ஒன்றுதான் ஒன்றேதான்

தெள்ளிய ஒலியெழுப்பும்
புள்ளினத்தின் வாசத்தை சுமந்தபடி
ஒளிபுக புலரும் காலை!

அவை கூறும் சங்கேத மொழிகள்
எங்களுக்கு இடையில் மட்டுமே...
சாதாரண உலகியல் தேவைகள் தானென்றோ
எண்ணிடலாம் நீங்கள்

வானும் புள்ளினமும் கூறுவது
ஒன்றைத்தான், ஒன்றையேத்தான்
வளமையும் வறட்சியும் கூறுவது
ஒன்றைத்தான், ஒன்றையேத்தான்
பூவும் பாறையும் கூறுவது
ஒன்றைத்தான், ஒன்றையேத்தான்
அசைபவை அசையாதவை என
உயிர்கள் அத்தனையும் கூறுவது
ஒன்றைத்தான், ஒன்றையேத்தான்

ஓ ஷம்போ! இம்மூடர்களை எவ்வாறு உணர வைப்பது :
நீயும் நானும்
ஒன்றுதான் ஒன்றேதான் என்று.

Love & Grace