இன்னொரு உத்தராயணம் வந்துவிட்டது. யோகிகள் தங்கள் ஆன்மீகப் பாதையில் புதியதொரு துவக்கம் செய்ய முயலும் பருவமிது. இது அருளுக்கும் ஞானத்திற்குமான காலம். பழங்காலம் முதல் எண்ணற்ற மனிதர்கள் தங்கள் உடலை உதிர்த்துவதற்கு, சூரியனின் ஓட்டம் வடக்கு நோக்கி நகரும் இந்த காலத்தையே தேர்ந்தெடுத்ததனர். இதற்கு ஒரு உதாரணம் பீஷ்மர், போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் இருந்தபடி அவர் உத்தரயாணத்திற்கு காத்திருந்து உயிர்நீத்தார். உத்தராயணத்தின் முதல் பௌர்ணமியன்று விஜி மஹாசமாதி அடைந்தாள்.

‘சமா’ என்றால் சமநிலை. ‘தி’ என்றால் புத்தி. எனவே ‘சமாதி’ என்றால் ‘சமநிலையான புத்தி’. சமநிலையான புத்தி என்றால் ‘நல்லது - கெட்டது’, ‘உயர்ந்தது - தாழ்ந்தது’, ‘மகிழ்ச்சி - வேதனை’, ‘வலி - இன்பம்’ என்று பிரித்துப் பார்க்காத புத்தி. மஹாசமாதி என்றால் ‘மகத்தான சமநிலை அடைந்த புத்தி’ - அதாவது புத்தியின் உச்சகட்ட சமநிலை. உங்கள் புத்தி, வெளி உள்ளீடுகள் மொத்தத்தையும் இழந்துவிட்டது என்று அர்த்தம்.

தற்போது உங்கள் புத்தி இயங்குவது வெளி உள்ளீடுகளால் தான் - நீங்கள் வாசித்தது, கேட்டது, சேகரித்தது. உங்கள் மனதில் உள்ள இந்த தகவல்கள் தான் உங்களை புத்திசாலி போல தோன்றச் செய்கிறது. உங்கள் ஞாபகப் பதிவுகளை நீங்கள் புத்திசாலித்தனம் என்று காட்டிக்கொள்கிறீர்கள், அது புத்திசாலித்தனம் இல்லை. உங்கள் ஞாபகப் பதிவுகளுடன் உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக்கொண்டால், சமநிலை என்பது சாத்தியமில்லை.

உங்கள் ஞாபகப் பதிவுகளுடன் உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக்கொண்டால், சமநிலை என்பது சாத்தியமில்லை.

இந்த ஞாபகங்கள் முற்சார்புடன் சேகரிக்கப்பட்டுள்ளதால் - “எனக்கு இவரைப் பிடிக்கும் - எனக்கு அவரைப் பிடிக்காது; இவர் நல்லவர் - அவர் கெட்டவர்; இது சரி - அது சரியில்லை” போன்ற முடிவுகள், மற்றும் முற்சார்புகள் அனைத்தும் ஞாபகத்தின் விளைவே. எல்லாவற்றுக்கும் ஏதோவொரு முத்திரை குத்திவிடுகிறீர்கள்: ‘நல்லது - கெட்டது; பிடித்தது - பிடிக்காதது; உயர்ந்தது - தாழ்ந்தது; கடவுள் - சாத்தான்’.

நீங்கள் சுமக்கும் ஞாபகக் கிடங்குடன் உங்களை நீங்களே அடையாளப் படுத்தும்வரை, சமநிலை என்பது சாத்தியமில்லை. சமாதி என்பது சமநிலையான புத்தி. அப்படியானால் உங்கள் புத்தியை நீங்கள் ஞாபகத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். உங்கள் புத்தி ஞாபகப்பதிவிலிருந்து விடுபட்டால், அது சற்று காலம் போராடும். ஓரளவு ஆன்ம சாதனை செய்தபிறகு, திடீரென உங்கள் ஞாபகப் பதிவுகள் அர்த்தமற்றுப் போகும். விடுதலை என்பது புரியாப் புதிரானது.

அனைவரும் தாங்கள் விடுதலை தேடுவதாகச் சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் பிணைப்பையே தேடுகிறார்கள். அனைவரும் தங்களை ஏதோவொன்று அல்லது யாரோ ஒருவருடன் பிணைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர். ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தன்னை பிணைக்கப் பார்த்தாலோ, பெண் ஆணுடனோ, ஒருவர் கடவுளுடனோ, ஒரு கட்சியுடனோ, ஒரு கொள்கையுடனோ, ஒரு தத்துவத்துடனோ, ஒரு நம்பிக்கை முறையுடனோ, அல்லது இப்போது ஈஷாவுடனோ - இப்படி உங்களை நீங்கள் எதனுடன் பிணைத்துக் கொண்டாலும், நீங்கள் ஏதோவொரு அர்த்தம் தேடவே உங்களை பிணைத்துக் கொள்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் ஞாபகத்தை அழிக்கும் ஏதோவொன்றுடன் உங்களை நீங்கள் பிணைத்துக்கொண்டால், அது நல்ல பிணைப்பு. நல்லதொரு ஆரம்பத்திற்கு அது நல்ல பிணைப்பு, ஏனென்றால் அது உங்களுக்கும் உங்கள் கடந்தகாலதிற்கும் இடையே ஒரு இடைவெளி உருவாக்குகிறது. பிரம்மச்சரியம் அல்லது சந்நியாசம் என்றால் இதுதான் - உங்கள் புத்தி சமநிலையானதால் உங்கள் ஞாபகத்திடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிவிட்டீர்கள்.

உங்கள் வேதனைக்கு முடிவு தேட மஹாசமாதியை நாடாதீர்கள். மஹாசமாதி நாடுவது என்றால், உயிரை வேறொரு பரிமாணத்திற்கு பரிணமிக்க வைப்பது எப்படி என்று பார்ப்பது.

உங்கள் ஞாபகப்பதிவுகளுடன் உங்களை நீங்கள் பிணைத்திருந்தால், நீங்கள் சமநிலையை உணரவேமாட்டீர்கள். இது ஆக்சிலரேட்டரில் காலை அழுத்திக்கொண்டு, வண்டி நிற்கும் என்று எதிர்பார்ப்பது போன்றது - அது நிற்காது. அது இன்னும் இன்னும் வேகமாகத்தான் போகும்! மஹாசமாதி என்பது ஒருவர் அடையக்கூடிய பரிசு இல்லை. மஹாசமாதி என்பது வேதனை, நோய், இயலாமை, அல்லது வலியால் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான வழியல்ல. அப்படி வாழ்க்கையை முடுத்துக்கொள்வது தற்கொலை என்றே அழைக்கப்படுகிறது, மஹாசமாதி இல்லை.

உங்கள் வேதனைக்கு முடிவு தேட மஹாசமாதியை நாடாதீர்கள். மஹாசமாதி நாடுவது என்றால், உயிரை வேறொரு பரிமாணத்திற்கு பரிணமிக்க வைப்பது எப்படி என்று பார்ப்பது. மஹாசமாதி நாடுவது என்றால், நீங்கள் வாழ்க்கை மீது மிகுந்த காதல்வயப்பட்டு, அதன் ஆணிவேரையே அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அதன் முழு ஆழத்தில் உணர்ந்துவிட்டதால், உயிரின் பிற பரிமாணங்களை அறிந்துணர விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுக்கு ஏக்கம் இருப்பதால் அது வராது. உங்கள் ஞாபகப்பதிவுகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிவிட்டால் - பல நேற்றுகளின் குவியலிலிருந்து வரும் அபத்தமாக இல்லாமல், இன்றை இன்றாக வாழ்வீர்கள். அதை அடைவதற்கு ஏற்கனவே பல வழிமுறைகளை உங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளோம். சூழ்நிலைகளை சரியாக உருவாக்கி, ஷாம்பவி மஹாமுத்ரா எனும் எளிய யோகப்பயிற்சி செய்வதே உங்களை அந்நிலைக்கு இட்டுச்செல்ல முடியும், நீங்கள் வேறெதுவும் செய்யத் தேவையில்லை.

நீங்கள் ஷாம்பவி தீட்சை பெற்றிருந்தால், உங்களிடம் இதை கூறியுள்ளோம்: “நீங்கள் ஷாம்பவி பயிற்சி செய்வதற்கு முன்பு ஈஷா யோகா கருவிகளை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.” ஏனென்றால் சரியான சூழலை உருவாக்காமல், நீங்கள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளாமல் படகில் துடுப்புப் போட்டால், பருவம் மாறுவதால் சுற்றியுள்ள காட்சி மாறலாம், ஆனால் நீங்கள் எங்கும் நகரமாட்டீர்கள்.

மாற்றம் நிகழ்கிறதென்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளலாம், ஆனால் எதுவும் மாறாது. ஞாபங்கங்களின் கிடங்கில் கட்டுண்டிருப்பதால் நீங்கள் அதே இடத்தில இருப்பீர்கள். நம் கலாச்சாரம் முழுவதும் கர்மவினை பற்றி பேசுவதும், “ஐயோ கர்மா!” என்று சொல்வதும் இதனால்தான் - ‘ஐயோ கர்மா’ என்றால் ‘நான் இந்த ஞாபகக் குவியலின் மூட்டையை இழுத்துச்செல்கிறேனே!’ என்கிறீர்கள், ஆனால் விடுதலையை விரும்புகிறீர்கள். நான் உங்களிடம் “போவோம் வாருங்கள்!” என்று சொன்னால், “என் மூட்டையை என்ன செய்ய?!” என்பீர்கள். இந்த மூட்டை தான் ஒரே பிணைப்பு, உங்களை இங்கு பிணைத்து வைத்தியிருப்பது வேறெதுவும் இல்லை.

கர்மா தான் ஒரே பிணைப்பு. ஆனால் உங்கள் கடந்தகாலத்தை விட்டுவிட்டு இங்கே சும்மா அப்படியே இருக்க நீங்கள் விருப்பமாக உள்ளீர்களா? இல்லை, நீங்கள் நடந்து முடிந்தவை அனைத்தையும் சுமக்க விரும்புகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்தையும் இளமையையும் திரும்பப் பெற்றுவிட்டால், நீங்கள் மறுபடியும் அதே விஷயங்களைச் செய்வீர்கள். உங்களில் பலர் நிச்சயமாக உங்கள் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் உங்கள் துணைவி அல்லது துணைவரிடம், “நான் இன்னும் ஏழு ஜென்மம் வந்தாலும், உன்னுடனே வாழ விரும்புகிறேன்!” என்று கூறியிருப்பீர்கள்.

உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்யாவிட்டால், நான் எப்படி உங்களுக்கு உதவுவது?

“எத்தனை ஜென்மமானாலும்” என்று உங்களுக்கு பல பாடல்கள் தெரியும். அது உண்மையானால் மிகக் கொடூரமாகிவிடும். அது உண்மையாகவில்லை என்றால் அது விவேகம். இதை உங்கள் கைகளில் நான் விட்டுவிடுகிறேன். நீங்கள் வேதனைப்படுவதால் மஹாசமாதிக்கு ஆசைப்படக்கூடாது. நீங்கள் நிறைவாக இருப்பதால், இதைத் தாண்டி பிற பரிமாணங்களுக்குச் செல்ல விரும்பவேண்டும். நீங்கள் இதை ‘போதும் போதும்’ என்ற அளவு அனுபவித்துவிட்டீர்கள். கடந்தகாலத்தில் என்ன நடந்திருந்தாலும் அது பொருட்டில்லை. நீங்கள் மேலானது என்று ஏதோவொன்றை நினைப்பதால்தான் வேதனைப்படுகிறீர்கள்.

ஞாபகக்குவியலை இங்கு விட்டுவிடுங்கள், காலையில் எழுங்கள் - சூரியன் புத்தம்புதிதாய் இருக்கிறது. காற்று புத்தம்புதிதாய் இருக்கிறது, எல்லாம் புதிதாய் உள்ளது - அதை உள்ளபடியே அனுபவியுங்கள். நீங்கள் செய்யும் எளிய பயிற்சிகளை மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் செய்யுங்கள். விடைபெறும் நேரம் வரும்போது, நீங்கள் நல்லபடியாக விடைபெறுவதை நான் உறுதிசெய்கிறேன். இது நான் செய்யும் சத்தியம்.

ஆனால் இந்த வாழ்க்கை வேதனையாகிவிட்டது என்று இதிலிருந்து விடுபட விரும்பாதீர்கள். உங்கள் அனுபவத்தில் வேதனையுடன் நீங்கள் சென்றால், அதுவே பலவிதங்களில் பெருகிவிடும். உங்களுக்கு நீங்களே அப்படி செய்துகொள்ளாதீர்கள். நீங்கள் இங்கு வந்திருப்பது உங்கள் வேதனையைப் பெருக்குவதற்கு அல்ல, அதை சுருக்குவதற்கே! உங்களால் முழுமையாகக் கரைக்க முடியாவிட்டாலும், அதை குறைந்தபட்சதிற்கு சுருக்கப் பாருங்கள்.

இது நீங்கள் செய்யவேண்டிய ஒன்று, ஏனென்றால் உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்யாவிட்டால், நான் எப்படி உங்களுக்கு உதவுவது? உங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்தால், நீங்கள் செய்யமுடியாத சில விஷயங்கள் உள்ளன, ஏனென்றால் அவை உங்கள் அனுபவத்திலேயே இல்லை. அந்த விஷயங்களை நான் உங்களுக்கு 100% உறுதியாகச் செய்வேன்.

அன்பும் அருளும்,