4000 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கிரேக்க வரலாற்று நிகழ்வு, ஒரு ஞானியின் தீர்க்க தரிசனத்தால் வெளிப்படும்போது அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்?! அதிலும் கிரேக்க நாட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி கோயிலைப் பற்றியதாக அது இருந்தால்... ஆம், இந்தப் பதிவு ஒரு அற்புத கிரேக்க வரலாற்றை சத்குருவின் தீர்க்க தரிசனத்தின் மூலம் பறைசாற்றுகிறது. தொடர்ந்து படியுங்கள்!

சத்குரு:

மண்ணுலக கருவூலம்

இத்தாலி நாட்டில் உள்ள கிரேக்க மாநகரில், மலைகளின் நடுவே அமைந்திருக்கும் ‘டெல்ஃபி’யைத்தான் மண்ணுலகக் கருவூலம் என்னும் அடைமொழி கொண்டு ஐரோப்பியர்கள் கொண்டாடினார்கள். இந்தப் புனிதத் தலத்தை பல நூற்றாண்டுகளாக ஒரு நாகம் பாதுகாத்திருந்ததாகவும், அதை கிரேக்கக் கடவுள் ‘அப்போலோ’ வென்று அவ்விடத்தை தமது உரைவிடமாக்கிக் கொண்டார் என்பதும் புராணக் கதை. இன்று இவ்விடம் தொல்பொருள் ஆராய்ச்சித் தளமாக இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒரே உருவில் எல்லா சக்தி சக்கரங்களையும் அது மூன்றோ, ஏழோ அமைப்பது கொஞ்சம் கடினமான வேலை. ஆனால் அவற்றை இப்படித் தனித்தனியாக அமைப்பது சற்று சுலபம்.

இவ்விடம் 15 ஆண்டுகளாக தம்மை ஈர்த்ததாகவும், இவ்விடத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான தொடர்பும், இறைமறை ஞானமும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும், இத்தனை நிலநடுக்கங்கள், இயற்கை சீற்றங்களுக்குப் பின்னும் கூட அழிவில்லா வண்ணம் அதே வீரியத்துடன் உறுதியாக இருக்கிறது என்கிறார் சத்குரு.

கடந்த வருடம் டெல்ஃபி சென்றிருந்த சத்குரு, அவ்விடத்தை பார்த்தவாறு நம்முடன் சில விஷயங்களைப் பேசினார்...

“4000 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோவில் யோக மற்றும் தாந்திரீக கலாச்சாரத்தின் அடிப்படையோடு மிகக் கச்சிதமாக கட்டப்பட்டிருக்கிறது.

மிக மிக சக்தி வாய்ந்த ஒன்று பற்பல ஆண்டுகளுக்கு முன் இங்கே வீற்றிருந்தது. இன்றும் இவ்விடம் அதன் சக்தியில் திளைத்திருக்கிறது.” (நாகேந்திர ஹாராய நமச்சிவாய... பாடலைப் பாடுகிறார். பாடி முடித்த பின்...) “இதை இங்கு உச்சரித்த முதல் ஆள் நான் அல்ல...” (அங்கிருக்கும் சிதைந்த கட்டிட அமைப்புகளை பார்வையிட்ட சத்குரு, அந்தக் கோவில் கட்டப்பட்டபோது எப்படி இருந்திருக்க வேண்டும் என்று விவரிக்கத் துவங்குகிறார்.)

மூன்று சக்கரங்களால் ஆன அமைப்பு

“இது மூன்று சக்தி சக்கரங்களைக் கொண்டது. ஒன்று நாபி, அடுத்த இரண்டும் இதை தாங்கி நிற்கக் கூடிய மூலாதாரம் மற்றும் சுவாதிஷ்டானம். இது மிக அருமையான அமைப்பு. இதுபோலத்தான் நாம் லிங்கபைரவியை அமைத்திருக்கிறோம், ஆனால் அதை ஒரே உருவில் அமைத்துவிட்டோம். இங்கு அதை ஒரு கோவிலாக அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற இடங்கள் தென்னிந்தியாவிலும் உண்டு. இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் இதேபோன்ற சக்தி, சக்கர அமைப்புகள் கொண்ட கோவில்கள் அங்கே உண்டு.

ஒரே உருவில் எல்லா சக்தி சக்கரங்களையும் அது மூன்றோ, ஏழோ அமைப்பது கொஞ்சம் கடினமான வேலை. ஆனால் அவற்றை இப்படித் தனித்தனியாக அமைப்பது சற்று சுலபம். அதனால் இங்கு வந்து இவ்விடத்தை பிரதிஷ்டை செய்த மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனக்குத் தோன்றுவதுபோல் அவர்கள் செயல்பட்டிருந்தால், இந்த அமைப்பு தவிர வேறு ஒரு சிறிய ஒன்றையும் அந்த மலைமேல் அவர்கள் அமைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், இந்தத் தூண்களின் மேல் கூரையில், யாரும் நெருங்கிட முடியாத வண்ணம் அதை அமைத்திருக்க முடியும். அதுதான் எட்டாவது பரிமாணம்.

அந்த எட்டாவது பரிமாணத்தையும் அமைத்து விட்டால், இது ஒரு முழுமையான படைப்பாகிவிடும். இதை ஒன்று இந்தத் தூண்களின் மேல், அல்லது அந்த மலையின் உச்சியில்தான் அமைத்திருக்க வேண்டும். இதோ இங்கு நாபி, இங்கு சுவாதிஷ்டானா, இங்கு மூலாதாரா...” என்று அங்கு எஞ்சியிருந்த அமைப்புகளை ஒவ்வொன்றாகக் சுட்டிக்காட்டி விவரித்தார் சத்குரு.

அப்போலோ கோவில்

இது... ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை மண்ணுலகக் கருவூலம், மண்ணுலகில் என்னவெல்லாம் நடக்கக் கூடும் என்று குறி சொல்பவர்கள் வாழ்ந்த இடம். கிரேக்கர்களைப் பொறுத்த வரை இது அவர்களின் கடவுள் ‘அப்போலோ’ வின் கோவில். ஆனால் இக்கோவிலின் புராணம், கிரேக்கர்களின் காலத்திற்கும் முன்னதாகத் தெரிகிறது. கிரேக்கர்களின் காலத்திற்கு முன்னதாகவே இக்கோவில் இருந்ததாகவும், அப்பொழுது இது தேவி கோவிலாக இருந்ததாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.