சத்குரு: ஆசிரமத்தில் ஏன் வாழ வேண்டும்? வாழ்ந்தால் என்ன பயன்? என்று கேட்கிறீர்கள். இங்கு பலதரப்பட்ட ஆசிரமங்கள் உள்ளன. வெளி உலகத்தில் தம்மை பார்த்துக்கொள்ள இயலாதவர்களுக்கு, அவர்கள் உணவு, தங்குமிடம், சௌகரியம் ஆகியவற்றை பார்த்துக்கொள்ளும் அடைக்கல ஸ்தாபனங்கள் பல உள்ளன. நம் ‘ஈஷா யோக மையம்’ அவற்றுள் ஒன்றல்ல. இந்த ஆசிரமம் ஆன்மீக செயல்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. பிரத்யேகமாக ஆன்மீக செயல்பாட்டிற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆசிரமத்தில் ஒருவர் ஏன் வாழ வேண்டும்? ஆன்மீக செயல்பாட்டிற்கான இடம் என்று ‘எது’ இதை மற்ற இடங்களில் இருந்து வித்தியாசப் படுத்துகிறது? இதன் முக்கியத்துவம் என்ன?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆசிரமத்தில் வாழ்வதென்றால், இந்த சக்திக் குடையின் கீழ் வாழ்வது. பலருக்கும் பித்துப்பிடிக்க வைக்கும் இந்த சக்தி சூழ்நிலையில் ஏன் வாழ வேண்டும்? இங்கு வாழ்ந்தால், இங்கே இருக்கவே முடியாது என்று தோன்றும். இவ்விடத்தை விட்டு வெளியேறினால், வேறு எங்குமே நிம்மதியாய் ஒரே இடத்தில் வாழ்ந்திட முடியாது. காரணம், இந்த சக்தி அப்படித்தான் வேலை செய்யும்

அதிக அளவிலான சக்தியை முதலீடு செய்து, ஒரு சக்திவாய்ந்த இடமாய் இது உருவாக்கப்பட்டு இருப்பதால், இது ஆன்மீக சாத்தியத்திற்கான இடமாகிறது. வெள்ளியங்கிரி மலைகளிலே வாழும் ஸ்திரமான, திடமான உயிர்களைப் போல் நாமும் இருந்தால், இத்தனை கட்டிடங்கள் கட்டி இவ்விடத்தை நாம் இப்படி உருவாக்கியிருக்க மாட்டோம். இந்த வயல்களிலேயே தூங்கி எழுந்து வாழ்ந்திருப்போம். ஆசிரமத்தில் வாழ்வதென்றால், இந்த சக்திக் குடையின் கீழ் வாழ்வது. பலருக்கும் பித்துப்பிடிக்க வைக்கும் இந்த சக்தி சூழ்நிலையில் ஏன் வாழ வேண்டும்? இங்கு வாழ்ந்தால், இங்கே இருக்கவே முடியாது என்று தோன்றும். இவ்விடத்தை விட்டு வெளியேறினால், வேறு எங்குமே நிம்மதியாய் ஒரே இடத்தில் வாழ்ந்திட முடியாது. காரணம், இந்த சக்தி அப்படித்தான் வேலை செய்யும். எவ்விடத்திலும் நிம்மதியாய் ‘இது போதும்’ என்று அங்கேயே இருந்திட இந்த சக்தி உங்களை அனுமதிக்காது.

இப்படிப்பட்ட ஒரு சக்திக்குடையை உருவாக்குவதன் நோக்கம், உங்கள் வாழ்வை அதிவிரைவாக முன்னோக்கி பயணிக்கச் செய்வதே. ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் தீராத மனக்குறை உடையவர்கள். தணிக்கமுடியா வேட்கை கொண்டவர்கள். ஆன்மீகம் என்றால் மனநிறைவுடன் அமைதியாக வாழ்வது என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் முக்தி தவிர வேறு எதற்கும் பணியவும் மாட்டார்கள், வேறு எதனாலும் திருப்தியுரவும் மாட்டார்கள். தீராத இந்த மனக்குறையை துயரமாய் சுமந்தால், அவனோடு யாரும் வாழமுடியாது. ஆனால், இதையே ஆனந்தமாக ஒருவர் ஏற்றுக் கொண்டால், அவர் துருதுருவென எப்போதும் ஏதாவது செயல் செய்து கொண்டிருப்பார். எதை செய்வதற்கும் ஏதுவாக, தயாராக எப்போதுமே இருப்பார். ஒரு இடத்தில் நங்கூரம் போட்டது போல் அங்கேயே தங்கியிருக்க மாட்டார். தான் இருக்கும் இடம் எவ்வளவுதான் சௌகரியமாக இருந்தாலும், அதே இடத்தில் இருக்கமாட்டார். அது ஒருவிதமான ஏக்கம். எவ்விடத்திலும் நிலையாய் இருந்திடக் கூடாது, தேங்கிடக் கூடாது, சௌகரியமான கூட்டிலே அமிழ்ந்திடக் கூடாது, கதகதப்பான இண்டு இடுக்கிற்குள் ஒளிந்திடக்கூடாது. கொதிப்போடு அதிவிரைவாக பாய்ந்து செல்லும் காட்டாற்றில் கலந்து வேகமாய் பயணித்திட வேண்டும் என்ற ஏக்கம் அது.

வாழ்வை இப்படியொரு அதிவிரைவு முறையில் வாழ்ந்தால், வாழ்வில் எல்லாமே பன்மடங்காகப் பெருகிவிடும். சந்தோஷமாக இருந்தாலும், துயரமாய் இருந்தாலும் அதை பன்மடங்காக நீங்கள் உணர்வீர்கள்.

வாழ்வை இப்படியொரு அதிவிரைவு முறையில் வாழ்ந்தால், வாழ்வில் எல்லாமே பன்மடங்காகப் பெருகிவிடும். சந்தோஷமாக இருந்தாலும், துயரமாய் இருந்தாலும் அதை பன்மடங்காக நீங்கள் உணர்வீர்கள். வலியை பன்மடங்காக நீங்கள் உணரும்போது, “என்ன கருமம் இந்த ஆன்மீகம்? இதை எதற்காக நான் தேர்ந்தெடுத்தேன்? ஆனந்தமும் பேரானந்தமும் கிடைக்கும் என்றெண்ணி அல்லவா இதை நான் தேர்ந்தெடுத்தேன்..?” என்று நீங்கள் ஆதங்கப்படலாம். உங்களுக்கு நாங்கள் அளித்த விளம்பரமும் அதுதான், ‘உள்நிலை அறிவியல் - நல்வாழ்வின் உச்சம்’ என்று. அது உண்மைதான். ஆனால், நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். மலையின் உச்சத்தில் நிற்கையில், நிலையாய் நிற்க முடிந்தால்தான் நல்வாழ்வு. உச்சியில் நிற்கும்போது தடுமாறினால், பின்பு கஷ்டம்தான்.

யோக வழிமுறையில் ஒரு அழகான கதை ஒன்று வழக்கத்தில் உண்டு. ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவர் இருந்தார். அவர் பரம ஏழை. அது போதாதென்று, உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும், துயரங்களுக்கும் அவர் ஒரு காந்தம்போல் இருந்தார். அவை எல்லாம் அடிக்கடி அவரை சந்தித்த வண்ணம் இருந்தன, என்றாலும் அவர் தீவிரமான பக்திமானாக இருந்தார். இதில் எல்லாம் நம்பிக்கையில்லாத இவரது நண்பர் ஒருவர் இவரை சந்தித்த போது, “என்ன முட்டாள்தனம் இது. எப்போதும் நீ கடவுளை வேண்டிக்கொண்டே இருக்கிறாய். ஆனால் உன் வாழ்வைப் பார்! இடைவெளியே இன்றி எப்போதும் பிரச்சனையில் உழன்று கொண்டிருக்கிறாய்,” என்றார்.

‘கடவுளே! என்னை சூட்டில் கொதிக்க விடு, சுத்தியலால் அடி, தண்ணீரில் போட்டு குளிரவிடு, எது வேண்டுமானாலும் செய், ஆனால் பயன்படாத குவியலில் மட்டும் என்னை எறிந்து விடாதே’

அதற்கு அந்த கொல்லன் சொன்னார், “எனக்கு இந்தத் தொழில் மட்டும்தான் தெரியும். இன்றளவில் எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அதெல்லாம் ஒரு கொல்லனாய் இருந்து நான் கற்றுக்கொண்டதுதான். என் தொழிலில், உபயோகப்படுத்த ஏதேனும் ஒரு ஆயுதமோ, கருவியோ செய்ய வேண்டுமெனில், ஒரு இரும்புத்துண்டை எடுத்து, அதை கொதிநிலைக்கு சூடேற்றி, அடித்துச் செப்பனிட்டு, குளிர வைத்து, மீண்டும் கொதிநிலைக்கு சூடேற்றி, அடித்து செப்பனிட்டு, வேண்டிய வகையில் அதை உருவேற்றுவேன். இதையெல்லாம் தாங்கினால் அந்த இரும்புத்துண்டு பயனுள்ள கருவியாய் உருமாறும். இல்லையெனில், அந்த இரும்புத்துண்டை எதற்கும் பயன்படாத குப்பைக் குவியலில் எறிந்துவிடுவேன். அதனால் கடவுளிடம் நான் வேண்டுவதெல்லாம் இது ஒன்றுதான்: ‘கடவுளே! என்னை சூட்டில் கொதிக்க விடு, சுத்தியலால் அடி, தண்ணீரில் போட்டு குளிரவிடு, எது வேண்டுமானாலும் செய், ஆனால் பயன்படாத குவியலில் மட்டும் என்னை எறிந்து விடாதே’ என்பதுதான்” என்றாராம்.

எதற்கும் பயன்படாத அந்தக் குவியல் ஒரு சௌகரியமான இடம். அங்கிருந்தால், யாரும் உங்களை அடிக்கமாட்டார்கள், நெருப்பிலோ, குளிரிலோ உங்களைப் போட்டு வதைக்க மாட்டார்கள், ஆனால் நீங்கள் எதற்கும் பயன்படாத குவியலில் இருப்பீர்கள். வலியைக் கண்டு நீங்கள் அஞ்சக்கூடாது, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயங்கக் கூடாது, மரணத்தைக் கண்டு பின்வாங்கக் கூடாது. ‘பயனற்ற குவியலில் என்னை போட்டு விடாதே!’ என்ற வேண்டுதல், பயம் மட்டுமே ஒரு ஆன்மீக சாதகருக்கு இருக்கவேண்டும்.