கேள்வி:

நமஸ்காரம் சத்குரு, அகோரிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அகோரிகள் ஏன் காசியில் இருப்பதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? அதுவும் பொது ஜனங்கள் இல்லாத இடத்தில் இருப்பதைத்தான் விரும்புகிறார்கள். ஏன் சுடுகாட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள்? ஏன் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள்? மனித சடலத்தை சாப்பிடுகிறார்கள். அங்கே உட்கார்ந்து தியானம் செய்கிறார்கள். இதெல்லாம் எதற்கு? இதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?

சத்குரு:

இதில் எல்லாமே ஒரு உண்மையும் இருக்கிறது. ஒரு எக்ஜாஜிரேஷன், ரொம்ப மிகைப்படுத்தி சொல்கிற தன்மையும் அதிகமாக அதில் சேர்ந்திருக்கிறது.

காசி நகரத்தின் சிறப்பு

ஒரு காலத்தில் சூழ்நிலை அப்படி இருந்தது. என்னவென்றால், காசிக்கு போனால் வீதி வீதிக்கு ஞானோதயம் ஆன ஒரு மனிதன் இருப்பார், வீதி வீதிக்கு. அங்கே இங்கே தேடிப் போகத் தேவையில்லை. எந்த வீதியில் போனாலும் ஒருவர் இருப்பார். நான் சாக வேண்டும் என்றால் அதுபோன்ற இடத்தில் போய் சாக வேண்டும் என்ற நோக்கத்தில் போனார்கள். எதற்கென்றால், நமக்கு எந்த அறிவு, எந்த ஞானம் எதுவும் வரவில்லை என்றாலும், அந்த உதவி அங்கே இருக்கிறது என்பதற்காக.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அந்த சாதனை சமூகத்து சமீபத்தில் நடக்கக்கூடாது, அது தனியாக நடந்தால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. சமூகத்து சமீபத்தில் நடந்தால் சமூகத்தில் இருப்பவர்கள் இதையெல்லாம் பார்த்து அசிங்கப்படுவார்கள்.

இப்போது காசி அப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாது. கட்டாயமாக அப்படி இல்லை. அப்படி இருந்தாலும் அங்கே சில... எப்போது ஒரு ஞானமடைந்த மனிதன், ஒரு சக்திவாய்ந்த மனிதன் ஒரு இடத்தில் இருப்பானோ, அவன் தன்னுடைய சக்தியை உபயோகப்படுத்தி மட்டும் செயல்படமாட்டான். சில சக்தி ரூபங்கள் உருவாக்கி விடுவான். எதற்கென்றால், தொடர்ந்து மக்களுக்கு அந்த உதவி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில். அதை எல்லாம் ரொம்ப அழித்து போட்டார்கள். அப்படியும் இருக்கிறது, சூழ்நிலை முழுமையாக போய்விட்டது என்று சொல்ல முடியாது.

அகோரிகள் மயானத்தில் இருப்பது ஏன்?

முக்கியமாக நான் அப்போதே சொன்னது போல, இந்த உடல் எரியும்போது அதிலிருந்து வெளியே வருகிற இந்த பிராண சக்தியை உபயோகப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். ஒரு முக்தி அடைந்த மனிதன் என்றால், அவனுடைய உடலை மட்டும் புதைப்போம், மற்றதை எல்லாம் எரிப்பது நல்லது. இதை எரிக்கிற நேரத்தில் அதற்குள் இருக்கிற அந்த பிராண சக்தி வெளிப்படுகிறது. இது மெதுவாக 14 நாட்கள் ஆகியிருக்கும். ஆனால் இப்போது எரித்தவுடனே ரொம்ப சக்திவாய்ந்த ஒரு சக்தி வெளியே போய்விடுகிறது. அந்த சக்தியை உபயோகப்படுத்துவதற்காக சிலவிதமான யோகிகள் இருப்பார்கள் இங்கே. அந்த சக்தியை உபயோகப்படுத்துவதற்காக, அதற்காகவே உட்கார்ந்து இருப்பார்கள்.

அங்கே இருப்பார்கள், நீங்கள் போய் பார்த்தீர்கள் என்றால், மணிகர்ணிகா காட், ஹரிசந்திரா காட்டில் போய் பார்த்தீர்கள் என்றால், யார் வந்தாலும், என்ன வயதில் இறந்துவிட்டது, எப்படி இறந்துவிட்டது என்று கேட்டுக்கொள்கிறார்கள். கொஞ்சம் வயதில் இருப்பவர்கள் உயிரோட்டமாக இருப்பவர்கள் இறந்துவிட்டார்கள் என்றால், அதை உபயோகப்படுத்துவதற்காக ஒரு சாதனை வைத்திருப்பார்கள். எரித்தால், அந்த உயிர் வெளியே வரும்போது, அந்த உயிர்சக்தி வெளியே வரும்போது அதை உபயோகப்படுத்தி, அவருடைய வளர்ச்சிக்காக உபயோகப்படுத்துகிற ஒரு யோக விதானம் இருக்கிறது. அவருக்கு என்னென்னவோ பெயர், சமூகத்தில் புரியாததால் ஏதேதோ பெயர் கொடுத்துக்கொள்கிறார்கள்.

அழகு அசிங்கம் தாண்டிய நிலை

இன்னொன்று, அந்த அகோரி வழியில் முக்கியமானது என்னவென்றால், ஒரு முக்கியமான அம்சம் அந்த சாதனையில் ஒரு அம்சம் என்னவென்றால், நமக்கு பிடித்ததோடு ஒட்டிக்கொள்வது மிகவும் சுலபம் நமக்கு. அந்த அடிமைத்தனம் அதிக ஆழம். பிடிக்காததை வெறுப்பது, அது ஒருவிதமான அடிமைத்தனம். உங்களுக்கு யாரோ ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரோடு இருக்கவே முடியவில்லை உங்களால். அதனால் அவர், எது எது நமக்கு பிடிக்காதோ, எது எது நமக்கு அசிங்கமாக இருக்கிறதோ அதுகூடவே தொடர்பு. இதுவும் ஒருவிதமாக வளர்வதற்கு ஒரு வாய்ப்பு. பிடித்ததோடு இருந்தால் வளர மாட்டீர்கள். எதற்கென்றால் நிறைய பற்று வந்துவிடும். நமக்கு எது பிடிக்காததோ அந்த எதிர்ப்பு அதிகமாகியே போகும். அதனால், நமக்கு எது பிடிக்காததோ, சாதாரணமாக நமக்கு எது எது பார்த்தால் பிடிக்காதோ, எது எது பார்த்தால் நமக்கு அசிங்கமாக இருக்கிறதோ அதோடு தொடர்பு.

மலம் என்றால் நமக்கு பிடிக்கவில்லை, மலத்திலேயே போய் உட்கார்ந்து கொள்வது. இறப்பு என்றால் யாருக்கும் பிடிக்கவில்லை, அதற்கு அங்கேயே போய் உட்கார்ந்து கொள்வது. இப்படி எதிர்மறையான ஒரு வாதம், இதுவும் ஒரு சாதனை தான். அந்த சாதனை சமூகத்து சமீபத்தில் நடக்கக்கூடாது, அது தனியாக நடந்தால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. சமூகத்து சமீபத்தில் நடந்தால் சமூகத்தில் இருப்பவர்கள் இதையெல்லாம் பார்த்து அசிங்கப்படுவார்கள். தேவையில்லாத முடிவு எடுத்துக் கொள்வார்கள். அது ஒரு தனிப்பட்ட நிலையில் நடக்க வேண்டும். இப்போது எங்கே பார்த்தாலும் ஜனத்தொகை இருப்பதால் அவருக்கு அந்த தனிப்பட்ட நிலை இல்லை. எங்கே பண்ணினாலும் யாரோ ஒருவர் பார்த்துவிடுகிறார்.

'அகோரா' என்பது யோகக் கலாச்சாரத்தில் அது ஒரு பங்கு. அகோரா என்றால் எதுவும் கோரமில்லை அவருக்கு. உயிரோடு இருப்பதும் அப்படித்தான், இறந்தாலும் அப்படித்தான், ஒரே மாதிரிதான் இரண்டும். என்னவென்றால், இது எல்லாமே ஒரே மாதிரி ஏற்றுக்கொள்கிற நிலைக்கு வரவேண்டும் என்று. நல்லது-கெட்டது, எது அசிங்கமோ எது அழகோ, எது மேலே எது கீழே, எது சாவு உயிர் எல்லாமே ஒரே விதமாக, கண்ணில் பார்க்கும் எல்லாமே ஒரேவிதமாக இருக்க வேண்டும், சிவன் போல ஆகிவிட வேண்டும் என்று முயற்சி. ஆகிறார்களோ, இல்லையோ, அது வேறு விஷயம். முயற்சி.. முயற்சிக்கே நாம் கும்பிட வேண்டும்தானே? இப்படியே செய்ய வேண்டும் என்று ஒன்றும் தேவையில்லை. பலவிதம் இருக்கிறது. இதுவும் ஒரு வழி.

போதைப் பொருள் ஏன்?

அகோரி என்றால் அவன், வெறும் நீங்கள் சொன்ன விஷயங்கள் மட்டும் செய்யவில்லை, மற்றதெல்லாம் செய்கிறான், அதைப்பற்றி யாருக்கும் கவனம் இல்லை. அவன் போதைப் பொருள் சாப்பிட்டான். அவன் போதை பொருள் சாப்பிட்டது எதற்கென்றால், அடிப்படையாக இது எப்படி வந்துவிட்டது என்றால், உயிர் எதுபோன்ற தீவிரத்தில் இருக்கிறது என்றால், உடலில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஏதோவொன்று வேண்டும் தமஸ் இதற்கு. இதனால் அவன் மாமிசம் சாப்பிட்டுக்கொள்கிறான், போதைப் பொருள் சாப்பிடுகிறான், எதற்கென்றால் கொஞ்சம் தீவிரம் குறைத்துக் கொள்வதற்காக. இல்லையென்றால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை, போய்விடுகிறது, உடலை விட்டு தாண்டிவிடுவோம். கண்ட்ரோல் பண்ணிக் கொள்வதற்காக பண்ணினான். அவனைப் பார்த்து இப்போது எல்லோரும் போதை பொருள் போட்டான். அவன் எல்லாம் அகோரி ஆகமாட்டான், குடிகாரன் ஆகுவான்.

அதனால் அகோரி என்றால் வெறும் மாமிசம் சாப்பிட்டுக்கொள்கிறான், போதை பொருள் போடுகிறான்... தீவிரமான சாதனை இருக்கிறது. தீவிரமான என்றால் ரொம்ப தீவிரமான சாதனை. அந்த தீவிரமான சாதனை செய்தால், உயிர் எவ்வளவு தீவிரமாகிவிட்டது என்றால், உடலில் வைத்துக்கொள்ள முடியவில்லை, அப்படி ஆகிவிட்டது. இப்போது எப்படியோ இதை கீழே போட்டுக்கொள்ள வேண்டும். கொஞ்சம் மந்தமாக பண்ணினால் தான் அது இருக்கும். அதற்காக மாமிசம் சாப்பிட்டான். அதற்காக போதை பொருள் சாப்பிட்டான். எதற்கென்றால், கொஞ்சம் கீழே வைத்துக்கொள்வதற்காக. ஆனால் அவனைப் பார்த்து நீங்கள் அதை எல்லாம் போட்டீர்கள் என்றால், நீங்கள் விழுந்துவிடுவீர்கள்.

இப்படியே சங்கராச்சாரியார் நடந்து போயிருந்தார். அவர் பின்னால் ஒரு 15 - 20 பேர் சீடர்கள் ஓடுகிறார்கள். அவர் இங்கே இருந்து தென்னிந்தியாவில் இருந்து வடக்கிற்கு, வடக்கில் இருந்து தெற்கிற்கு 3 - 4 தடவை நடந்துவிட்டார்தானே? நடப்பதுதான் அவர் வேலை. 32 வயதிற்குள் 2 - 3 முறை நடந்து போய் வந்துவிட்டார். பின்னால் சீடர்கள் ஓடுகிறார்கள் இளைஞராக இருப்பவர்கள்.

ஆதிசங்கரர், Adishankara

ஒருநாள் அப்படியே போயிருந்தார்கள். அங்கே ஒரு சாராயக்கடை. எல்லாம் குடித்து அப்படி இப்படி இருக்கிறார்கள். சங்கராச்சாரியார் இப்படியே பார்த்து, அந்த ஒரு மண் பானையில் இருந்ததை எடுத்து எல்லாம் முழுமையாக குடித்துவிட்டார். குடித்துவிட்டு அவர்பாட்டுக்கு அவர் போயே இருக்கிறார். பின்னால் இருக்கும் சீடர்கள் எல்லாம், இன்னும் என்ன, நமக்கு என்ன பிரச்சனை? நம் குருவே குடித்துக்கொள்கிறார், நமக்கு என்ன பிரச்சனை? அடுத்த கிராமம் வரும்போது நாமும் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள். சரி, இவர் போனார். அவர் முன்னால் போயே இருக்கும்போது இவர்கள் எல்லாம் கொஞ்சம் குடித்தார்கள், அடுத்த கிராமத்தில். குடித்துவிட்டு நேராக போக முடியவில்லை, எங்கெங்கேயோ போகிறார்கள். சங்கராச்சாரியார் பார்த்தார், சீடர் எங்கேயோ இருக்கிறார்கள், பின்னால் இல்லை. ஒரு ஒரு ஆள் எப்படி எப்படியோ போகிறான், நேராக போக முடியவில்லையே.

பார்த்தார்கள், சரி என்று சும்மா இருந்துவிட்டு, அடுத்த நாள் திரும்ப நடந்து போயிருந்தார், இன்னொரு கிராமம் வந்தது. இரும்பு வேலை செய்கிறார்களே, அவர் அதையெல்லாம் சூடு பண்ணி அந்த இரும்பை கரைத்து வைத்திருக்கிறார். அப்படியே இருக்கிறது, சங்கராச்சாரியார் போய் அதை எடுத்துக் குடித்துவிட்டார். இப்போது இவர் போய் குடிப்பார்களா ?

ஆதிசங்கரர் காய்ச்சிய இரும்பு கரைசலை குடித்தல், Adishankara drinking molten iron

அதனால் நீங்கள் எல்லாம் அகோரியாக ஆவதற்கு எல்லாம் முயற்சி பண்ண வேண்டாம். அகோரி என்றால், இப்போது தெரியாமல் ஏதேதோ பிரித்து போட்டுக்கொள்கிறார்கள். அப்படி இல்லை. நீங்கள் இங்கே உட்கார்ந்தீர்கள் என்றால், எல்லாம் ஒன்றுதான் உங்களுக்கு. இது நடந்தாலும் ஒன்றுதான், அது நடந்தாலும் ஒன்றுதான். எந்த மனிதன் அந்த கோரம் என்ற ஒரு வாசல் தாண்டி இருக்கிறானோ... அப்படியென்றால், இது நல்லது இது கெட்டது என்று நிர்ணயிக்கவில்லை, இது அசிங்கம் இது ஆன்மீகம் என்று நிர்ணயிக்கவில்லை, இது புனிதம் அது இன்னொன்று என்று நிர்ணயிக்கவில்லை, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற ஒரு மனநிலையில் இருக்கிறானோ, அவன் அகோரி. நீங்கள் எல்லாம் அதுபோன்ற அகோரியாக ஆகிவிடலாம். அவரை இவரை வெட்டி சாப்பிட வேண்டாம்.