தொழில் முனைவோருக்கு எது முக்கியமானது?

சத்குரு:

தொழில் முனைவோருக்கு, பணம் முக்கியமானது என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் பணத்துக்காக ஆசைப்படும் காரணத்தால், பணம் வருவதில்லை. நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தை நன்றாக செய்வதால், பிறகு பணம் வருகிறது. நீங்கள் பணத்தை மட்டும் நினைத்தால், என் புரிதலில் அதற்கு அர்த்தம், நீங்கள் விளைவில் மட்டும்தான் ஆர்வமாக இருக்கிறீர்களே தவிர, செயல்முறையில் அல்ல. விளைவில் மட்டும் ஆர்வம் கொண்டு, செயல்முறையில் ஆர்வமில்லாமல் இருப்பவர்கள், அதைப்பற்றி கனவு மட்டும்தான் காண்பார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்று சதாசர்வகாலமும் சிந்திப்பதற்கு பதில், நீங்கள் எதனை உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதையும், நீங்கள் உருவாக்குவது உண்மையிலேயே பயனுள்ளதுதானா என்றும் பார்த்தால், அதன் விளைவாகப் பணம் நிகழும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்று சதாசர்வகாலமும் சிந்திப்பதற்கு பதில், நீங்கள் எதனை உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதையும், நீங்கள் உருவாக்குவது உண்மையிலேயே பயனுள்ளதுதானா என்றும் பார்த்தால், அதன் விளைவாகப் பணம் நிகழும். உங்கள் வாழ்க்கையின் முடிவில், நீங்கள் சேகரித்து வைத்துள்ளதை, உங்களால் எடுத்துச்செல்ல முடியாது. நீங்கள் என்ன உருவாக்கியுள்ளீர்கள் என்பதுதான் முக்கியம்.

பயனுள்ளதை உருவாக்குவதில் உள்ள ஆனந்தம்

Ratan Tata at Isha Insight, ரத்தன் டாடா

நாராயண மூர்த்தியைப் போன்று, பெரிய அளவில் வெற்றியடைந்த நவீன கால தொழில்முனைவோரை நீங்கள் பார்த்தால், இவர்கள் பணத்தைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர். அவர்கள் உருவாக்கியது அனைவருக்கும் மதிப்பு மிகுந்ததாக இருந்த காரணத்தால், இயல்பாகவே பணம் அவர்களை வந்தடைந்தது. எல்லாவற்றுக்கும் மேல், நீங்கள் பெரிதென மதிப்பதை உருவாக்கினால், அனைவரது வாழ்க்கைக்கும் அளவற்ற நன்மையாக இருப்பதாக நீங்கள் பார்ப்பதை உருவாக்குகிறீர்கள் என்றால், அதை உருவாக்குவதன் ஆனந்தம் உங்களுக்குக் கிடைக்கும்.

பணம் மட்டுமே முக்கியமானது அல்ல!

ஒரு தொழில்முனைவர், ஒரு தொழில்முனைவராவது ஏனென்றால், ஏதோ ஒன்று நிகழ்ந்தாக வேண்டும் என்று அவர் நினைப்பதை அவர் உருவாக்க விரும்புகிறார். நீங்கள் ஒன்றை உருவாக்குவதற்கு விரும்பினால், பணம் அதன் ஒரு பகுதியாக இருக்கின்றது. பணம் இல்லாமல், இன்றைய உலகில் எந்த செயலும் ஒழுங்காக நகர்வதில்லை. ஆகவே ஒன்றை நிகழச் செய்வதற்கு, பணம் மற்றொரு அத்தியாவசியமான பொருட்களுள் ஒன்றாகவே உள்ளது. பொருள் மேலாளர்கள் என்று இருப்பதைப் போன்று, ஒரு நிதி மேலாளர் உங்களுக்குத் தேவை.

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது அந்தந்த காலகட்டங்களைச் சார்ந்தது. இன்ஃபோசிஸ் போன்ற இன்றைய மகத்தான வெற்றிக் கதைகள், சரித்திரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பொருத்தமானவை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் திருப்புமுனைகள் இத்தகைய விஷயங்கள் நிகழ்வதற்கு அனுமதிக்கின்றன. அந்த விஷயங்களுக்காக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் உருவாக்க விரும்புவது என்ன என்பதையும், மக்களின் வாழ்க்கையில் எந்த விதத்தில் நீங்கள் மதிப்பு கூட்ட விரும்புகிறீர்கள் என்பதையும்தான் நீங்கள் பார்க்கவேண்டும். மக்களின் வாழ்க்கைக்கு பெரிதும் மதிப்பான ஒன்றை நீங்கள் உண்மையாகவே வழங்குகிறீர்கள் என்றால், நீங்கள் ஏன் பணத்தை நினைத்துப் பார்க்கவேண்டும்? எப்படியும் அது வரும்.

நாராயணமூர்த்தி அவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைக் கட்டமைத்த விதம்

இன்ஃபோ சி ஸ் நா ரா யணமூர்த்தி , Infosys Narayana Murthy

ஒருமுறை, ஒரு மாநாட்டில் நாராயணமூர்த்தி எங்களுடன் இருந்தபோது, ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அவர் ஒரு சிறு தொழில்முனைவராகத் தொடங்கி இன்றைக்கு, ஒட்டுமொத்த உலகமும் மதிக்கும் ஒரு பெயராக உருவாகியுள்ளார். அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கி, தனது கூட்டாளிகளைத் தேர்ந்தெடுத்தபோது - இது எந்த ஒரு வியாபாரத்துக்குமான மிக முக்கியமான ஒரு பகுதி - மற்ற ஆறு பேர் - அவருக்கு பல வருடங்கள் இளையவர்களாக இருந்தனர். ஆனால் அவர் அவர்களை தனது கூட்டாளியாக எடுத்துக்கொண்டபோது, அவர் தனக்கானதை எடுத்துக்கொண்டதைப் போல ஏறக்குறைய அதற்கு இணையான பங்கினை அவர்களுக்கு வழங்கினார்.

அவரது பெரும்பாலான கூட்டாளிகளுக்கு, மென்பொருள் தொழிலில் ஒரு வருட அனுபவம்தான் இருந்தது, ஆனால் அவர் நிறுவனத்தில் மிக அதிகமான பங்கினை அவர்களுக்கு அளித்துக்கொண்டிருந்தார். மக்கள் அவர் செய்வது பைத்தியக்காரத்தனம் என்று கூறினர். ஆகவே அவர், "அது பரவாயில்லை, ஏனென்றால் நான் இதை பணத்துக்காகச் செய்யவில்லை. எனக்கு அவர்களது நூறு சதவிகித ஈடுபாடுதான் வேண்டும். இதை வெற்றிகரமான ஒன்றாகச் செய்வதைத் தவிர்த்து அவர்கள் வேறு எதையும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது", என்று பதில் கூறினார். அவருக்கு அது பலனளித்தது ஏனென்றால் ஐந்து கோடியில் நூறு சதவிதத்தை சொந்தமாக்கிக்கொள்வதைவிட, 50,000 கோடியில் பதினைந்து சதவிகிதத்துக்கு சொந்தமாவது மேலானது.

நாம் செய்யும் செயல் மூலம் நமது வாழ்வை மறுகட்டமைப்பு செய்வது

எல்லாவற்றுக்கும் மேலே, நம்முடன் செயல்படும் மக்கள் அந்த செயலுக்குள் தங்கள் உயிரைக் கொடுத்துச் செய்வதற்கு விருப்பத்துடன் உள்ளனர், ஏனென்றால் அனைவரும் அதற்காகத் தங்கள் உயிரைக் கொடுக்காமல், மகத்தான ஒன்று நிகழப்போவதில்லை. "நான் எட்டு மணி நேரம் பணி புரிவேன், நீங்கள் எட்டு மணி நேரம் பணி செய்யுங்கள்", என்று ஒரு எச்சரிக்கையான விதத்தில் நீங்கள் பணி புரிந்தால் - இது ஒரு நிறுவனத்தை உருவாக்காது. ஒரு தொழில்முனைவர் அதிலேயே முழுமூச்சாக இருக்கவேண்டும். அது வாழ்வாதாரத்தை உருவாக்குவதைக் குறித்தது மட்டுமல்லாமல், நாம் செய்யும் செயலிலிருந்து நமது வாழ்வை மறு கட்டமைப்பதைக் குறித்தது. ஒரு தொழில்முனைவர் சுயமாக உந்தப்படுபவராக இருக்கிறார் - அவரை இயக்குவதற்கு வெளியிலிருந்து எதுவும் அவருக்குத் தேவைப்படுவதில்லை. அது ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும், நூறு சதவிகிதம் அவர்களது எல்லைக்கு நகர்த்தவும், ஏதோ ஒன்றைச் செய்யவும் விரும்புகின்றனர். இது நிகழவேண்டும் என்றால், உங்களையும்விட மிகப்பெரிதான ஒன்றை உருவாக்குவது அடிப்படையான தூண்டுதலாக உள்ளது. பணம் என்பது வெறும் விளைவு மட்டுமே.

குறிப்பு: வெற்றி, தலைமை குறித்த சத்குருவின் ஆழ்ந்த புரிதல்கள் பற்றி அதிக கட்டுரைகளை வாசியுங்கள்.