Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
திருமணம் என்பதை நிறுவப்பட்ட ஒரு கட்டமைப்பாகப் பார்த்தால், அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று மனிதர்கள் தவிப்பது இயல்புதான்.
உங்களுக்குள் நீங்கள் நலமாக இருப்பதை கடவுளே கூட தீர்மானிக்க முடியாது. எனக்கு நானே துன்பம் உருவாக்கிக்கொள்ள மாட்டேன் என்று இருந்துவிட்டால், பிறகு எவராலும் நமக்குத் துன்பம் ஏற்படுத்த முடியாது.
உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் இருப்பதன் அர்த்தமே அதுதான்.
இந்த பூமியை அழித்துக் கொண்டிருப்பது ஏதோ சில கொடூரமான மனிதர்கள் அல்ல – சந்தோஷத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தான்.
உறுதியான நம்பிக்கையும், முட்டாள்தனமும் ஒன்றாக இருப்பது மிகவும் ஆபத்தான காம்பினேஷன். ஆனால், பெரும்பாலும் இரண்டும் சேர்ந்துதான் இருக்கிறது.
உங்கள் ஞாபகங்களை அல்லது கற்பனைகளை நினைத்து நீங்கள் துன்பப்படும்போது, இப்போது இங்கே இல்லவே இல்லாத ஒன்றைத்தான் துன்பமாக அனுபவிக்கிறீர்கள்.
உங்களுக்குள் இனிய நிலையில் இருந்தால், அது வெளிச் சூழ்நிலைகளை அற்புதமானதாக ஆக்கும். ஆனால், உங்களுக்குள் நீங்கள் நன்றாக இல்லை என்றால், வெளியில் வசந்தமாக இருந்தாலும் அதைத் துன்பமாகவே உணர்வீர்கள்.
அமைதியும் சந்தோஷமும் வாழ்க்கையின் முடிவில் அடையும் விஷயங்கள் அல்ல. வாழ்க்கையின் அடிப்படையே அதுதான்.
அன்பு என்றால் தன்னைத் தானே கரைத்துக்கொள்வது. நீங்கள் கரைந்து விழுவதில்தான் அது நிகழ்கிறது, கணக்குப் போடுவதிலும் வசதிக்காகவும் நிகழ்வதில்லை.
உயிர் அனைத்தையும் தனக்குள் ஒன்றாக அரவணைத்திருக்கிறது. உங்கள் மனம் மட்டும்தான் தனிப்பட்டுப் பிரிந்திருக்கிறது.