Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
மனம் என்பது மோசமான எஜமான். ஆனால் அது அற்புதமான அடிமை, அதை அப்படித்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.
பக்தி என்றால் வழிபாடு செய்வது என்று அர்த்தம் அல்ல. பக்தி என்றால் ‘நான்’ என்பது இல்லாமல் போவது.
யோகா என்பது ஓயாத சக்தியின் மூலத்தோடு நாம் இணைந்து கொள்வதை பற்றியது.
உங்கள் உயிரை எடுப்பது நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் அல்ல, கவனமற்ற எண்ண ஓட்டத்தில், உணர்ச்சி வசத்தில் நீங்கள் இருப்பதுதான்.
மனிதர்கள் ஒன்றும் பயன்படுத்தப்படுவதற்காக இங்கு இல்லை. நாம் பகிர்ந்து கொள்ளவும், அன்பு செலுத்தவும்தான் மனிதர்கள். பொருட்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் – மனிதர்கள் அல்ல.
மனிதராக இருக்கும் நமக்கு, நட்சத்திரங்களும் கோள்களும் நம் வாழ்க்கையின் அனுபவத்தை நிர்ணயிக்க தேவை இல்லை. உங்களுக்குள் நிகழும் அனுபவத்தை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.
தாய்மையின் அழகு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வதில் அல்ல, இன்னொரு உயிரை தனக்குள் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ளும் அந்த விருப்பத்தில்தான் இருக்கிறது.
நல்லது என்பது நாமாக நினைத்துக்கொள்ளும் ஒரு நிலை. மகிழ்ச்சி என்பது உண்மையான ஒரு அனுபவம்.
வளர்ந்து நின்று பிரகாசமாக ஒளி வீசுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், பூரிப்பாகவும் இருக்கும்போது, மனிதர்கள் இயல்பாகவே உங்கள் மீது நேசம் கொள்வார்கள்.
உடலும் மனமும் அதிசயமான கருவிகள். ஆனால் அவை மகத்தான விதத்தில் செயல்பட, அதை சரியான விதத்தில் கையாள நீங்கள் கற்றுக்கொள்வது அவசியம்.
மனிதனின் வாழ்க்கை வெறுமனே பிழைத்து இருப்பதுடன் முடிந்து போவதில்லை. பிழைப்பிற்கான தேவைகள் பூர்த்தியான பிறகுதான் மனித வாழ்க்கையே ஆரம்பம் ஆகிறது.