அசைவில்லா தியானநிலை எப்போது சாத்தியம்?
கழிவு தங்கியுள்ள உடலில் மனம் மட்டும் நன்றாய் செயல்பட வேண்டும் என்று நினைப்பதில் நியாயம் இருக்கிறதா என்ன? நிச்சயமாக நன்றாய் செயல்படாது. காரணம், உங்கள் மனதிற்கும் மலக்குடலிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
 
அசைவில்லா தியானநிலை எப்போது சாத்தியம்?, Asaivilla dhyananilai eppothu sathiyam?
 

Question:நெடுநேரம் அசைவில்லாமல் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்று விருப்பமாய் உள்ளது. ஆனால், உடலை அசைவில்லாமல் வைத்திருக்க மிகவும் சிரமப்படுகிறேன். இதை சரி செய்வது எப்படி?

சத்குரு:

உடலை அசைவில்லாமல் வைத்திருக்க, உடலினைத் தயார் செய்வது அவசியம். அதற்குத்தான் ஹடயோகா. உடல் நல்ல நிலையில் இருந்தாலும், வேறு சில அம்சங்களை நீங்கள் கவனிக்காவிட்டால் அசைவில்லாமல் அமர்வதென்பது சாத்தியப்படாது.

கழிவு தங்கியுள்ள உடலில் மனம் மட்டும் நன்றாய் செயல்பட வேண்டும் என்று நினைப்பதில் நியாயம் இருக்கிறதா என்ன? நிச்சயமாக நன்றாய் செயல்படாது. காரணம், உங்கள் மனதிற்கும் மலக்குடலிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

யோகாவிற்கு எட்டு அங்கங்கள் உள்ளன. அவை யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், தியானம், சமாதி. இவை படிநிலைகள் அல்ல, அங்கங்கள். உங்களுக்கு எட்டு அங்க அவயவங்கள் இருந்தால் உங்கள் தேவையைப் பொருத்து எதை முதலில் நகர்த்துவது என்று தீர்மானித்துக் கொள்ளலாம். எதை முதலில் நகர்த்துவது என்று ஏதாவது நியதி இருக்கிறதா என்ன?

நாம் இந்தியர்கள் என்பதால் வலதினையே முதலில் வைக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். வாழ்வின் சில அம்சங்களுக்கு வலதினை முதலில் வைப்பது சிறப்பு, வேறு சில அம்சங்கள் உள்ளன, அவற்றைச் செய்யும்போது, இடதினை முதலில் செலுத்துவது சிறந்தது. எதனை முதலில் வைப்பது என்பதை நீங்கள் செய்யும் வேலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதைப் போலவே, நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, யோகத்தின் எந்த அங்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, உடலே மிக உறுதியான அம்சமாகவும், செய்யும் செயலிற்கு தடை ஏற்படுத்துவதாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. அதனால், மக்களை முதலில் ஹதயோகத்தைச் செய்ய வைக்கிறோம். சில நூறு வருடங்களுக்கு முன், ஐந்திலிருந்து பத்து சதவிகிதத்தினருக்கே மனம் சம்பந்தமான பிரச்சனை இருந்தது, பிறருக்கு உடல் பிரச்சனை மட்டுமே இருந்தது. இன்றும்கூட, கிராமப்புறத்தில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு உடல்சார்ந்த பிரச்சனைகளே நிலவுகிறது, மனப் பிரச்சனை அல்ல. ஆனால், கடந்த சில தலைமுறைகளாக உடல் பிரச்சனைகளை விட மனப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. உடலைவிட மனதை அதிகமாகப் பயன்படுத்துவதே இதற்கு காரணம். மனித சமூகத்தில் நடந்துள்ள மிகப் பெரிய மாற்றம் இது. 100, 200 வருடங்களுக்கு முன்னர் கூட, தங்கள் உடலையே மக்கள் அதிகமாகப் பயன்படுத்தினர்.

நான் தற்காலத்தைய யோகி என்பதால், தற்காலத்தில் வாழும் மக்களின் தேவையைப் பார்க்கிறேன். பெரும்பாலானவர்களுக்கு உடல் பிரச்சனையை விட மனப் பிரச்சனை அதிகமாக இருப்பதால், கிரியா மற்றும் தியானத்துடன் நாம் பயிற்சிகளைத் துவங்குகிறோம். கிரியாவும் தியானமும் ஒருவருடைய சக்தி நிலையில் வேலை செய்கிறது. அதன் பின்னரே ஹதயோகாவிற்குள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

அசைவில்லாமல் அமர நினைத்தால், உடலோடு வேலை செய்வது மட்டும் போதாது. உங்கள் மனதோடும் வேலை செய்வது அவசியம். இன்றைய தலைமுறையினர், தங்கள் முழு உடலமைப்பையும் தயார் செய்வது முக்கியம். மனம், உணர்வு, உடல், சக்தி இவை யாவற்றையும் தயார் செய்ய வேண்டும்.

அசைவில்லாமல் அமர நினைத்தால், உடலோடு வேலை செய்வது மட்டும் போதாது. உங்கள் மனதோடும் வேலை செய்வது அவசியம். இன்றைய தலைமுறையினர், தங்கள் முழு உடலமைப்பையும் தயார் செய்வது முக்கியம். மனம், உணர்வு, உடல், சக்தி இவை யாவற்றையும் தயார் செய்ய வேண்டும். முந்தைய தலைமுறையினரை விட இன்றைய தலைமுறையினர் புத்திசாலிகள் என்னும் சிந்தனை தவறானது. தாறுமாறாக பயன்படுத்தப்படுவதால், இன்றைய மக்களின் மனம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

நம் கல்விமுறை வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தால், குழம்பிய மனநிலையில் உள்ளோரையே உருவாக்க முடியும். ஒரு குழந்தை கவிதை படிக்கின்றது, கணிதம் படிக்கின்றது. இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது, ஆனால் தொடர்புப்படுத்த யாரும் இல்லை. கணக்கும் இசையும் கற்கிறார்கள். இரண்டிற்கும் தொடர்புண்டு, ஆனால் தொடர்புப்படுத்த யாரும் இல்லை. வேதியியலிலிருந்து இசை கற்கச் செல்கிறார்கள். இரண்டிற்கும் தொடர்பு உண்டு. ஆனால், தொடர்புப்படுத்த யாரும் இல்லை. ஏனெனில், இசைத் துறைக்கும் வேதியியல் துறைக்கும் ஒத்து வராது.

அனைத்துமே துண்டு துண்டாய் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆவலுடன் யாரும் கல்வி கற்பதில்லை. பரிட்சையில் பாஸ் ஆகி, வேலையில் இணைவதற்காகவே கல்வி கற்கின்றனர். இதுபோன்ற மனநிலையில் கல்வி பயில்வது, அழிவிற்கான வித்து. பரிதாபகரமான வாழ்க்கைமுறை இது.

சமீபத்தில், மிக மிக உயர்மட்ட நிலையிலான ஒரு சந்திப்பிற்கு நான் சென்றிருந்தேன். அங்கே மது வகைகள் பரிமாறப்பட்டது. விருந்தளிப்பவர், “சத்குரு இங்கு இருப்பதால் நாம் மது அருந்த வேண்டாம்,” என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால், ஒரு சிலரால் மதுவிலிருந்து தன் கைகளை அகற்ற முடியவில்லை. அங்கிருந்த அமைச்சர் ஒருவர், “சத்குருவும் இந்த உலகத்தைச் சேர்ந்த ஒரு மனிதர்தான், அவர் இதனை தப்பாய் எடுத்துக் கொள்ள மாட்டார்,” என்றார். “இந்த உலகம் எப்போது குடிக்கத் துவங்கியது,” என்று நான் கேட்டேன். இந்த உலகத்தைச் சேர்ந்த மனிதர் என்றால் அவர் கட்டாயமாக குடிக்க வேண்டும், குடிக்காது இருந்தால் அந்த மனிதர் இந்த உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்னும் மனநிலை ஏற்பட்டது எப்போது?

மனித மனங்களை தவறான வழிகளில் நாம் பக்குவப்படுத்தி வருகிறோம். அப்படியிருக்க, அமைதியாகவும் ஆனந்தமாகவும் அவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது எப்படி? சரியான செயல்களைச் செய்யாவிட்டால், சரியான விஷயங்கள் உங்களுக்கு நிகழாது. மருத்துவத்துறை, நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறீர்கள் என்று சான்றளித்தாலும், சும்மா அமர்வதில் சுகம் இல்லையென்றால், உடலில் ஏதோவொரு அம்சம் சரியில்லை என்று அர்த்தம். அமெரிக்க மருத்துவ நூல்களின்படி, வாரத்திற்கு இருமுறை மலம் கழிப்பது ஆரோக்கியமான விஷயம். இதைப் படித்தபோது, எனக்கு ஆச்சரியமே மிஞ்சியது.

அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆவலுடன் யாரும் கல்வி கற்பதில்லை. பரிட்சையில் பாஸ் ஆகி, வேலையில் இணைவதற்காகவே கல்வி கற்கின்றனர். இதுபோன்ற மனநிலையில் கல்வி பயில்வது, அழிவிற்கான வித்து. பரிதாபகரமான வாழ்க்கைமுறை இது.

யோக முறைப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு இருமுறை மலம் கழிக்க வேண்டும். யோக வழிகளின்படி, கழிவுப் பொருட்கள் உடலில் தங்கக்கூடாது. உடலைவிட்டு வெளியே செல்ல வேண்டியதை எவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற முடியுமோ அத்தனை சீக்கிரமே வெளியேற்றிவிட வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதல் சமாச்சாரமாக கழிவு வெளியேற்றப்பட வேண்டும். அமெரிக்கர்களின் கணக்குப்படி வாரம் இருமுறை மலம் கழிக்கலாம் என்றால், கழிவுப் பொருட்கள் குறைந்தது மூன்று நாட்களுக்கு உடலில் தங்கியிருக்கும். கழிவு தங்கியுள்ள உடலில் மனம் மட்டும் நன்றாய் செயல்பட வேண்டும் என்று நினைப்பதில் நியாயம் இருக்கிறதா என்ன? நிச்சயமாக நன்றாய் செயல்படாது. காரணம், உங்கள் மனதிற்கும் மலக்குடலிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

மலவாய், மூலாதாரத்தில் இருக்கிறது. மூலாதாரம் உங்கள் சக்தி உடலின் அடிப்படையாய் செயல்படுகிறது. மூலாதாரத்தில் நிகழ்வது அத்தனையும், ஏதோவொரு விதத்தில் உங்கள் முழு உடலிலும் நடைபெறும். குறிப்பாக உங்கள் மனதின் மீது அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும். மனிதனை மைக்ரோஸ்கோபினைக் கொண்டு பகுத்துப் பார்த்து, கூறுபோட்டு ஆராய்வதால், ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். அதனால், ஒவ்வொரு உடல் உறுப்பும் ஏதோ தனித்தனியாய் செயல்படுவது போல், வாரத்தில் இரண்டு நாட்கள் மலம் கழித்தால் போதும் என்பது போன்ற முடிவுகளுக்கு வந்து விடுகிறார்கள்.

நம்மைச் சேர்ந்த அத்தனை அம்சத்தையும் வெளியிலிருந்து கிரகித்துக் கொள்ள முடியாது, அதனை உள்ளிருந்தே கிரகித்துக் கொள்ள முடியும்.

உங்கள் சாதனாவினைச் செய்யுங்கள். உண்ணும் உணவில் மாற்றம் ஏற்படுத்துங்கள், இயற்கையான, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சில மாதங்களில் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவதை கவனிக்க முடியும். அசைவில்லாமல் அமர முடியும்.

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1