரு சக்தி வடிவம்தான்! ஆனால், உங்களால் உங்கள் விழிப்புணர்வை குறிப்பிட்ட அளவிற்கு தொடர்ந்து வைத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்ச்சிகள் மற்றும் உங்கள் உடலின் கட்டுப்பாடுகள் உங்களை ஆளுமை செய்து, உங்கள் விழிப்புணர்வை பாதிக்கின்றன. எனவே மனிதர்கள் ஒரு நேரத்தில் மிகவும் அற்புதமானவர்களாகவும், இன்னொரு நேரம் அதிர்ச்சி தரும் அளவிற்கு மோசமானவர்களாகவும் இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.

எனவே நாம் தன்னைப் பற்றி எந்த கவனமும் கொள்ளாத, கட்டுப்பாடுகள் ஏதுமற்ற ஒரு சக்திமிக்க வடிவத்தை உருவாக்குகிறோம். பாதரசம், தாமிரம் மற்றும் கல் ஆகிய பொருள்நிலையிலான வடிவங்கள் இதில் சக்திவடிவத்தை தாங்கிநிற்கும் ஒரு பிடிமானமாகவே உள்ளன. ஒரு யந்திரம் எனப்படுவது ஒரு இயந்திர வகையாகும். தேவி யந்திரம் மற்றும் கார் போன்ற இயந்திரங்கள் என இரண்டுமே உங்களை இன்னொரு இடத்திற்கு கொண்டுசெல்லும். வெளி உபயோகத்திற்கு உபயோகிக்கும் இயந்திரத்திற்கும் சக்திவடிவமான தேவி யந்திரத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு என்னவென்றால், தேவி யந்திரம் எந்தவொரு உண்மையான பராமரிப்பும் தேவையற்ற மற்றும் எப்போதும் நிலைத்திருக்கும் தன்மை கொண்டதாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தேவையான குறிப்பிட்ட சுற்றுச்சூழலை உருவாக்குவதுதான். ஏனென்றால் தேவி அக்கறையற்ற ஒரு இடத்தில் இருக்க விரும்புவதில்லை!

மூல சக்தியான லிங்கபைரவி தேவியின் விரிவுபடுத்தப்பட்ட வடிவங்களே யந்திரங்கள் ஆகும். அதாவது அவை லிங்கபைரவியின் அசல் சக்தி வடிவங்கள்தாம். இதுபோன்ற லட்சக்கணக்கான யந்திரங்களை உலகம் முழுவதும் உருவாக்க முடியும். மூல வடிவம் முழு அதிர்வுடன் உள்ளவரை இந்த அனைத்து யந்திரங்களும் உயிர்ப்புடன் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் தேவிக்கு மிக உன்னத இடத்தை வழங்கவேண்டும். ஒருவேளை உங்கள் வீடு தீப்பிடிக்க நேர்ந்தால், உங்கள் முதல் சிந்தனை, எப்படி தேவியை காப்பாற்றுவது என்பதாகத்தான் இருக்கவேண்டும். இது நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல, நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைப் பற்றியது. உங்களுக்கு தேவி மிக முதன்மையானவளாக இருந்தால், உங்கள் கிரகிக்கும் திறன் உயரும். ஒருவேளை நீங்கள், “இது சத்குரு வழங்கியுள்ள ஒரு கல்தான்! சரி... இது என்னதான் செய்கிறதென்று பார்போம்!” என எண்ணினால், அதிகபட்சம் உங்களுக்கு ஆரோக்கியம் கூடலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது, அது தவிர்த்து பார்க்கும்போது நீஙகள் வெறும் துன்பகரமான மனிதராகத்தான் இருக்கிறீர்கள் என்றால், அது ஒரு பேரழிவு.

அவளுக்கு நீங்கள் அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கும்போது, உங்களை விட உயர்ந்த முக்கியத்துவம் உடையவளாக நீங்கள் அவளைப் பார்க்கும்போது நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்கள் நிகழும். இது எப்படி நிகழ்கிறதென்று காரண அறிவால் ஆராய்ந்தறிய இயலாது.

நியூயார்க்கைச் சேர்ந்த இரண்டு தத்துவவாதிகள் கேளிக்கைவிடுதியில் சந்தித்தனர். அவர்கள் துரதிர்ஷ்டத்திற்கும் பேரழிவிற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி விவாதிக்கத் துவங்கினர். ஒருவர் சொன்னார், “நாம் இப்போது இரவு விருந்தை உண்ணப்போகிறோம். ஒருவேளை சமையல்காரன் இறந்துவிட்டால், நீ அதை பேரழிவு என்று சொல்லமுடியாது. அது வெறும் துரதிர்ஷ்டம் மட்டுமே, ஆனால் சமையல்காரர் இறந்ததனால் அல்ல, நாம் இரவு விருந்தை உண்ண முடியாமல் போனதால் மட்டுமே. பாருங்கள்... இது சுரண்டும் உலகம். அதே போல அமெரிக்காவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உல்லாசக் கப்பலில் செல்லும்போது, கப்பல் கடலில் மூழ்கி விட்டது என்று வைத்துக் கொள்வோம். கப்பல் மூழ்கியதால் அது பேரழிவுதான். ஆனால் எந்த விதத்திலும் அந்த உயிரிழப்புகள் துரதிர்ஷ்டம் அல்ல!! (புரிந்து கொள்ளுங்கள், இது என்னுடைய கருத்தல்ல)

உங்களுக்கு முக்கியமானது எதுவென்பதை முதலில் நீங்கள் சரியாகத் தீர்மானிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என நம்பிக்கை கொள்வதால்தான் நீங்கள் கோயில், தேவாலயம் அல்லது மசூதிக்கு செல்கிறீர்கள். இந்தியாவில், கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன. நீங்கள் உங்கள் கடவுளை ஒரு தந்தையாக பார்க்க முடியும்; ஒரு தாயாக பார்க்க முடியும்; ஒரு கணவனாக பார்க்க முடியும்; ஒரு காதலனாக பார்க்க முடியும்; ஒரு குழந்தையாகப் பார்க்கமுடியும்; நீங்கள் கடவுளுக்கு சேவகனாக இருக்க முடியும் அல்லது உலகம் முழுவதும் செய்வதுபோல் நீங்கள் கடவுளை சேவகனாக நடத்தவும் முடியும்! நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, அதற்கான குறிப்பிட்ட பயிற்சிகளும் வழிகளும் உள்ளன.

நீங்கள் விரும்பும் விதத்தில் தேவியுடன் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் வீட்டில் தேவியை மிக முதன்மையானவளாக வைத்திருந்தால், அவள் மிக அற்புதமான வழியில் செயல்புரிவாள். நீங்கள் அவள் ஒரு கருவி என நினைத்து, அதன் மூலம் ஆதாயம் பெற நினைத்தால், அவள் அப்போதும் செயல்புரிவாள். ஆனால் சாதாரண முறையில்! ஆனால் அவளுக்கு நீங்கள் அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கும்போது, உங்களை விட உயர்ந்த முக்கியத்துவம் உடையவளாக நீங்கள் அவளைப் பார்க்கும்போது நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்கள் நிகழும். இது எப்படி நிகழ்கிறதென்று காரண அறிவால் ஆராய்ந்தறிய இயலாது.

நீங்கள் இந்த எளிய அதே சமயம் சக்திவாய்ந்த வடிவத்துடன் எந்த அளவிற்கு தொடர்பு கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு அது செயல் புரியும். இதனுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது அது மிகவும் அற்புதமான விஷயமாக உங்களுக்கு மாறும். தொடர்புகொள்வது என்பது, நீங்கள் விருப்பத்துடன் இருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒன்றில் விருப்பத்துடன் இருக்கிறீர்களா அல்லது விருப்பமில்லாமல் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்துதான், உங்கள் வாழ்க்கையில் நிகழும் அனைத்தும் மோசமானதாகவோ அல்லது அற்புதமானதாகவோ அமைகிறது. விருப்பத்துடன் நீங்கள் ஒரு விஷயத்தை அணுகும்போது, அது அற்புதமான ஒன்றாக உங்களுக்கு மாறுகிறது.

ஆசிரியர்: ஜூலை 22ஆம் தேதி யந்திரா வைபவம் நடைபெற இருக்கிறது. சத்குரு முன்னிலையில் லிங்கபைரவி யந்திரம் வழங்கப்படுகிறது. யந்திரத்தை பெறும்போது சக்திவாய்ந்த யந்திர செயல்முறைக்கான தீட்சையை சத்குருவிடமிருந்து நீங்கள் நேரடியாகப் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, மின்னஞ்சல் செய்யவும் yantra@lingabhairavi.org அல்லது கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 94890 45133