பயணத்தின் முன்பாகங்கள் ..

சப்தத்திற்கான காரணியாய் எங்கள் கண்முன் விரிந்த அழகுக் காட்சி:
இடம்: சிவனசமுத்திரம்.

day5-tb-cc-pic1-1

day5-tb-cc-pic1-2

சிவனசமுத்திரம் நதிக்குள் அமைந்திருக்கும் தீவுபோல் உருவாகியுள்ளது. காவேரி இரண்டாகப் பிரிந்து, காகனசுக்கி மற்றும் பாரசுக்கி அருவிகளாக விழுகிறது. இவற்றை சிவனசமுத்திரம் அருவி என்று குறிப்பிடுவார்கள். இந்தியாவில் இருக்கும் அருவிகளில் இது இரண்டாவது பெரிய அருவி.

காலை 6:30: குருபூஜை ஆரம்பம். பார்த்தால் எதிரில் சத்குரு. 27 வருடங்களுக்கு முன்பு இங்கு அவர் வந்ததாக பகிர்ந்தார்…

day5-tb-cc-pic1-3

day5-tb-cc-pic1-4

பொதுவாக சத்குரு எதையும் புகைப்படம் எடுத்து நாம் பார்த்ததில்லை. ஆனால் இங்கு…

day5-tb-cc-pic1-5

சிவனசமுத்திரம் அருவி பற்றி சத்குரு கூறியதாவது:

காலை 9:00 மணி: பயிற்சிகளை முடித்துவிட்டு இயற்கை சூழலில், அருவியின் அழகைப் பருகியவாறு உணவு. ஊருண்டு வீடுண்டு என்றாலும் வெட்டவெளியில் வாழ்வதும், இயற்கையோடு இயைந்து இருப்பது அவ்வப்போதேனும் செய்யமுடிந்தால்…

day5-tb-cc-pic3-20

இதுவும் கூட நடக்கும்…

day5-tb-cc-pic1-9

பங்கேற்பாளர்கள் சிலர்:

day5-tb-cc-pic1-10-col

இந்த அழகிய இடத்தில் கன்னட நடிகர் விஜய் ராகவேந்திரா அவர்கள் சத்குருவுடன் உரையாட வந்திருக்கிறார்.

day5-tb-cc-pic1-13

day5-tb-cc-pic1-16

காலை 10:00 மணி - பங்கேற்பாளர்கள் சத்குருவுடன் புகியப்படம் எடுத்துக் கொள்வதர்கு வாய்ப்பு கிட்டியது…

day5-tb-cc-pic1-15

அருவியின் அருகே சத்குரு…

கிளம்பும் தருவாயில், 1-மணி நேரத்தில் சத்குருவைப் பார்த்து தான் வரைந்த ஓவியத்தை ஒருவர் கொடுக்கிறார். 

day5-tb-cc-pic2-28

day5-tb-cc-pic2-27

மண்-தடம் வழியாக பயணம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

day5-tb-cc-pic2-13

day5-tb-cc-pic2-12

சிவனசமுத்திரத்தில் இருந்து நரசீபுரா செல்ல கிளம்பிவிட்டார்கள்

day5-tb-cc-pic2-29

day5-tb-cc-pic2-14

செல்லும் வழியில் ஒருவர் சத்குருவிற்கு மரியாதை செய்கிறார்

day5-tb-cc-pic2-1

திருமுக்கூடல் நரசீபுராவில் சோமநாதபுரா சென்னகேசவா கோவில் அருகே முக்கூடல் சங்கமம் நிகழும் இடத்தில் சத்குருவுடன் சத்சங்கம் நிகழவுள்ளது. காவேரி, கபிலா மற்றும் ஸ்படிக சரோவர் கலக்கும் இடம். இவ்விடம் மிகப் புனிதமானது என்றும் ஆனால் அதிகப் பேசப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தக்ஷிண காசி என்றழைக்கப்படும் இவ்வூரில் உலோகப் படகுகள் உபயோகத்தில் உள்ளது. என்ன ஆச்சரியம் பாருங்கள், தி.நரசீபுராவிலும் நமது தன்னார்வத் தொண்டர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார். இவரது பெயர் முரளி. சத்குருவின் பேச்சு அனல்பறக்கும். நம்மை சிந்திக்க வைக்கும். அவரது வீடியோக்களை நான் பார்த்துவிடுவேன்.

day5-tb-cc-pic2-3day5-tb-cc-pic2-4

 

day5-tb-cc-pic3-9

day5-tb-cc-pic3-12

சத்குரு பேசியதன் சுருக்கம்: இவ்விடம் மிகப் புனிதமான இடம் ஆனால் அதிகப் பேசப்படவில்லை. இதுபோன்ற ஆனந்தமான முகங்கள் சூழ்ந்திருந்தால் பல பெரிய விஷயங்களை நாம் செயல்படுத்தலாம். ஐ நா வின் பாலைவனமாக்குதலைத் தவிர்க்கும் மாநாட்டில் ஈஷா அறக்கட்டளைக்கு பங்கேற்பாளராக அங்கீகாரம் அளித்துள்ளனர். புவியியல் அடிப்படையில் மிக எளிதாக நதி புத்துணர்வை செயல்படுத்தக்கூடிய நதி காவேரி. இதை செயல்படுத்திக் காட்டினால், உலகின் மற்ற இடங்களிலும் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் கூட உங்கள் நாட்டில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை இத்திட்டத்தில் பங்கெடுக்கச் செய்யுங்கள். ஏனெனில் உலகில் மிகத் தேவையானவற்றை செயல்படுத்த அவர்கள் முன்வர வேண்டும்.

11:45 மணியளவில் இவ்விடத்தை அடைகிறார்கள்

day5-tb-cc-pic2-6

day5-tb-cc-pic2-30

காவேரியின் அருகில் சத்குரு…

day5-tb-cc-pic2-10.

day5-tb-cc-pic2-31

day5-tb-cc-pic2-9

சத்குருவுடன் சத்சங்கம்

day5-tb-cc-pic2-7

day5-tb-cc-pic2-8

day5-tb-cc-pic2-22

மதியம் 2 மணியளவில் சத்சங்கம் முடிந்ததும் சென்னகேசவா கோவில் அரங்காவலர்கள் சத்குருவிற்கும், பைக்கர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பாரம்பரிய மைசூர் மதிய உணவு தயாரித்துப் பரிமாறினார்கள்

day5-tb-cc-pic2-17

day5-tb-cc-pic2-19

day5-tb-cc-pic2-18

உணவிற்குப் பின் சென்னகேசவா கோவில் தரிசனம்

day5-tb-cc-pic2-23

day5-tb-cc-pic2-20

day5-tb-cc-pic2-32

day5-tb-cc-pic2-25

அழகுக்கு பொருள் சொல்லும் இடமாய் அமைந்துள்ளது இந்த சென்னகேசவா கோவில். வரிசை வரிசையாய் ஒரே சிலைவடிப்பு, ஜெராக்ஸ் எடுத்ததுபோல் அத்தனை கச்சிதமாய்! எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் கண்ணுக்கு அழகாய் காட்சியளிக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் 3 கோவில்கள் உள்ளது - சென்னகேசவா, ஜனார்தனா மற்றும் வேணுகோபாலா தெய்வங்களுக்கு உறைவிடமாய். ஆனால் இப்போது விஷ்ணுவின் அம்சமான ஜனார்தனா மற்றும் வேணுகோபாலா சிலைகள் மட்டும்தான் உள்ளன. சென்னகேசவரின் சிலை காணவில்லை. இதுபற்றி சத்குரு கூறுகையில், "பேலூர் கோவில் போல் அமைக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள், ஆனால் அந்த அளவை எட்டமுடியவில்லை" என்றார். சத்குரு இதுபற்றி பேசிய வீடியோ:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Sadhguru #CauveryCalling

A post shared by Sadhguru.Cauvery Calling (@sadhguru) on

நாளையுடன் முதல் கட்டப் பயணம் முடிவடையும் என்பதால், பங்கேற்பாளர்களுக்கு தேவையான குறிப்புகள் வழங்கப்படுகிறது.

day5-tb-cc-pic3-4

day5-tb-cc-pic3-5

இன்னர் வீல் இவென்ட்

day5-tb-cc-pic3-7

மைசூரில் பெண்கள் ரோட்டரி க்ளப் ஒருங்கிணைத்த "இன்னர் வீல் இவென்ட்"ல் சிறப்பு விருந்தினராக சத்குரு பங்கேற்றார். இதுபற்றி கூறுகையில், என்னென்ன வழியிலெல்லாம் முயற்சி செய்யமுடியுமோ, அந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு என்னை எப்படியோ இங்கு வரவைத்து விட்டார்கள் என்று சிரித்தார்

day5-tb-cc-pic3-6

day5-tb-cc-pic3-8

day5-tb-cc-pic3-2

காவேரி கூக்குரல் பற்றி பேசும்போது, இதில் விவசாயிகள் பங்கெடுக்க வேண்டியதன் முக்கிய காரணம் இந்நாட்டில் நிலங்கள் அவர்கள் கையில் உள்ளது. அதனால் நிலம் சம்பந்தமாக என்ன செய்தாலும் அதில் அவர்கள் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும். ஆனால் இன்று அவர்களின் பொருளாதார நிலை அவர்களை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் அளவிற்கு மிக மோசமாக உள்ளது. இதற்கு காரணம் வளமிழந்த பூமியும், தண்ணீர் தட்டுப்பாடும் தான். அதனால்தான் அவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் அதே முயற்சியில் நம் ஆறுகளையும் காக்க இந்த வேளாண்காடு வளர்ப்புத் தீர்வை வழங்கினோம் என்று சொல்லி, அனைவரையும் இதற்கு நிதி வழங்கக் கேட்டுக் கொண்டார். பெண்கள் ரோட்டர் கிள்ப்பில் 46,000 பெண் உறுப்பினர்கள் இருப்பதால், அவர்கள் 50,000 மரங்களுக்கு நிதி திரட்டுவதாக உறுதியளித்தனர்.

இரவு 9:20 மணியளவில் பங்கேற்பாளர்கள் பெங்களூருவில் தங்குமிடத்தை வந்தடைந்தனர். தூங்குமிடம், உண்ணுமிடம், சமையல் இடம், கை கழுவுமிடம், தற்காலிக கழிவறைகள் என மாளிகை மைதானம் ஒரு காம்ப் சைட்டாகவே மாறியிருந்தது. 9:30 மணிக்கு அங்கேயே சுடச்சுட மைசூர் மசாலா தோசை, நீர் தோசை என பலவிதமான தோசைகளை வழங்கி உணவு அணி அசத்திவிட்டார்கள்.

day5-tb-cc-pic3-10

day5-tb-cc-pic3-11

10:20 மணிக்கு தங்குமிடத்தை சத்குரு வந்தடைந்ததும் பங்கேற்பாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருடன் இத்தனை நாட்கள் பயணிக்க அவர்களுக்கு வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்தார்கள். தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக, அதிலும் குறிப்பாக சிவனசமுத்திரத்தை மறக்கமுடியாது என்று ஒருவர் பகிர்ந்தார். அப்புறம் ஒரு கேள்வி, இரண்டு கேள்வி என்று கேள்விகளை அடுக்க ஆரம்பித்து விட்டார்கள். "இதையே சத்சங்கம் போல் ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே!" என்று சிரித்துவிட்டு, சிறிதுநேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு சத்குரு அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்.

Day5-SG-1

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்