சென்னை ஆட்டோ ரிக்ஷா
சென்னை ஆட்டோரிக்ஷா சாகசங்களின் பெருமை ஊர் அறிந்தது .இந்தக் குட்டிக் கதையும், சென்னை ஆட்டோ ரிக்ஷாக்களின் வீர விளையாட்டுக்களை, சத்குருவிற்கே உரிய நகைச்சுவை உணர்வோடு நமக்கு வெளிப்படுத்துகிறது. அதோடு சார்லஸின் இறுதிச் சடங்கில் என்ன நடந்தது? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...
 
 

சென்னை ஆட்டோ ரிக்ஷா சாகசங்களின் பெருமை ஊர் அறிந்தது .இந்தக் குட்டிக் கதையும், சென்னை ஆட்டோ ரிக்ஷாக்களின் வீர விளையாட்டுக்களை, சத்குருவிற்கே உரிய நகைச்சுவை உணர்வோடு நமக்கு வெளிப்படுத்துகிறது. அதோடு சார்லஸின் இறுதிச் சடங்கில் என்ன நடந்தது? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு:

கண்களை மூடிக்கொள்வேனே!

ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்மணி நேராக சென்னைக்கு வந்து சென்ட்ரலில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறினார். அந்த ஆட்டோ ரிக்ஷா டிரைவர் சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதில் புகுந்து கண்மண் தெரியாத வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு அங்குலம் தவறியிருந்தால் கூட மோசமான விபத்து நேர்ந்திருக்கும். அந்த வேகத்தில் போய்க் கொண்டிருந்ததால், உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்த அந்தப் பெண்மணி வண்டியை உடனே நிறுத்துமாறு கூச்சலிட்டுக் கொண்டும் டிரைவரைப் பலவாறுத் திட்டிக் கொண்டும் இருந்தார். ஆனால் டிரைவர் அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் மரண வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார். கடைசியில் வர வேண்டிய இடம் வந்ததும் அவரைத் திட்டிக் கொண்டே இறங்கிய அந்தப் பெண்மணி, ‘அது சரி, நீ எப்படி அந்த இரண்டு பஸ்களுக்கிடையில், சிறிதும் வேகத்தைக் குறைக்காமல், அந்த சிறிய இடைவெளியில் புகுந்து சென்றாய்’ என்றார். அதற்கு அந்த டிரைவர் சொன்னார், ‘ஓ, அதுவா, அந்த மாதிரி நேரங்களில் நான் கண்களை மூடிக் கொள்வேன்!’ என்றார்.

தவறான இடத்திற்கு வந்துவிட்டோம்!

ஒரு நாள் சார்லஸ் இறந்து போனார். கல்லறைக்கு அவரது உடலை எடுத்துச் சென்றார்கள். அதைத் தொடர்ந்து அவரது மனைவி எலிசாவும் அவர்களது இரு மகன்களும் சென்றனர். இடுகாட்டில் பாதிரியார் சொன்னார், ‘சார்லஸ் போல ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது. இந்தச் சமுதாயத்திற்கு பல தொண்டுகளை செய்திருக்கிறார், மேலும் அவரது குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாகவும், தனது மனைவிக்கு ஒரு சிறந்த கணவனாகவும் இருந்திருக்கிறார்,’ என்றார். உடனே சார்லஸின் மனைவி எலிஸா தனது குழந்தைகளை தரதரவென இழுத்துக் கொண்டு வெளியேறியவர், தனது குழந்தைகளிடம், ‘நாம் ஏதோ தவறான இடத்திற்கு வந்து விட்டோம் போலிருக்கிறது’ என்றார்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1