FILTERS:
SORT BY:
காலபைரவர் மரணத்தைப் பற்றியவர் மட்டுமல்ல — அவர் காலத்தைப் பற்றியவர். அடிப்படையாக, உங்கள் காலத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கையின் தரம் அமைகிறது.
நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றியும் மகிழ்ச்சியும் வேண்டும் என்றால், தெளிவாக உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
தியானம் என்பது ஒரு சாதனையோ, ஒன்றை வெற்றி கொள்வதோ அல்ல – வீடு வந்து சேர்வது. இது எங்கேயோ போவதை பற்றியது அல்ல – திரும்பி உங்களுக்குள்ளே விழுந்துவிடுவது, அவ்வளவுதான்.
பூக்களுக்கு வாசம் போலதான் மனிதர்களுக்கு அன்பும்.
உங்கள் வாழ்க்கை சூழ்நிலை எதுவாக இருந்தாலும், துன்பப்பட எந்த ஒரு காரணமும் இல்லை. எதுவுமே இல்லாமல் வந்தீர்கள், அதனால் எப்போதும் லாபத்தின் பக்கம்தான் இருக்கிறீர்கள்.
உங்கள் குழந்தைகளுக்காக நெஞ்சில் கொஞ்சமாவது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம் - உங்களை மேம்படுத்திக் கொள்வதுதான், அவர்களுக்கு போதனை தருவது அல்ல.
வாழ்க்கைக்கான மூலப்பொருட்கள் மட்டுமே உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை கொண்டு என்ன உருவாக்குவது என்பது உங்கள் கையில் இருக்கிறது.
உங்களுக்குள் நீங்கள் நிசப்தமாக ஆகிவிட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத விதத்தில் வாழ்க்கையை உணர்வீர்கள் - அதன் முழு ஆழத்தில் உணர்வீர்கள்.
உங்கள் நெஞ்சில் அன்பு இருந்தால், பரிவு என்பது தேவை இல்லை. வாழ்க்கை முழுவதும் அன்பே உங்களை வழிநடத்தும்.
ஏற்றத்துக்கு விலை உண்டு, விழுவது இலவசம்தான். நீங்கள் ரம்யமான சூழலுக்குள் விழ கற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான் - இருப்பதிலேயே ரம்யமான இடம் உங்களுக்குள்தான் இருக்கிறது.