வெற்றி குறித்த சத்குருவின் வாசகங்கள் (Success Quotes in Tamil)
உங்கள் கவனம் இடைவிடாமல் நிலைத்திருக்கும் போது, அடைய முடியாத, உணர முடியாத அல்லது செய்ய முடியாத விஷயம் என்ற ஒன்றே இருக்காது.
உங்கள் ஆசைகளை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டால் வாழ்க்கையை சிரமமில்லாமல், அழகாக, சிறப்பாக கடந்து போவீர்கள்.
தகுதிகள் உங்களை உள்ளே நுழைய மட்டுமே அனுமதிக்கும். மொத்தத்தில் திறமை மட்டும்தான் வேலை செய்யும்.
வாழ்க்கையில் உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் சரி, அதை அடைந்துவிட தீவிர அவசர உணர்வை நீங்கள் உருவாக்கிக் கொள்ளாவிட்டால், நெருக்கமாக இருக்கக்கூடியது கூட தொலைதூரத்தில் இருக்கும்.
நீங்கள் குறிக்கோளின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்தால், பாதையை கண்டறிய ஒரு கண் மட்டுமே இருக்கும். இது வாழ்க்கையில் வழிகண்டு முன்னேற பயனுள்ள முறை அல்ல.
வெற்றி என்பது ஏதோ ஒன்றை அடைவது பற்றியது அல்ல. உங்களுக்குள் இருக்கும் உயிர் அற்புதமான விதத்தில் நிகழ்வது தான் வெற்றி.
நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், அதற்கு நீங்களே ஒரு தடையாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான விஷயம்.
மொத்தத்தில், உங்கள் வாழ்க்கையில் வெற்றி என்பது நீங்கள் எந்த அளவிற்கு தெளிவுடன் இருக்கிறீர்கள் என்பதை பொருத்தது.

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
எந்த ஒரு செயலை செய்தாலும் எவருக்குமே வெற்றி என்பது அருள் இல்லாமல் வராது.
நீங்கள் விரும்புவதால் மட்டுமே உங்களுக்கு வெற்றி வந்துவிடாது. நீங்கள் சரியான விஷயங்களை செய்வதால் தான் உங்களுக்கு வெற்றி வரும்.
எங்கு நேர்மை இருக்கிறதோ அங்கு நம்பகத்தன்மை இருக்கும். எங்கு நம்பகத்தன்மை இருக்கிறதோ அங்கு வெற்றிக்கான சூழ்நிலையும் இருக்கும்.
வெற்றியை எப்போதும் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே அளவிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்க்கையின் தரத்தை வைத்து தான் அதை அளவிட வேண்டும்.
நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நூறு சதவீதம் பொறுப்பேற்றுக் கொண்டால், பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் சாத்தியம்.
புதிய சவாலான சூழ்நிலைகள் பிரச்சனைகள் அல்ல, சாத்தியங்கள். உங்களுக்கு புதிதாக ஒன்றுமே நடக்கவில்லை என்றால் தான் பிரச்சனை.
மாற்றத்தை ஏற்க மறுத்தால், நீங்கள் வாழ மறுக்கிறீர்கள்.
சூழ்நிலைகள் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்காமல் - சூழ்நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கும் நிலைதான் வெற்றி என்பது.
நீங்கள் வெற்றியை அனுபவிக்க விரும்பினால், வெளி சூழ்நிலைகளை வடிவமைப்பதற்கு முன் உங்களை நீங்கள் வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் எந்த அளவிற்கு வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்பது எந்த அளவிற்கு உங்கள் உடலையும் மனதையும் நீங்கள் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதை பொறுத்தது.
அதிர்ஷ்டத்தின் மூலம் விஷயங்களை சாதிப்பவர்கள் அதை இழந்துவிடுவோமோ என்ற பயத்திலேயே எப்போதும் வாழ்வார்கள்.
முக்கியமில்லாத விஷயங்களின் மீது உங்கள் நேரத்தையும் வாழ்க்கையையும் வீணாக்காதீர்கள். உங்களுக்கு உண்மையாகவே எது முக்கியமானதோ அதற்கு நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் இருங்கள். இன்றே இருங்கள், நாளை அல்ல.
p>
தொடர்புடைய பதிவுகள்:
வெற்றி பெற்றவர் வாழ்க்கை... அப்படியே பின்பற்றலாமா?
இன்று பலர் வெற்றிபெற்ற பிரபலங்களை பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் துவங்கியுள்ளனர். சங்கரன் பிள்ளை நகைச்சுவைகளை கூறி, உண்மையில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!
விதி, கடவுள், அதிர்ஷ்டம், முயற்சி...வெற்றிக்கு எது முக்கியம்?
வாழ்க்கையில் வெற்றி பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்று சத்குரு இந்த வீடியோவில் கூறுகிறார்.
வெற்றியின் ரகசியம்
உண்மையாகவே வெற்றிகரமாக இருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும், நம் மனதில் எதை வெற்றி என்று நாம் நினைக்கிறோமோ அது உண்மையில் குறுகிய எல்லைக்குட்பட்டதாக இருக்கக்கூடும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.