பயணத்தின் முன்பாகங்கள் ..

இரவெல்லாம் மழை பெய்தது. சத்குருவுடன் சத்சங்கம் முடித்து மழையின் சலசலப்போடு தூங்கச் சென்றோம். இன்று காலை ஒரு ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. சத்குருவுடன் பேச பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று காலை மேட்டூர் அருகே மேச்சேரியிலும் மாலை ஈரோட்டிலும் பொதுமக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது

காலை 6:30 மணியளவில் காம்ப்ஸைட்

மூடுபனி போன்ற சூழல் எட்டிப்பார்க்கும் சூரியன், இதற்கு நடுவே பிரம்மாண்டமான காவேரியின் தரிசனம். மிகவும் அற்புதமான அனுபவம்

day10-tb-cc-pic3-8

day10-tb-cc-pic3-9

day10-tb-cc-pic3-7

காலை 8:00 மணியளவில் காலை உணவு
இரவெல்லாம் கொட்டித் தீர்த்த மழை. காலையில் என்ன கிடைக்கும்? என்று நினைத்தால் சுடச்சுட விருந்தே படைத்திருக்கிறார்கள் நம் அன்னபூர்ண குழு...

day10-tb-cc-pic1-11

 

day10-tb-cc-pic2-6

day10-tb-cc-pic2-4

day10-tb-cc-pic2-3

day10-tb-cc-pic2-5

காவேரியின் கண்கொள்ளா தரிசனம், அறுசுவை விருந்து, அடுத்து எங்களை திக்குமுக்காடச் செய்ய சத்குரு அவர்களே அங்கு வந்துவிட்டார்கள். (வலது) "சத்குரு ஒவ்வொருமுறை என்னைப் பார்க்கும்போது 90, 80 என்று என் வயதை மாற்றி மாற்றி சொல்வதால் எனக்கே என் வயது குழம்பிப் போகிறது" என்று சொன்ன 70 வயதைத் தாண்டிய உஷா அவர்கள் (வலது)

day10-tb-cc-pic2-2

day10-tb-cc-pic2-1

நம் பங்கேற்பாளர்களில் ஒருவரான இவர் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவர் பகிர்வதாவது:

நான் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராக இருக்கிறேன். கைலாஷ் மானஸரோவருக்குப் பின் இது சத்குருவுடன் எனக்கு இரண்டாவது பயணம். ஒவ்வொருமுறை பேசும்போதும் மனிதனுக்குள் ஆழ்ந்திருக்கும் மனிதநேயத்தை சத்குரு தட்டியெழுப்புகிறார். இந்த காவேரி கூக்குரல்... ஒரு தலைமுறையாக நாம் உருவாக்கிய பிரச்சினையை நாம்தான் சரிசெய்ய வேண்டும். இது தண்ணீர் மட்டுமில்லை. இது உயிர். சத்குருவுடன் சத்சங்கம், இந்த பயணம் மிகமிக அற்புதமாக உள்ளது.

கிளம்புவதற்குத் தயாராகும் சத்குருவை சந்திக்க வந்திருக்கும் உள்ளூர் மக்கள்

day10-tb-cc-pic3-11

day10-tb-cc-pic3-13

பைக்கர்களும் தயாராகிவிட்டார்கள்

day10-tb-cc-pic3-12

day10-tb-cc-pic3-10

9:30 மணியளவில் மேச்சேரி பொதுமக்கள் கூட்டத்திற்கு செல்ல சத்குரு தயாராகி விட்டார். இன்று நித்யா அவர்கள் கிளம்புவதால், அதற்குமுன் சத்குருவோடு சில வார்த்தைகள்…

day10-tb-cc-pic3-1

day10-tb-cc-pic3-2

மேச்சேரி செல்லும் வழியில் கிராமவாசிகள் சத்குருவிற்காகக் காத்திருந்து அவருக்கு பொன்னாடை போர்த்தி, மலர்கள் அர்ப்பணித்து வழியனுப்புகிறார்கள். அவர்களை தாண்டி செல்ல எத்தனித்த சத்குரு அவர்கள் மீண்டும் அவர்களை அழைத்து அவர்களிடம் ஏதோ சொன்னார். அது... அவர்கள் ஊரில் இவ்வருடம் பிறக்கும் எல்லா பெண் குழந்தைகளுக்கும் காவேரி என பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். காவேரி அனைவரின் நினைவிலும் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்றார்.

day10-tb-cc-pic3-3

day10-tb-cc-pic3-4

 

இன்னும் சிறிது தூரத்தில் கிட்டத்தட்ட அரை கிமீ தூரத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று சத்குருவின் பைக்கிற்கு மஞ்சள் நீர் தெளித்து, பூக்களால் பூஜை செய்து, சத்குரு நலமுடன் பயணம் முடிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். அவர்களிடம் சத்குரு காவேரித் தாய் பற்றி சில வார்த்தைகள் பேசுகிறார்.

day10-tb-cc-pic3-6

day10-tb-cc-pic3-14

 

மலைப்பாதையின் நெளிவுகளிலும் சத்குரு வேகம் குறையாது செல்கிறார்...

 

மேட்டூர் அணையருகே சிறிது நேரம் நின்றபோது…

day10-tb-cc-pic4-7

வழியில் மற்றுமொரு கிராமத்தில்…

day10-tb-cc-pic4-8Day10-Changed-1

 

மேச்சேரி பொதுக்கூட்டத்தில் சத்குரு கலந்து கொள்கையில், நிறைந்திருக்கும் காவேரி நதியில் படகில் சிறிது நேரம் செல்லும் பங்கேற்பாளர்கள் …

day10-tb-cc-pic4-3

day10-tb-cc-pic4-1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

day10-tb-cc-pic4-2

day10-tb-cc-pic4-5

day10-tb-cc-pic4-6

day10-tb-cc-pic4-4

மேச்சேரியில் சத்குருவிற்கு வரவேற்பு

 

JSW ஆடிட்டோரியத்தில் சத்குருவை வரவேற்க ஏற்பாடுகள்

day10-tb-cc-pic6-1

day10-tb-cc-pic6-2

day10-tb-cc-pic6-12

day10-tb-cc-pic6-5

day10-tb-cc-pic5-2

day10-tb-cc-pic5-4

day10-tb-cc-pic5-5

day10-tb-cc-pic5-3Day10-Changed-2

பொதுமக்கள் கூட்டத்தில் சத்குரு. ஆங்கிலமா? தமிழா? என்று கேட்டதற்கு தமிழ் என்று பதில் வர, சத்குருவும் தமிழில் பேசுகிறார்.

day10-tb-cc-pic4-9

நான் காவேரி கரையில் பிறந்து வளர்ந்தேன். அவள் மடியில் வாழ்ந்த எத்தனையோ ஆயிரம் உயிர், பூச்சி, மீன் போல் நானும் இன்னுமொரு உயிரென்று உணர்ந்தேன். லட்சக்கணக்கான வருடங்களா வாழும் மகத்தான உயிர் அவள். நாமெல்லாம் சும்மா வந்து போகிறவர்கள்தான்.


2 வருடத்திற்கு முன் நதிகளை மீட்போம் பேரணிக்கு 50,000 பள்ளிகளுக்கு மேல் ஓவியப்போட்டி நடத்தினோம். அதில பல குழந்தைகள் ஆறு என்றால் காய்ந்த மணற்படுக்கையை வரைகீறார்கள். குழந்தைங்களுக்கு ஆறு என்றால் என்னவென்று கண்கூடாகப் புரியவேண்டும்.

2017ல் நதிகளை மீட்போம் பேரணியை இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொள்கை மாற்றம் கொண்டுவருவதற்காக நடத்தினோம். 16.2 கோடி மக்கள் ஆதர்வு கொடுக்க, 2.5 மாதத்தில கொள்கை மாற்றங்கள் கொண்டுவந்து அதைப் பின்பற்றுமாறு ஒரு பரிந்துரையை 29 மாநிலங்களுக்கு நிதி ஆயோக் அனுப்பி வைத்தது. இது நதிகளை மீட்போம் இயக்கத்தின் மாபெரும் வெற்றி.

ஆனால் அந்தப் பரிந்துரையை ஏற்று 5 மாநிலங்கள்தான் வேகமாக செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களில் விவாதத்திலேயே நேரம் கழிகிறது. அரசாங்கம் செயல்படத் தயங்குகின்றன. எதை செய்தாலும் அதில் 10 குறை கூறுவதற்கு தயாராக சிலர் இருக்கிறார்கள். செயல்படும் புத்தி இருந்தால் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். முன்வைக்கும் ஒவ்வொரு தீர்விலும் 10 குறைகள் கூறி செயல்பாட்டை தடுத்தால் என்ன மாற்றம் நிகழும்?

242 கோடி மரம் அதிகமான எண்ணிக்கையாக பலருக்கும் தெரிகிறது. நம் மக்கட்தொகை 130 கோடி. 5 வருடத்தில் ஒவ்வொருவரும் 2 மரம் நட முடியாதா? முடியும். சும்மா வாய்பேசி செய்யாமல் இருப்பவர்களுக்கும் சேர்த்து நாம் செய்வோம்!

JSW ஸ்டீல் வொர்க்ஸ் நிர்வாகக்குழு காவேரி கூக்குரலுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர்

day10-tb-cc-pic5-8

 

முழு நிகழ்ச்சியின் வீடியோ:

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sadhguru rides across the Mettur Dam. . . #CauveryCalling #CauveryDiaries #Sadhguru #Ride

A post shared by Sadhguru Cauvery Calling (@sadhguru) on

மேச்சேரி அருகே காவேரி பொறியியல் கல்லூரி தாண்டிச் செல்லும்போது மாணவர்கள் ஆரவாரம்

அடுத்ததாக கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் விவசாயி திரு.செந்தில்குமார் அவர்களின் வயலில் விவசாயிகளுடன் ஒரு சந்திப்பு நிகழவுள்ளது.

செல்லும் வழியில் அத்தாணி எனும் ஊரில் லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி சிறுவர்கள் சத்குருவிற்காக காத்து நிற்க, அவர்களுடன் பேச சில நிமிடங்கள் நிற்கிறார்.

Day1-Changed-3

 

Day1-Changed-4

 

 

விவசாயி செந்தில்குமார் அவர்களின் வயலில் சத்குருவிற்கு வரவேற்பு

Day1-Changed-5

(வலது)விவசாயி செந்தில்குமார் அவர்களுடன் சத்குரு

Day10-Changed-7Day10-Changed-8

செந்தில்குமார் அவர்கள்: மரத்தினிடையே ஊடுபயிராக மஞ்சள் வளர்த்ததால் மகசூல் இரண்டு பங்கானது. அதோடு மஞ்சளில் இருக்கும் குர்குமின் (curcumin) அளவும் அதிகரித்துள்ளது. இதனால் மற்ற மஞ்சள் 1 க்விண்டாலுக்கு ₹7,000 என்றால் என் மஞ்சள் ₹12,500 வரை போகிறது. அதேபோல் மற்ற வாழைகளுக்கு ₹200 கிடைத்தால் என் பண்ணையில் விளையும் வாழைகளுக்கு ₹300 விலை கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மரங்கள் இருப்பதால் கடும் புயல்காற்றிலும் என் வாழைகள் தப்பித்துக் கொள்கின்றன.

Day10-Changed-9Day10-Changed-10
Day10-Changed-11Day10-Changed-12

சத்குரு: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஒரு டீக்கடையில் டீ குடிக்க அமர்ந்தபோது, "டீயில் மஞ்சள் சேர்க்கவா? அதை சேர்த்துக்கொண்டால் புற்றுநோய் வராது, உடலும் ஆரோக்கியமாய் இருக்கும்" என்றார்கள். "ஓ! மஞ்சள் இந்தியாவில் இருந்து வரவழைத்தீர்களா?" என்று கேட்டேன். ஆனால் இந்திய மஞ்சளில் குர்குமின் அளவு குறைவாக இருப்பதால் வியட்நாம் அல்லது கம்போடியாவில் இருந்து வரவழைக்கிறோம் என்றார்கள். வியட்நாம் ஆட்களை விசாரித்தால் அவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். ஏனெனில் 30 ஆண்டுகளுக்கு முன் வியட்நாமில் இருந்து புதுடில்லி அருகேயுள்ள "பூசா விவசாய கல்லூரியில்" பட்டம் பெற்ற 30-40 வியட்நாம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற மஞ்சள், மாதுழை, கொய்யா ஆகியவற்றைதான் அங்கு விளைவிக்கிறார்கள், அதுவும் நாம் கற்றுக்கொடுத்த விவசாய முறைப்படி!

2016ல் மட்டும் அங்கிருந்து செய்யப்பட்ட பழ ஏற்றுமதியின் மதிப்பு 42,611 கோடி!

நாம் பயன்படுத்திய செயற்கை உரம் நம் மண்ணின் வளத்தை அழித்துவிட்டது. மண்ணில் சத்து இல்லை என்றால் அதில் விளையும் உணவில் எப்படி சத்து இருக்கும்? மரம் வளர்த்தால் மண்ணில் வளம் வரும். அதனால் மரவிவசாயத்தில் ஈடுபட உங்களுக்குத் தேவையான உரிமைகளுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். மரம் வளர்த்து, வெட்டி, வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று விற்கும் உரிமை ஒரு விவசாயிக்கு இருக்கவேண்டும். அதற்காகவும், அதில் ஈடுபடும் முதல் சில ஆண்டுகளில் குறையும் வருமானத்திற்கு ஈடாக சலுகை வேண்டியும், வெட்டுமர வாரியத்தை நிறுவ வேண்டியும் நீங்கள் பலமாக குரல் கொடுக்க வேண்டும் என்று சத்குரு கேட்டுக்கொண்டார்.

 

ஈரோட்டில் பொதுக்கூட்டம்

செல்லும் ஒவ்வொரு இடத்திலும் மக்களின் ஆர்வமும், ஆரவாரமும், ஈடுபாடும் திக்குமுக்காடச் செய்கின்றது. ஈரோடு பொதுக்கூட்டம் நிகழும் இடத்தில் கிட்டத்தட்ட 1 கிமீ நீளத்திற்கு மக்கள் இருபக்கமும் நின்று வரவேற்றனர். சத்குருவை உள்ளே அழைத்துச் சென்று, பின் நிகழ்ச்சி முடிந்து கூட்டத்தைக் கடந்து அவர் வெளியில் வருவதற்குமே மிகவும் சிரமமாகிப் போனது.

day10-tb-cc-pic7-1

day10-tb-cc-pic7-2

day10-tb-cc-pic7-3

சிறப்பு விருந்தினர்கள்

எக்செல் கல்விக்குழும நிறுவனர் திரு. AKநடேசன் அவர்கள் வரவேற்புரை

day10-tb-cc-pic6-10

சத்குருவின் பாதம் இங்கு பட்டது எங்கள் புண்ணியம். இந்த இடம் 126 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஏற்கெனவே 12,000 மரங்கள் நட்டுள்ளோம். இந்த வருடம் இன்னும் 50,000 மரங்கள் நடவுள்ளோம். இந்த இயக்கத்தை இப்போது மட்டுமல்ல இன்னும் 12 ஆண்டுகளுக்கு. உங்களோடு துணை நிற்போம்

உழவர் உழைப்பாளர் சங்கத் தலைவர் திரு.செல்லமுத்து அவர்கள்

day10-tb-cc-pic6-8

மனிதர்கள் கஷ்டப்படும்போது கடவுள் வருகிறாரோ இல்லையோ மனிதர் ரூபத்தில் உதவி கட்டாயம் கிடைக்கும். 20-30 ஆண்டுகளுக்கு முன் காவேரி, நொய்யல், அமராவதி ஆகிய நதிகள் ஆண்டுதோறும் தெளிவான நீர்வோட்டதுடம் இருக்கும். ஆனால் இன்று தண்ணீர் இல்லை, இருந்தால் மாசு கலந்துள்ளது, இயற்கையோ வளமிழந்துள்ளது. மண்ணையும், நதியையும், மக்களையும் காப்பாற்ற அப்படி ஒரு இக்கட்டான சூழலில் சத்குரு வந்திருக்கிறார்.

ஆற்றங்கரையில் மட்டுமல்ல, எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் மரம் நடவேண்டும் என்கிறார் சத்குரு. மரம்தான் பொருளாதாரம். இளைஞர் போல் உற்சாகமாக செயல்படும் இவர் முன்நிற்கையில் எல்லோரும் செயல்படுவோம். இவருடைய திட்டத்தைப் பின்பற்றினால் நாட்டில் பஞ்சமில்லை என்ற நிலை நிச்சயம் உருவாகும். இதற்காக நாங்கள் அனைவரும் உங்களுக்கு செயல்படுவோம். உங்களுக்கு ஒத்துழைப்போம். கைகோர்த்து நிற்போம். மரம் வளர்ப்போம், நதிகளை மீட்போம், மண்ணைக் காப்போம், உழவர்களைக் காப்போம்.

SKM குழும நிறுவனங்களின் நிறுவனர் பத்மஸ்ரீ SKM மயிலாநந்தன் அவர்கள்

day10-tb-cc-pic6-7

காவேரியில் இருந்து நீர் குடிச்சா நலமோடு வாழலாம் என்று காவேரியில் தண்ணீர் குடிக்கச் செல்வோம், ஆனால் இப்போது காவேரிக்கு போகவேண்டுமென்றால், நாம் குடிக்க கையில் தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டிய நிலை. இதை இந்தளவிற்கு கொண்டுவந்தது, கெடுத்தது நாம்தான். இதை சரிசெய்து கொடுக்க சத்குருவால் மட்டுமே முடியும். 
 

மின்சாரத்துறை அமைச்சர் திரு.P.தங்கமணி அவர்கள்

day10-tb-cc-pic6-6

இது வரலாற்றில் இடம்பெற வேண்டிய மயில்கல். மனமிருந்தாலும் பலரால் அவரவர் வாழ்க்கை, வேலை மட்டுமே செய்ய முடிகிறது. இதுபோன்ற பொதுநல சமூகசெயல் இவரால்தான் செய்யமுடியும். அமைச்சரான பின்தான் தண்ணீர் எவ்வளவு பிரச்சினை என்பது தெரிகிறது. தண்ணீருக்காக, தண்ணீரின்றி அவதியுறும் மக்களுக்காக போர்வெல் போடுவதற்கு மட்டுமே 2000 கோடி ரூபாய் செலவிடுகிறோம். 100 அடியில் இருந்த தண்ணீர் இப்போது 1500 அடியிலும் கிடைப்பதில்லை. மரம் இல்லாமல் போனதால் இந்த சூழ்நிலை. எதிர்கால சந்ததியினர் வாழ்க்கை நலமோடு அமைய சத்குருவின் இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும். இது சத்குருவிற்கு மட்டுமல்ல நமக்கும்தான். எங்களால் முடிந்ததை கட்டாயம் செய்கிறோம்.
 

பள்ளி, கல்வித்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. S.A.செங்கோட்டையன் அவர்கள்

day10-tb-cc-pic6-9

இதை நாம் அனைவரும் நிச்சயம் செய்யவேண்டும். முதல்வரின் சம்மதத்தோடு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் 2 மரம் நடுவதற்கு முயற்சிகள் எடுப்பேன். சிவன் நினைப்பதை எல்லாம் சாதிப்பாராம். சிவனின் பக்தரான உங்களுக்கும் நீங்கள் நினைப்பதெல்லாம் வெற்றியாகும்.
 

சத்குரு:

day10-tb-cc-pic6-11

விவசாயிகள் சும்மா ஏதோ வங்கிக்கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார் என்கிறார்கள். அது நிஜமல்ல. மண் வளமாக இருந்து, தண்ணீர் இருந்தால், எப்படியாவது விவசாயம் செய்து அவர் கடன் அடைத்துவிடுவார். உயிரற்றுப்போன மண்ணும், நீரற்றுப் போன வயலும் வைத்து குடும்பத்திற்குக் ஒருவேளை உணவுகூட கொடுக்க முடியாததால்தான் அவர் தன் உயிரை எடுத்துக் கொள்ளத் துணிந்தார். இது ஒன்றும் சாமான்யமல்ல. அவரது வலி, வேதனை, துயரம் எந்தளவிற்கு ஆகியிருந்தால் இதுபோன்ற ஒரு முடிவை அவர் எடுத்திருப்பார். அதுவும் ஒருவர் இருவர் அல்ல. 3 லட்சம் பேர். அதில் காவேரிக் கரையில் மட்டும் 47,000 பேர்.

இது நமக்கு அசிங்கம். இதைவிட மோசமாக என்ன நடக்க வேண்டும்? நமக்கு கொஞ்சம் மனிதநேயம் இருந்தாலும் இந்த நிலையை நாம் மாற்றவேண்டும். வாயில் உணவு வைக்கும் முன் நமக்கு உணவளித்த விவசாயி உணவில்லாமல் இருக்கிறார், அவர் நிலையை மாற்றவேண்டும் என்ற உணர்வோடு உங்கள் உணவை உண்ணுங்கள்.

100 வருட காலத்தில் பெய்யும் மழையில் மாற்றம் ஒன்றும் பெரிதாக இல்லை, ஒன்றிரண்டு ஆண்டுகளைத் தவிர அதேயளவு மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த நீர் பூமிக்குள் செல்லாமல் மேலோட்டமாக ஓடிவிடுகிறது.ஆறு, ஏரி, கிணறு ஆகியவை நீருக்கு மூலமில்லை. மழை மட்டும்தான் மூலம்.  மழையில் வரும் தண்ணீர்தான் இவற்றில் சேர்த்து வைக்கப்படுகிறது. அணைகளிலும் சேர்க்கலாம்... தேவையிருந்தால். ஆனால் எல்லா இடங்களிலும் அணைகள் சரியாக இருக்காது. இது எல்லாவற்றையும்விட முக்கியமாக தண்ணீரை மண்ணில்தான் சேர்க்க வேண்டும். உலகில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் இருக்கும் தண்ணீரின் அளவைவிட 8 மடங்கு தண்ணீரை சேமிக்கும் திறன் மண்ணிற்கு உண்டு. மண் தண்ணீரை சேமிக்கவேண்டும் என்றால் அதில் உயிர்மச்சத்து வேண்டும். அதற்கு மரத்தின் இலை, தளைகளும், ஆடு-மாடுகளின் சாணமும் வேண்டும். இப்போது மண்ணின் உயிர்மச்சத்து 0.6%தான் இருக்கு. குறைந்தது 2% இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல மரத்தின் வேர்களும் தண்ணீர் மண்ணில் ஊடுறுவிச் செல்ல உதவும்.

242 கோடி மரங்கள் வைத்தால் இந்நிலை மாறும். இது எப்படி மாறும் என்று தெளிவாக நம் இணையத்தில் குறிப்பிட்டுள்ளோம். அதில் 5 point படித்து 100 பேருக்கு புரியவைத்து மரவிவசாயம் பரவ வழிசெய்யுங்கள்.

day10-tb-cc-pic6-13

day10-tb-cc-pic6-14

Day10-Changed-10

 

Day10-Changed-11



ஈரோடு குமாரம்பாளைய நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நம் குழு அடுத்து பயணப்படும் இடம் காங்கயம்பாளையத்தில் உள்ள நட்டற்றீஸ்வரர் கோவில். இங்கிருக்கும் லிங்கத்தை அகஸ்தியர் அவர்களே பிரதிஷ்டை செய்தார் என்று சத்குரு கூறினார்.

day10-tb-cc-pic8-2

day10-tb-cc-pic8-4

தரிசனம் முடித்துவந்த சத்குரு அவர்கள் கிட்டத்தட்ட 2-3 நிமிடங்களுக்கு கைகூப்பி மௌனமாக நின்றிருந்தார். அவர் கண்களில் நீர் பெருகியது. அவரது இருப்பின் தீவிரத்தில் பங்கேற்பாளர்கள் உணர்ச்சிமிகுந்து காணப்பட்டார்கள்.

day10-tb-cc-pic8-1

day10-tb-cc-pic8-3

தங்குமிடத்தில் இவர்களுக்காக மீண்டும் விருந்து தயாராக இருந்தது. 25 விதமான உணவு என்கிறார்கள். தமிழ்நாடு, கான்டினென்டல், மங்கோலிய வகையிலும் உணவு சமைத்திருந்தார்களாம்.

Day10-Changed-12

 

Day10-Changed-13

 

Day10-Changed-16

 

Day10-Changed-17

 

Day10-Changed-15

 

Day10-Changed-14

 

இரவு சத்சங்கம் மீண்டும் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்த நட்டாற்றீஸ்வர் கோவிலில்…

day10-tb-cc-pic8-5

day10-tb-cc-pic8-6

நாள் 10 நிகழ்வுகளின் தொகுப்பு

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்