பயணத்தின் முன்பாகங்கள் ..

இன்று இந்த இயக்கத்திற்கு மரக்கன்றுகள் உருவாக்கப்போகும் ஒரு நர்சரியை பார்த்துவிட்டு, இப்பயணத்தின் முடிவிடமான திருவாரூர் வரை செல்கிறோம். இன்று பொதுக்கூட்டம் எதுவும் இல்லை. இரவு சிதம்பரம் சென்றுவிட்டால், நாளை காலை புதுவையிலும் மாலை சென்னையிலும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

காலை குருபூஜை, பயிற்சிகளுடன் ஆரம்பம்

day12-tb-cc-pic1-2

day12-tb-cc-pic1-1

அடுத்து உணவு, கான்டிணென்டல் மற்றும் தமிழ்நாட்டு சுவையில்…

day12-tb-cc-pic1-17

8:30 மணியளவில் திருவாரூர் நோக்கி பயணம் ஆரம்பம். தஞ்சாவூர் பசுமைக்கரங்கள் நர்சரி சென்றுவிட்டு அங்கிருந்து திருவையாறு செல்லவிருக்கிறோம்

day12-tb-cc-pic1-17

day12-tb-cc-pic1-7

day12-tb-cc-pic1-8

day12-tb-cc-pic1-9

நர்சரியில்…

day12-tb-cc-pic1-10

day12-tb-cc-pic1-11.jpeg

day12-tb-cc-pic1-12

day12-tb-cc-pic1-13.jpeg

இது 10 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நர்சரி. தஞ்சாவூரை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து வரும் 32 பெண்மணிகள் இந்த நர்சரியை நடத்தி வருகிறார்கள்.. இங்கு 160ற்கும் மேற்பட்ட மரக்கன்று வகைகள் வளர்க்கப்படுகின்றன. கடந்த 6 வருடங்களாக 1 வருடத்திற்கு 15 லட்சம் மரக்கன்றுகள் வரை இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. மனமாற, ஆனந்தமாக அவர்கள் இந்த நர்சரியில் வேலை செய்கிறார்கள்!

 

நர்சரியில் சத்குரு... ஈஷா ஹோம் ஸ்கூல் முன்னாள் மாணவி சத்குருவிற்கு மாலை அர்ப்பணிக்கிறார்

day12-tb-cc-pic2-12.jpeg

day12-tb-cc-pic2-11.jpeg

"இந்த பென்சிலால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகிறேன்" என்று (நகைச்சுவையாக) கூறிக்கொண்டே பென்சிலால் பிளாஸ்டிக்கவர் மண்ணில் துளையிட்டு அதில் வேருடன் கூடிய செடியை நடுகிறார்.

day12-tb-cc-pic2-8.jpeg

day12-tb-cc-pic2-7.jpeg

day12-tb-cc-pic2-9.jpeg

day12-tb-cc-pic2-6.jpeg

Rosewood விதைகளை தயாராய் இருக்கும் தாய்ப்படுகையில் இடுகிறார்.

day12-tb-cc-pic2-4.jpeg

day12-tb-cc-pic2-26.jpeg

day12-tb-cc-pic4-1.jpeg

day12-tb-cc-pic4-11.jpeg

day12-tb-cc-pic2-10.jpeg

day12-tb-cc-pic2-5.jpeg

day12-tb-cc-pic2-3.jpeg

day12-tb-cc-pic2-1.jpeg

day12-tb-cc-pic2-13.jpeg

day12-tb-cc-pic2-2.jpeg

 

திருவாரூர் நோக்கி...

day12-tb-cc-pic2-14.jpeg

day12-tb-cc-pic2-23.jpeg

day12-tb-cc-pic2-16.jpeg

திருவாரூரில் ஆனந்தமான வரவேற்பு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

day12-tb-cc-pic2-21.jpeg

day12-tb-cc-pic2-24.jpeg

day12-tb-cc-pic4-14.jpeg

day12-tb-cc-pic2-25.jpeg

திருவாரூர் கோவிலில்..

day12-tb-cc-pic2-19.jpeg

day12-tb-cc-pic2-20

day12-tb-cc-pic4-15.jpeg

day12-tb-cc-pic4-9.jpeg

day12-tb-cc-pic4-4.jpeg

day12-tb-cc-pic4-3.jpeg

கோவிலில் குழந்தைகள்…

day12-tb-cc-pic4-6.jpeg

day12-tb-cc-pic4-2.jpeg

day12-tb-cc-pic4-16.jpeg

day12-tb-cc-pic4-5.jpeg

day12-tb-cc-pic2-18.jpeg

day12-tb-cc-pic5-14.jpeg

சத்குரு விவசாயிகளை சந்திக்கச் செல்கிறார்.

day12-tb-cc-pic2-10.jpeg

விவசாயிகளுடன் சந்திப்பு

 

day12-tb-cc-pic3-2.jpeg

day12-tb-cc-pic2-6.jpeg

விவசாயிகள் பச்சைத்துண்டு போர்த்தி வரவேற்க அதை சத்குரு கழுத்திலேயே அணிந்திருக்கிறார்…

day12-tb-cc-pic2-7

day12-tb-cc-pic2-8.jpeg

விவசாயிக்கு என்ன பிரச்சினை என்று நான் சொல்லத் தேவையில்லை. டெல்டா நிலத்தில் காவேரியின் ஆரோக்கியம் எப்படி இருந்தது? இந்த 10 வருடத்தில் எப்படி மாறியுள்ளது? ஐயா நீங்கள் பகிர முடியுமா?

82-வயதான மூத்த விவசாயி திரு. ரங்கநாதன் அவர்கள்

day12-tb-cc-pic2-3.jpeg

day12-tb-cc-pic2-4.jpeg

எனக்கு 82 வயசு ஆகிறது. இங்கிருக்கும் காவேரியை அகண்டகாவேரி என்போம். 1 மைல் அகலம் இருக்கும். படுகை மட்டுமே 1 கிமீ இருக்கும். படுகையில் மா, பலா, தென்னை மரம்தான் இருக்கும். தோப்பு நிறைய குரங்கு இருக்கும், இன்னிக்கு படுகையே இல்லை. அதுமட்டுமில்ல செங்கல் கால்வாய் போட்டு, பள்ளங்கள் உருவாகி, இப்போ கரையிலேயே, வயல், வீடு வந்துவிட்டது. படுகை இல்லாததினால் தண்ணீர் பெருக்கெடுக்கும்போது, வயல், வீடு எல்லாம் நாசமாகிறது. முன்பெல்லாம் 1 அடி தோண்டினாலே ஊத்து வரும். இன்று காவேரியிலேயே தண்ணி இல்லை. நம்ம விவசாயிகளுக்கு பொறுமை அதிகம், மன-தைரியமும் உண்டு. பிரச்சினையான சூழ்நிலகளை நல்லா சமாளிப்பார்கள். ஆனால் எல்லாம் நன்றாக இருந்தால் சோம்பேறியாக ஆகிவிடுகிறார்கள். இப்போது இந்த பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் அவதாரம் போல் வந்திருக்கீறீர்கள்…

(சத்குரு அவசரமாக மைக்கைப் பெறுகிறார்)

சத்குரு: அவதாரம் என்று சொன்னீர்கள் என்றால், அடுத்து இந்த பிரச்சினைக்கே நான் தான் காரணம் என்றுவிடுவார்கள்…

சத்குரு:

day12-tb-cc-pic2-5.jpeg

40 வருடத்திற்கு முன்பு எல்லா வயலிலும் மரம் இருந்தது. வயலில் மரம் இருந்தால் போடும் உரம் அனைத்தையும் மரம் எடுத்துக் கொள்ளும் என்று மரத்தை எடுக்கச் சொன்னார்கள். அதுமட்டுமல்ல வயலில் மரம் இருந்து அதை வெட்டினால் அதையே பெரும் பிரச்சினையாக மாற்றுகிறார்கள். வாழ்வில் ஒரு மரம் வைக்காதவர்கள், விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் இதை செய்கிறார்கள். அதனால் மரம் வைப்பதற்குக் கூட தயங்கி அந்த பழக்கமே இல்லாமல் போய்விட்டது.

வெறும் உப்பு போட்டால் மண் எத்தனை நாளைக்கு வளமாக இருக்கும்? தேவையான உயிர்மச்சத்து இல்லாமல், மண் வளம் குறைந்து ஈரப்பதம் குறைந்துபோகிறது. மண் வளமாக இருக்கவேண்டுமெனில் அதற்கு ஒரேவழி மரத்தின் இலை தளைகள் மற்றும் ஆடு-மாடு சாணம். மரம் என்று எதுவும் மீதமில்லை; மாடுகள் எல்லாம் வெளிநாட்டிற்கு பயணப்படுகிறது. உங்கள் நிலம் மட்டும் எப்படி வளமாக இருக்கும்?

12000 வருடங்களாக வளமாக இருந்த பூமி இது. தமிழ்நாட்டில் கலாச்சாரம் வளர்ந்தது அரசர்களால் அல்ல, அறிஞர்களால் அல்ல. விவசாயியால்! விவசாயி ஒரே இடத்தில் உணவு வழங்கிக் கொண்டிருந்ததால்,இவர்கள் வேறிடம் தேடிப்போகாமல் வேறெதிலும் சிந்தனை பிசகாமல் கலாச்சாரம் வளர்ந்தது. 12000 ஆண்டு காலமாக, வேறெங்கும் இத்தனை ஆண்டுகள் விவசாயம் நடக்கவில்லை. 12000 ஆண்டுகளாக ஒரே நிலத்தில் விவசாயம் செய்து உணவு வழங்கி, வாழ்ந்து, கலாச்சாரம் வளர்ந்து அதன்பின்னரும் நமக்கு வழமான பூமியைத்தான் விட்டுச் சென்றார்கள்.

ஆனால் இரண்டே தலைமுறையில் தமிழ்நாட்டின் 42% நிலத்தை தரிசு நிலமாக மாற்றியுள்ளோம். காரணம் வெறும் உப்பு (இரசாயன உரம்). உங்கள் தட்டில் வெறும் உப்பு வைத்து உண்ணுங்களேன் இன்று, வேறெதுவும் வேண்டாம்… முடியுமா உங்களால்? இதைத்தான் நம் தாய்மண்ணிற்கு செய்து வருகிறீர்கள். உப்பு சிறிது போட்டால் சுவையாக இருக்கும்தான் ஆனால் அதற்காக உப்பே உணவு என்றால் என்ன செய்வது? மண்ணிற்கு மரத்தின் இலை தேவை. மாட்டு சாணம் தேவை.

தமிழ்நாட்டின் மண் மிக விசேஷமானது. இது விஞ்ஞான அடிப்படையில் நிரூபனம் ஆகியுள்ளது, ஆனால் அதற்கு விளக்கமளிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் வளமான மண்ணில் ஒரு கையளவு மண் எடுத்தால் அதில் 10,000-50,000 வகையான நுண்ணுயிர்கள் உள்ளது. உலகில் வேறெங்கும் இதுபோல் இல்லை. இப்படிப்பட்ட மண்ணை உப்பு போட்டு கெடுத்து வைத்துள்ளோம். உப்பு போடப்போட மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை அதுவே எடுத்துக் கொள்கிறது, இதனால் மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்கள் அழிகிறது, மண்ணும் வளமிழந்து போகிறது. பொன்முட்டையிடும் வாத்தை வயிற்றைக் கிழித்து பார்த்ததுபோல் தங்கம் விளையும் நம் மண்ணையும் உரம்போட்டு சோதித்துவிட்டோம்.

மற்றொன்று இது டெல்டா நிலம். டெல்டா என்றால் ஆற்றின் வண்டல் மண் வந்து சேரும் இடம். வண்டல் மண் வருவதால் இது பொன்விளையும் பூமியாக இருந்தது. இங்கு உரம் கூடத் தேவைப்படவில்லை. டெல்டா என்றால் தங்கம் வளர்க்க முடியும். ஆனால் காவேரியில் 4 அணைகள் கட்டி, அதற்குமேல் தடுப்பு அணைகள் அமைத்து இங்கு வரவேண்டிய வண்டல் மண் எல்லாம் அங்கேயே தங்கிவிடுகிறது. அதனால் டெல்டா பகுதிகள் முன்போல் இல்லை. இங்கும்கூட மரம் வைக்கவேண்டும். அதோடு வரும் மழைநீர் பூமிக்குள் சாரவேண்டும். அதற்கும் நிறைய மரம் செடிகள் வேண்டும். அப்போதுதான் நாடு வளமாக இருக்கும். டெல்டாவிற்கென்று ஒரு விஞ்ஞானம் உண்டு. அதைசார்ந்த மரவிவசாயத்தைக் இங்கு கடைபிடிக்கலாம்.

மரம், அத்துடன் சேர்த்து விவசாயம் பலவிதங்கள் செய்யமுடியும் - 100%, 50%, 25%, 1%0. வயல்ல மரம் இல்லை, மாடு இல்லை என்றால், மண்ணைக் கொன்றுவிட வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறீர்கள். 10 வருடத்தில் மண்ணைக் கொன்றுவிடவேண்டும் என்ற உறுதியை விட்டுவிடுங்கள். நம்மிடம் இந்த பூமியை நம் முன்னோர் எப்படி ஒப்படைத்தார்களோ, அதே அளவிலேனும் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்க வேண்டும். 25 வருடம் போய்விட்டால் நிலையை சரிசெய்வது மிக மிகக் கடினம்.

கடந்த 20 வருடங்களில் இதற்காக செயல்செய்து 70,000 விவசாயிகள் இப்போது வெற்றிகரமாக  மரவிவசாயம் செய்துவருகிறார்கள். 5-7 வருடங்களில் அவர்களின் வருமானம் 300-800% உயர்ந்துள்ளது. விவசாய ஜமீனில் மரத்துடன் சேர்த்து வெற்றிகரமாக மற்ற பயிர்களையும் வளர்க்கமுடியும். மரத்தின் நடுவே ஊடுபயிராக நெல், மஞ்சள், சேனை கிழங்கு, கரும்பு, வாழை என்று பயிரிட்ட கோபிசெட்டி பாளையம் விவசாயி, 12 ஏக்கரில் 96 லட்சம் மதிப்புள்ள மரம் வளர்த்துள்ளார். 1 வருடத்திற்கு 13 லட்சம் வரை அவருக்கு வருமானம் கிடைக்கிறது. அவருடைய நிலத்திற்கு அந்த விலை கிடைக்காது, ஆனால் அம்மரங்களுக்கு 1 கோடி மதிப்பு. இன்னொரு விவசாயி 15 ஆண்டுகளாக 4000 சிவப்பு சந்தன மரம் வளர்த்துவந்தார். அவற்றின் மதிப்பு 25 கோடி.

இப்படி இருக்கும்போது ஏன் ஒருவரும் மரவிவசாயம் செய்யவில்லை? ஏனெனில் மரங்களை வெட்டக்கூடாது, வெட்டினால் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று சட்டங்கள் உள்ளது. இது பழங்காலத்தில் இயற்றப்பட்ட சட்டம். இன்று காலத்திற்குத் தகுந்தாற் போல் அது மாற்றி எழுதப்பட வேண்டும். அதற்கும் மேலாக "சுற்றுச்சூழல் ஆர்வலர்" எனும் பேரில் மரத்தை வெட்டக்கூடாது என்று சுற்றுசூழல் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கொடிபிடிக்க வந்துவிடுவார்கள். இந்த சட்டங்களை மாற்ற கடந்த 7 வருடங்களாக நம் தன்னார்வத் தொண்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். நாம் பரிந்துரைக்கும் மரங்களை வயலில் வளர்க்க, வெட்ட, வேறு எங்குவேண்டுமானாலும் எடுத்துச் சென்று விற்க விவசாயிக்கு முழு அதிகாரம் தர மத்திய அரசாங்கம் மற்றும் கர்நாடக, தமிழக அரசாங்கங்கள் சம்மதித்துள்ளன. மரங்கள் காடு-வளர்ப்பு என்பதில் இருந்து விவசாய-வளர்ப்பு என்ற பிரிவுக்கு மாற்றவேண்டும். அதோடு மரவிவசாயத்தில் ஈடுபடும் முதல் 4-5 வருடங்களில் ஏற்படும் வருமானக் குறைவை ஈடுசெய்ய மாநில அரசாங்கங்கள் மானியம் வழங்க முன்வந்துள்ளன. அதற்கான அறிவிப்புகள் அடுத்த 2-3 வாரங்களில் வந்துவிடும்.

நம் மரத்தேவைகளுக்கு இனியும் காடுகளை நம்பி நாம் இருக்க முடியாது. காடுகளின் அளவு மிகக் குறைந்துவிட்டது. அதை அவ்வாறே நாம் பாதுகாக்க வேண்டும். சென்ற ஆண்டுகளில் நம் நாட்டில் 70,000 கோடி மதிப்பிலான வெட்டு மரங்களையும் 1,20,000 கோடி மதிப்பிலான மர-சாமான்களையும் இறக்குமதி செய்திருக்கிறோமாம். அந்த மரத்தை நம் நாட்டிலேயே நாம் ஏன் வளர்க்கக்கூடாது?

விவசாயிகளால்தான் நாடே வாழ்ந்துள்ளது

மரவிவசாயத்தில் ஈடுபடும் முதல் 4-5 வருடங்கள் விவசாயியின் வருமானம் குறையும். அதை ஈடுசெய்வதற்குத்தான் அரசாங்கம் மானியம் வழங்கும். நிஜத்தில் ஒருமரம்கூட நடாமல், விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாமல், இணையத்தில் "சுற்றுச்சூழல் நேசிப்பவனாக" வளையவந்து அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள்தான் ஒட்டுண்ணிகள். விவசாயிகள் ஒட்டுண்ணிகள் கிடையாது. எப்போதும் கடனை தள்ளுபடி செய்யக் கேட்பவர்களும் கிடையாது. விவசாயிகளால்தான் இந்த நாடே வாழ்ந்திருக்கிறது. மரவிவசாயத்தால் உங்கள் பொருளாதாரம் நிச்சயம் உயரும். இதை செயல்படுத்திய கிட்டத்தட்ட 70,000 விவசாயிகளின் சாட்சியங்கள் இதற்கு உள்ளன.

ஒருவேளை அரசாங்கம் சலுகை வழங்குவதிலோ, வெட்டுமர வாரியம் அமைப்பதிலோ, தேவையான சட்டங்கள் இயற்றுவதிலோ தாமதம் ஏற்பட்டால், உங்களுக்குத் தேவையானதைக் கேட்க நீங்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்!

 

day12-tb-cc-pic2-9.jpeg


 

சத்குரு அந்த பச்சைத்துண்டை அணிந்துகொண்டே செல்கிறார்

day12-tb-cc-pic4-10.jpeg

Day12-Changed-1

 

மதிய உணவு - மயிலாடுதுறை இந்திரா பவனில் தன்னார்வத் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

day12-tb-cc-pic5-2.jpeg

day12-tb-cc-pic5-3.jpeg

day12-tb-cc-pic5-6.jpeg

day12-tb-cc-pic5-4.jpeg

day12-tb-cc-pic6-31.jpeg.jpg

day12-tb-cc-pic6-32.jpeg.jpg

day12-tb-cc-pic5-5.jpeg

day12-tb-cc-pic5-7.jpeg

day12-tb-cc-pic5-8.jpeg

day12-tb-cc-pic5-13.jpeg

பைக் பயணம் தொடர்கிறது

day12-tb-cc-pic4-12.jpeg

day12-tb-cc-pic4-13.jpeg

day12-tb-cc-pic4-8.jpeg

day12-tb-cc-pic4-7.jpeg

day12-tb-cc-pic5-9.jpeg

வழியில் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள்

day12-tb-cc-pic6-33.jpeg.jpg

day12-tb-cc-pic5-10.jpeg

day12-tb-cc-pic5-11.jpeg

day12-tb-cc-pic5-12.jpeg

பங்கேற்பாளர்கள் முன்னதாகவே சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு வந்திவிட்டார்கள். சத்குரு இன்னும் சற்று நேரத்தில் இங்கு வருவார்.

day12-tb-cc-pic6-1

சிதம்பரம் கோவிலில் சத்குரு

day12-tb-cc-pic6-10.jpeg

day12-tb-cc-pic6-6.jpeg

day12-tb-cc-pic6-4.jpeg

day12-tb-cc-pic6-15.jpeg

day12-tb-cc-pic6-14.jpeg

day12-tb-cc-pic6-16.jpeg

day12-tb-cc-pic6-9.jpeg

day12-tb-cc-pic6-8.jpeg

பத்திரிக்கையாளர் சந்திப்பு

day12-tb-cc-pic6-5.jpeg

இரவு தங்குமிடம் நோக்கி

day12-tb-cc-pic6-11.jpeg

தங்குமிடத்தில்

day12-tb-cc-pic6-13.jpeg

day12-tb-cc-pic6-12.jpeg

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்