"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணனும்" என்று சொல்லிக் கொண்டு எப்படியாவது திருமணம் முடிந்தால் சரியென்ற மனநிலையில் பலர் நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. உண்மையில் இப்படி பொய் சொல்லி ஒரு திருமணம் முடிப்பது நல்லதா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பு பெரும்பாலான பெண்கள் பொருளதாரரீதியாக ஆண்களை சார்ந்து இருந்தார்கள். பெற்றோர் வீட்டில் இருந்தவரை அப்பாவையும், தமையன்களையும் செலவுகளுக்கு எதிர்பார்த்திருந்தார்கள். திருமணமாகி கணவனின் வீட்டுக்குக் குடிபெயர்ந்தபோது அந்த வீட்டைச் சேர்ந்த ஆண்களின் நிழலிலேயே அவர்கள் வாழ வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில், குறிப்பிட்ட சில சமூகங்களில், பெண்களுக்குத் திருமணம் செய்து அனுப்புவது என்பது பெற்றோருக்குப் பெரும் சுமையாக இருந்தது. அந்த அடிப்படையில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம்.

திருமணம் நடந்தால்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்பது முட்டாள்தனமான நம்பிக்கை.

திருமணம் நடந்தால்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்பது முட்டாள்தனமான நம்பிக்கை. இன்றைக்கு அந்தப் பேச்சுக்கே அவசியமில்லாத அளவு பெண்கள் யாரையும் சார்ந்தில்லாமல் தனித்து நிற்கத் துணிந்து விட்டார்கள்.

ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்குப் போய், பொய்யை ஆதாரமாகக் கொண்டால், தவிர்க்க முடியாமல், நீங்கள் பல வேதனைகளை சந்திக்க நேரும்.

பொய்களை அஸ்திவாரமாகப் போட்டு நடந்த திருமணங்களில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும், இருவரது குடும்பங்களும் பல வேதனைகளைச் சந்தித்துவிட்டார்கள். இது முற்றிலும் மாற்றப்பட வேண்டிய நிலை.

பரஸ்பரம் ஒருவரை ஒருவர் முற்றிலும் ஏற்றுக் கொள்வதற்குப் பொய்கள் சரியல்ல. திருமணம் என்பது உண்மைகளின் அடிப்படையிலும், நம்பிக்கையின் ஆதாரத்திலும் நடந்தால்தான், வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்.

இனியாவது, இது போன்ற மூடத்தனமான நம்பிக்கைகளை முற்றிலுமாக விட்டொழித்து விட்டு வாழ்க்கையை நேர்மையாக அணுகுங்கள்.

ஆயிரம் பொய்களைவிட ஓர் உண்மை மேலானது.