FILTERS:
SORT BY:
தரையில் கால்தடத்தை உறுதியாக பதித்து விட்டுப் போக ஆசைப்படுபவர்கள் ஒருபோதும் பறக்க மாட்டார்கள்.
உங்கள் மனம் கூர்மையாக இருக்க வேண்டும் – இல்லாவிட்டால் ஜோக்கை மிஸ் பண்ணிவிடுவீர்கள். ஜோக்கை மிஸ் பண்ணிவிட்டால், நீங்களே "ஜோக்" ஆகிவிடுகிறீர்கள்.
சாதனாவை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டாம். இன்றைக்கு மட்டும் செய்யுங்கள்.
இன்னொருவரிடமிருந்து நீங்கள் சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயற்சி செய்து, அவரும் உங்களிடமிருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க பார்த்தால், காலப்போக்கில் அந்த உறவு வலி நிறைந்ததாக ஆகிவிடும்.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வெற்றி அடைய விரும்புகிறீர்கள். நீங்களாகவே உங்களுக்குள் சந்தோஷமாக இருப்பது எப்படி என்பதை உணர்ந்துவிட்டால், எப்போதுமே நீங்கள் "வெற்றிகரமானவர்"தான்.
மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு என அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும் – அடிப்படையில், உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு எதிராக திரும்பிவிட்டது, அவ்வளவுதான்.
செயல் என்பது கர்மா; அதைப் போலவே, செய்யாமல் இருப்பதும் கர்மாதான்.
சமூகத்தில் சாமர்த்தியசாலியாக இருந்தாலும், வாழ்க்கையைப் பொருத்தவரை நீங்கள் அடிமுட்டாளாக இருக்க முடியும்.
ஆரோக்கியம் என்றால் நோய் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல – உங்களுக்குள் நீங்கள் ஒரு முழுமையை உணர்வதாகும் .
ஒருவரை நீங்கள் சந்திக்கும் போது, உங்களின் இனிமை மிக்க பகுதி மட்டுமே அவர்களை தொட வேண்டும்.