32 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் தங்களின் உள்வளர்ச்சிக்காக, பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமான ஈஷா யோக மையத்தில் 7 மாதங்களை செலவிடுகின்றனர்

2019 சாதனா பாதையில் பாதியளவு கடந்த நிலையில், அதன் நுணுக்கங்கள் பங்கேற்பாளர்களின் உள்நிலைப் பயணத்தில் நன்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது.

சாதனா பாதையில் நிலைத்திருப்பதற்கும், உள்நிலையில் செழித்து வளருவதற்கும் அதன் டிப்ஸ் & ட்ரிக்ஸ் மற்றும் உதவிக் குறிப்புகளையும், மேலும் அதில் உள்ள நுணுக்கங்களை தெரிந்துகொள்வதற்கும் ஒரு சில சாதனா பாதை பங்கேற்பாளர்களை சந்தித்தோம். அவர்களின் வாயிலிருந்து வந்த அறிவுரைகளையும், வெளிப்பட்ட புத்திசாலித்தனங்களையும் உங்களுக்காக இங்கே தருகிறோம்.

உங்கள் மிகப்பெரிய சூட்கேஸை அடைவதற்கு முன்…

isha_blog_article_life_in-sadhanapada-serious-sadhanapada-survival-guide-img1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
  • 10 ஜோடி ஆடைகளை கொண்டு வாருங்கள் - உங்கள் தற்போதைய அளவில் 5 ஜோடிகளும், தற்போதைய அளவின் பாதியில் 5 ஜோடிகளும்!
  • உங்கள் உடைமைகளில் எதாவது குறியீட்டை (ஸ்டிக்கர் அல்லது இனிஷியல்) வைத்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் சில சமயங்களில் உங்கள் உடைகளும் காலணிகளும் மற்றவரின் உடைமைகளோடு கலக்க வாய்ப்பு உள்ளது.
  • ஒருவேளை உங்கள் பாதணிகளை வேறு ஒருவர் எடுத்து சென்றால் வருத்தப்பட வேண்டாம்: அது பூதசுத்தி பயிற்சிக்காக உங்கள் பாதங்களை இந்த பூமியோடு தொடர்புகொள்வதற்கான தெய்வீக திட்டமாக கூட இருக்கலாம்.
  • ஆம், சூரியனே வாழ்வின் மூலமாகும். ஆனால், நீங்கள் கொஞ்சம் வெளுத்த நிறம் உடையவர் என்றால் உங்களை சூரியனுக்கு பிடிக்காது. எனவே சன்ஸ்கிரீன் கொண்டு வாருங்கள், மேலும் நீங்கள் செல்லும் இடங்களுக்கு அதை கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
  • கொசு விரட்டி உங்கள் வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் கொசுவின் உயிரையும் காப்பாற்றுகிறது

7 மாதங்களுக்கு என்ன தேவைப்படும் என்று திட்டமிடுவது மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும். வெப்பமான கோடை நாட்கள் முதல் மழைக்காலம் வரை பலவிதமான வானிலையில் உங்கள் செயல்பாடுகள் இருக்குமென்பதால், உங்களின் உடைமைகளை கொஞ்ச நாட்களுக்கு முன்பே திட்டமிடுவது அவசியம். இருப்பினும், தெரியாத விசயத்திற்கு திட்டமிடுவது கூட ஒரு சாகசமே! மற்ற அனைத்தும் தோல்வியுற்றால், கவலை வேண்டாம், இருக்கவே இருக்கிறது ஈஷா டிபார்ட்மென்ட் ஸ்டோர் மற்றும் அமேசான் டெலிவரி.

உணவு பிரியர்களுக்கு சில டிப்ஸ்

  • உள்நோக்கித் திரும்புவது என்பது உங்கள் வயிற்றுக்குள் நுழைந்து பார்த்து அங்கே ஏதும் தின்பண்டங்கள் கிடைக்குமா? என்று ஏங்குவதல்ல!
  • நீங்கள் பெப்பர் வைனில் நுழைந்தால், தெய்வீகம் உங்களுக்குள் நுழைந்து கொண்டது போல இருக்கும்.
  • உணர்வுபூர்வமாக சாப்பிடுவது என்பது கண்களை மூடிக்கொண்டு அறுபது நிமிடங்கள் அல்லது அதற்கு மேலும் மெதுவாக சாப்பிடுவது என்ற அர்த்தம் அல்ல.
  • ஈஷா யோக மையத்தில் ஒரு நாளைக்கு இரண்டுமுறை, காலை மற்றும் இரவு உணவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரு இடத்திற்கு இடம் பெயர்வதை காண்பீர்கள்.
  • இன்னும் தின்பண்டங்கள் உங்களை துரத்துகிறதா? உங்கள் சோப்பு, பற்பசை, ஷாம்பு, சலவை சோப்பு ஆகியவற்றை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் . இது டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு அடிக்கடி செல்வதை தடுத்து நிறுத்தும்..
  • உங்களது காபி அல்லது தேநீர் பழக்கத்திலிருந்து நீங்களே வெளிவர முயற்சிக்கிறீர்களா? உங்கள் தினசரி பானங்களுக்கு தியானலிங்க பிரசாதம் அல்லது தேவி பிரசாதத்திற்கு மாற முயற்சிக்கவும். இதில் எது சுவை மிகுந்தது என்பதற்கு இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

ஆசிரமத்தில் சரியாக - காலை 10:00 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் பிக்ஷா ஹாலில் உணவு வழங்கப்படுகிறது.

* போகியிலிருந்து யோகியாக மாறிக்கொண்டு இருப்பவர்களுக்கு “பெப்பர் வைன்” உள்ளது, ஈஷாவின் சிறிய உணவகம்.

டிபார்ட்மென்ட் ஸ்டோர்-ல் சாக்லேட் (உஸ்ஸ்ஸ்! இது ரகசியம்) உட்பட பல பயனுள்ள உணவு தயாரிப்புகள் அதிகமாகவே கிடைக்கும்.

ஒரு ரோலர் கோஸ்டர் என்று அழைக்கப்படும் சேவா

  • நீங்கள் சனி, ஞாயிறு நாட்களை எதிர்பார்த்தே வாழ்ந்தவராக இருந்தால், ஆசிரம வாழ்க்கை நிச்சயமாக ஒரு தெளிவை கொடுக்கும், ஏனெனில் வாரம் எப்போது தொடங்குகிறது, எப்போது முடிவடைகிறது அல்லது இன்று என்ன கிழமை என்பதே உங்களுக்குத் தெரியாது. (இன்று ஞாயிறுதானே?! )
  • உங்கள் சேவா உங்களுக்கு பிடித்திருந்தால் "நல்லது", உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அது "மிகவும் நல்லது".
  • நீங்கள் முட்டாள்தனமாக எதையாவது செய்துவிட்டால், வெறுமனே உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாக சேர்த்து, புன்னகைத்து நமஸ்காரம் செய்யுங்கள்!
  • சேவாவிலிருந்து விடுமுறை வேண்டுமா? கிளினிக்கிற்குச் செல்லுங்கள், உங்கள் அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் உங்களை 4 நாட்கள் தனிமைப்படுத்துவார்கள்.
  • நீங்கள் உண்மையில் என்ன சேவா செய்ய விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் ஒருங்கிணைப்பாளர்களிடம் சொல்லாதீர்கள், பின் நீங்கள் அதை ஒருபோதும் பெறமாட்டீர்கள் என்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்!

தன்னார்வத் தொண்டு என்பது சௌகரியமான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதுதான். இந்த நோக்கத்திற்காக, நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் ஒரு மாற்றத்தை உருவாக்காமல் இருந்ததில்லை. உண்மையில், ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும் சிறிய பேப்பரில் எழுதி, அவற்றை ஒரு பானையில் குலுக்கி யாருக்கு எந்த சேவா என்று ஒதுக்குவதாக சில வதந்திகள் உள்ளன. சேவா ஒதுக்கீட்டிற்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான முறை இருக்கிறதென்றால், நாங்கள் அதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை! உங்கள் சேவாவில் உண்மையான வசதியைப் பெறுகிறீர்களா? அவ்வளவுதான்! உங்கள் சேவா இப்போது மாற்றப்பட்டுள்ளது என்ற செய்தி வரும்.

சில ஆசிரம உதவிக்குறிப்புகள்

isha_blog_article_life_in-sadhanapada-serious-sadhanapada-survival-guide-img2

isha_blog_article_life_in-sadhanapada-serious-sadhanapada-survival-guide-img3

  • ஆசிரமத்தில் மழை பெய்யும்போது, சில சமயம் கொட்டி தீர்த்துவிடும்! ஒரு குடை கொண்டு வாருங்கள். ரெயின்கோட் கொண்டு வாருங்கள். முடிந்தால் , ஒரு சிறிய படகு கொண்டு வாருங்கள்!
  • ஒருவரின் பெயரை நீங்கள் மறந்துவிட்டால், “அண்ணா” மற்றும் “அக்கா” என்று அழைப்பது எப்போதும் உங்களுக்கு உதவும். (ஆனால், “எந்த அண்ணா?” கேள்விகளுக்கு தயாராக இருங்கள்).
  • : என்னை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்! நான் பறந்துபோக விரும்பவில்லை! அசையாமல் நில்லுங்கள்! காற்றின் விருப்பத்திற்கு அடிபணிய வேண்டாம்!
  • நீங்கள் பிக்ஷா ஹாலிற்கு தாமதமாக போய் கொண்டிருக்கிறீர்களா என்று உறுதியாக தெரியவில்லையா? பிரம்மச்சாரிகளை பாருங்கள். அவர்கள் நடந்து கொண்டிருந்தால், உங்களுக்கு நேரம் இருக்கிறது. அவர்கள் ஓடினால்? உங்களின் வேகத்தை இரட்டிப்பாக்குவது சிறந்தது.
  • பிக்ஷா ஹாலில் உணவு அருந்துவதற்கு முன்பான நன்றி தெரிவிப்பில் உங்கள் “AUM ” களின் எண்ணிக்கையை நினைவில் வைத்திருங்கள், ஏனென்றால் நீங்கள் நான்காவது “AUM“ சொல்லும்போது மற்றவர்கள் சாப்பிட துவங்கியிருப்பார்கள், உங்களுக்கோ சங்கடமாக தோன்றலாம்.
  • மழை நாட்களில், உங்கள் பேண்ட்டின் பின்புறம் நவநாகரீக மண் தெளிக்கப்பட்ட தோற்றத்தை நீங்கள் விரும்பாவிட்டால், வெறுங்காலுடன் நடப்பது நல்லது.
  • உங்கள் ரூம்மேட்டுக்கு 20 வினாடிகள் முன்னதாக எழுந்திருப்பது சிறந்தது அது, 2:24 AM அல்லது 5:24 AM ஆக இருந்தாலும் சரி!

ஆசிரமத்தில் வாழ்க்கை என்பது எங்கு பார்த்தாலும் முட்களும் கற்களும் நிறைந்தது என்று அல்ல. ஆசிரமத்தை சுற்றி அவை நிறையவே இருக்கின்றன. உங்கள் சக தன்னார்வலருடன் மகிழ்ச்சியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு செல்வதுதான் சாதனா பாதையின் தனித்துவம். உங்களுக்கு, அடடே என்று சொல்லும்படி, சில ஆச்சரியமான பொழுதுபோக்கு தொகுப்புகள் இந்நிகழ்ச்சியில் உள்ளன. சில சிறிய விளக்கங்கள் சிலரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிரிக்க வைத்துவிடும்.

சாதனாவில் சில பயனுள்ள தகவல்கள்

  • சாதனா பாதையில், உங்களுக்கும் உங்களுக்கும் இடையேதான் போட்டி உள்ளது.
  • நினைவில் கொள்ளுங்கள், ஷவாசனத்தின் போது குறட்டை உங்கள் தோலுரித்துவிடும். குறிப்பாக நீங்கள் ஒரு லிங்க சேவா சால்வையை போர்வையாக அணிந்திருந்தால். 
  • அர்த்த சித்தாசனத்தில் உட்கார்ந்திருப்பதால் உங்கள் கால்கள் வீங்கியிருந்தால், இன்னும் நீண்ட நேரம் அர்த்த சித்தாசனத்தில் உட்கார்ந்திருப்பதுதான் சிறந்தது.
  • ஆசிரமத்தைச் சுற்றி அர்த்த சித்தாசனத்தில் அமரும்போது உங்கள் ஐடி பேட்ஜ் உங்கள் கணுக்கால் எலும்புக்கு எளிதான மென்மையான மேற்பரப்பாக மாறும்.
  • பக்தி சாதனா என்றால் என்ன என்று உங்களுக்கு புரியவில்லை என்றால், கல்யாண சாப்பாடு (திருமண விருந்து) க்குப் பிறகு சாதனா பாதை பங்கேற்பாளர்களைப் பாருங்கள்.
  • தென்னை மரங்களின் கீழ் நடக்கும்போது, மேலே கொஞ்சம் கவனமாக இருங்கள். மேலிருந்து விழுந்த தேங்காய் இதுவரையில் யாரையும் ஞானமடைய செய்யவில்லை
  • இன்றைய சாதனா நன்றாகச் சென்றதால் நீங்கள் ஒரு திறமையான யோகியாகிவிட்டீர்கள் என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து அடுத்த காலை சாதனாவுக்காக காத்திருங்கள்.

சாதனா சில நேரங்களில் எளிதான அல்லது கடினமான, மகிழ்ச்சியான அல்லது வேதனையான, ஈடுபாடு அல்லது வேடிக்கையாக இருக்கலாம். ஒருவரின் வளர்ச்சிக்கு இது எப்போதும் தேவை. ஆனால், இதில் இல்லாத ஒரே விஷயம், தேர்ந்தெடுப்பது! அதனால்தான் இது சாதனா பாதை என்று அழைக்கப்படுகிறது.

போனஸ் உதவிக்குறிப்பு - நேரத்தின் மதிப்பைக் கற்றல்

  • ஒரு மாதத்தின் மதிப்பை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், தசைநார் கிழிந்து படுக்கையில் இருந்த ஒருவரிடம் கேளுங்கள்.
  • ஒரு மணி நேரத்தின் மதிப்பை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அதிகாலை 3 மணிக்கு எழும் நபரிடம் கேளுங்கள்.
  • ஒரு நிமிடத்தின் மதிப்பை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அந்த கடினமான ஆசனாவில் இருக்கும் (45 டிகிரியில் திவிபாதா உத்தானபாதாசனாவைப் போல) ஒரு நபரிடம் கேளுங்கள்.
  • ஒரு நொடியின் மதிப்பை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், இரண்டாவது பந்தி காலை உணவை தவறவிட்ட நபரிடம் கேளுங்கள்.

ஆசிரியர் குறிப்பு: சாதனா பாதை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் அடுத்த குழுவிற்கான முன்பதிவுக்கும் இங்கே கிளிக் செய்யவும் .