கிருஷ்ணனை கணவனாக ஏற்றுக்கொண்ட மீராபாய்

சத்குரு:

மனிதர்கள் பரவலாக, உடல், மனம் மற்றும் அதிக அளவு உணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலான மக்கள் தங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சியை ஈடுபடுத்தாமல் எதிலும் ஈடுபாட்டோடு இருக்கமாட்டார்கள். திருமணம் என்பது இதையே குறிக்கிறது. உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் அனைத்தும் ஒருவருக்காகவே என்றிருத்தல். இதைப்போல இன்றும் பல சாரார் கன்னியாஸ்திரிகள் ஆவதற்கு முன் ஏசுவை திருமணம் செய்துகொள்கிறார்கள். இது முற்றிலும், உடல், மனம், உணர்ச்சி தாண்டி வேறு ஒரு நிலைக்கு எடுத்து செல்லப்பட்டது. சிலருக்கு இது கற்பனை தாண்டிய உண்மையானது. அந்த விதத்தில் கிருஷ்ணனை தன் கணவனாகவே ஏற்றுக்கொண்டவர்தான் மீராபாய்.

அவள் கிருஷ்ணன் மேல் பித்து பிடித்தவளாக இருந்தாள். அவள் தன் மனதில் கிருஷ்ணனை 8 வயதிலேயே மணமுடித்திருந்தாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கிருஷ்ணன், Krishna

அவள் கிருஷ்ணன் மேல் பித்து பிடித்தவளாக இருந்தாள். அவள் தன் மனதில் கிருஷ்ணனை 8 வயதிலேயே மணமுடித்திருந்தாள். அவளது மனம் மற்றும் எண்ணத்துடைய தீவிரத்தின் காரணமாக, கிருஷ்ணன் அவளுக்கு நிஜமானான். அது வெறும் கற்பனை அல்ல, அவன் அவளுடன் நடந்தான், உட்கார்ந்தான்.

மீராபாய்க்கு கிடைத்த மரண தண்டனை

மீராவின் கணவன் ஒரு அரசன், அவனுக்கு இது கடினமாக இருந்தது. அவள் தன் தெய்வீக காதலனுடனே வாழ்ந்தாள். அவள் கிருஷ்ணனுடன் பாலியல் செயலிலும் கூட ஈடுபட்டாள். அவளது கணவனான அரசன், எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தார். ஏனென்றால் அவர் மீராவைக் காதலித்தார். ஆனால் அவளுக்கு என்ன ஆகிறது என்று அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஏனென்றால், அவள் செய்வதும், நடப்பதும் மிகவும் நிஜமாக தெரிந்தாலும், அவருடைய பார்வைக்கு அது தென்படவில்லை. அவர் மிகவும் அவநம்பிக்கை அடைந்தார். ஒருநாள் அவர் தன்மேல் நீல வண்ணம் பூசிக்கொண்டு, கிருஷ்ணரைப் போல உடையணிந்து வந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் தவறான சாயத்தைப் பயன்படுத்தினார். அதனால் அவருக்கு மோசமான ஒவ்வாமை ஏற்பட்டது; அவரது உடல் முழுவதும் சொறி வந்துவிட்டது.

மீராவைச் சுற்றி இருந்த மக்கள் குழப்பத்திலேயே இருந்தனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு சமயம் அவளின் தீவிரம் உச்சத்தை அடைந்தது. அப்போது அவள் அசாதாரணமானவள் என மக்கள் உணர்ந்தார்கள். வேறு எவரும் செய்ய முடியாதவைகளை அவள் செய்ததனால், அதன்பின் மக்கள் அவளை அசாதாரணமானவளாக கண்டுகொண்டனர். பெரிய கூட்டம் கூடியது. அவளின் கணவன் இறந்தவுடன், அவளை விபச்சாரி என்று குற்றம் சாட்டினர். அதற்கான தண்டனை மரண தண்டனை ஆகும். அரச சபையில் அவளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. அவள் கிருஷ்ணா என்று சொல்லி அதை குடித்துவிட்டு நடந்தாள். மக்கள் அவள் சாவாள் என்று நினைத்தனர். ஆனால் அவளோ மேலும் ஒளிகூடி மலர்ந்தாள். இதைப்போல பல சூழ்நிலைகள் நடந்துள்ளன. பக்தி என்பது 'நான்' என்ற தன்மை இல்லாமல் போவது.

பக்திக்கும் காதலுக்குமான வித்தியாசம்

பக்தி என்பது ஒரு காதல் உறவு இல்லை. காதல் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் தான், ஆனால் அதில் சிறிதளவு அறிவு ஒட்டிக்கொண்டுள்ளது. நீங்கள் அதிலிருந்து மீள முடியும். பக்தியிலிருந்து மீள முடியாது. நான் பக்தி என்று சொல்லும்போது, நம்பிக்கையைக் குறிப்பிடவில்லை. நம்பிக்கை ஒழுக்கநெறி போன்றது. சிலர் முட்டாள்தனத்தை நம்புபவர்கள்; தாங்கள் பிறரை விட உயர்ந்தவர்கள் என எண்ணுவார்கள். நீங்கள் ஏதோ ஒன்றின்மேல் நம்பிக்கை வைத்த கணத்திலிருந்தே, நீங்கள் எந்த விதத்திலும் சிறப்பாக ஆகமாட்டீட்கள், உங்கள் முட்டாள்தனம் மேலும் வலுப்பெறும். நான் சமய நம்பிக்கையைப் பற்றி பேசவில்லை. நம்பிக்கை என்ற தன்மைக்குள் நுழைவதைப் பற்றி பேசுகிறேன்.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. "நான் எப்படி நம்புவது?" நீங்கள் இப்பூவுலகில் சௌகரியமாய் உட்கார்ந்திருப்பதே நம்பிக்கையால் தான். ஏனென்றால், இந்த பூமி பிளந்து, மனிதர்களை விழுங்கியிருப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆகாயத்தின் ஒரு பகுதி கீழே விழுந்து மக்களை கொன்றிருக்கிறது. இந்த வட்டமான கிரகம் அசுர வேகத்தில் சுழன்று பயணிக்கிறது. முழு சூரிய குடும்பமும், விண்மீன் மண்டலமும் என்ன வேகத்தில் பயணிக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. நமது பூமித்தாய் திடீரென்று எதிர்திசையில் சுழலத் தொடங்குகிறாள் என்று வைத்துக்கொள்வோம், ஒருவேளை நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து பறந்துவிடலாம் - உங்களுக்குத் தெரியாது.

நீங்கள் உட்கார்ந்து, புன்னகைக்க, கேட்க மற்றும் யாரிடமாவது பேசுவதற்கு, உங்களுக்கு நம்பிக்கை தேவை - மகத்தான நம்பிக்கை தேவை, இல்லையா? ஆனால் நீங்கள் அதை விழிப்புணர்வில்லாமல், அன்பில்லாமல் செய்கிறீர்கள். இந்த நம்பிக்கையை விழிப்புணர்வாகவும், அன்பாகவும் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் பக்தி. நீங்கள் இங்கே உட்கார்ந்து, விழிப்புணர்வுடன், அன்புடன், பிரபஞ்சத்தை அப்படியே நம்பி இருக்கக் கற்றுக்கொண்டால் அதுதான் பக்தி. பக்தி என்பது ஒரு நம்பிக்கை முறை அல்ல. பக்தி என்பது வாழ்வதற்கான இனிமையான வழி.

Meera Bai image from Wikimedia