யந்திரங்களின் அறிவியல்

சத்குரு: யந்திரா என்றால் எந்திரம் அதாவது மனிதனால் செய்ய முடியாத்தை எந்திரம் சுலபமாக செய்து கொடுக்கும். எந்திரம் என்பது இரண்டு மூன்று குறிக்கோள்களை ஒன்றாக்கி உருவகப் படுத்துவது – 10 கியர் சக்கரம் ஒரு உதாரணம் – அது ஒரு யந்திரமாகிறது. ஒரு குறிக்கோளை நோக்கி உருவாக்கும் எளிமையான அல்லது சிக்கலான வடிவதான் எந்திரம். இர்ண்டு அல்லது மூன்று எந்திரங்கள் சேர்ந்த்து ஒரு பெரிய யந்த்ரா – ஒரு பெரிய எந்திரமாகும்.

மனித வடிவத்தை கவனித்தால் அது ஒரு அதி நவீனமான எந்திரம் – ப்ரபன்சத்திலேயே மிகவும் நுணுக்கமான ஒன்று. ஆனாலும், சிறு வயதில், நம் எல்லோருக்குமே – மனிதனை விட மிகவும் எளிமையான ஒரு யந்திரமான சைக்கிள் வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஏன்? நடமாட்டத்திற்கு உதவ நமக்கு இரண்டு கால்கள் இருந்தாலும், அதை விட வேகமாக செல்வதற்கு நமக்கு ஒரு எந்திரம் தேவையாக இருந்த்து. ஆகையால் குழந்தைப் பருவத்தில் சைக்கிள்தான் வாழ்க்கையின் வேகத்தை அதிகரிக்கும் அன்றைய எந்திரமாக இருந்த்து. அதன் பின் ஒருவர் யமஹா மோட்டர்-சைக்கிளை ஓட்டிக் கொண்டு போவதைப் பார்த்த பின் அதுதான் எந்திரமாக தெரிந்த்து. அதற்குப் பிற்கு மெர்ஸிடிஸ் பென்ஸ் காரைப் பார்த்தும் அந்த எந்திரம் வேண்டுமென்று இருந்தது.

அதே போல் மூளைச் செயல்களை அதிகரிக்கவும் எந்திரங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் மனிதனின் மூளையிலிருந்து வந்த ஒரு பொருள் ஆனாலும் 1736 என்ற எண்ணை 13343ல் பெருக்க வேண்டுமென்றால் உடனே நாம் ஒரு கணக்கிடும் கருவியை நாடுகிறோம் – அதுவும் ஒரு எந்திரம்தான். ஒரு கணக்கிடும் கருவியில் என்னவெல்லாம் உண்டோ, அதெல்லாம் நமது மூளையில் உள்ளது. நம்மால் கணக்கிட முடியாது என்பதல்ல, நிச்சயமாக முடியும். ஆனால் ஒரு குறிக்கோளுடன் உருவாக்கிய அந்த எந்திரம், நமது உடலை இன்னும் மேம்பட உபயோகிக்க உதவுகிறது. மனிதன் இல்லாமல் எந்திரங்கள் உபயோகமற்றது. மனிதனை உயர்துவதே எந்திரங்கள்தான். உங்களிடன் உடல் என்ற மிக வியப்புக்குறிய எந்திரம் இருந்தாலும், உங்கள் அபரிமிதமான ஆசைகளும், செயல்களும் வளர்ந்து கொண்டே இருக்கும் வரை மேலும் மேலும் எந்திரங்களை கூட்டிக் கொண்டேதான் போவீர்கள் ஏனென்றால் பல வெவ்வேறு விதமான செயல்களை புரிய தனித் தன்மை வாய்ந்த எந்திரங்களால்தான் சாத்தியம்.

லிங்க பைரவி யந்த்ரமும். இது போல்தான். இது வேறு மாதிரியான ஒரு எந்திரம். எந்திரம் என்பதை பொருள் வடிவாகவோ, சக்தி வடிவாகவோ உருவாக்க முடியும். இந்த இரண்டிலும் சிறு வேற்றுமை இருக்கலாம், ஆனால் ஒரே குறிக்கோளுட்ந்தான் இரண்டுமே செயல் புரியும்.

வாழ்வின் ஒரு சில பரிமாணங்களை உயர்த்தவே லிங்க பைரவி யந்த்ராவை வடிவமைத்து, உருவாக்கப் பட்டிருக்கிறது. இதனால் உங்கள் உடல் ரீதியாக, நீங்கள் குடியிருக்கும் இடம் மற்றும் வாழ்க்கையின் நோக்கத்திலும், இலக்கிலும் சில தாக்கங்கள் ஏற்படலாம்,

முற்காலங்களில் அடிப்படையில் எல்லோரையும் சென்றடைய சக்திவாய்ந்த எந்திரங்களாக கோயில்களை உருவாக்கினர். ஒரு முழு நகரமும் பயனுறுமாறு கோயில்களே சக்தி வாய்ந்த என்திரமாக இருந்தது. தென்னிந்தியாவில் உள்ள ஐந்து பெரும் கோயில்கள் கடவுள்களுக்காக அல்ல ஆனால் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்திற்காக கட்டப்பட்டன. இவை எப்படி அமைக்கப் பட்டன என்றால், இதில் மிக முக்கியமான, மூலக் கோயிலை தமிழ்நாட்டில் ஈர்ப்புத்தன்மை அதிகமுள்ள பூமத்திய ரேகையில் அமையுமாறு கட்டினார்கள். மற்ற நாலையும் இதனுடன் சீராக ஒரே நேர்க் கோட்டில் அமையுமாறு உருவாக்கினார்கள். அந்த ப்ராந்தியமே இந்த யந்த்ரா அமைப்பினால் பயனடைந்தது.

இந்த மாதிரியான யந்த்ரங்களை உருவாக்குவதுதான் இந்த கலாசாரத்தின் அடிப்படை நோக்கம். எல்லா நகரன்களிலும், முதலில் ஒரு கோயிலை – வியக்கத்தக்க யந்த்ராவை – உருவாக்கினார்கள். இகோயில்களை கட்டியவர்கள் குடிசைகளில் வாழ்ந்தார்கள் ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப் படவில்லை ஏனென்றால் இந்த யந்த்ராவை உருவாக்குவதாலும் அதை செயல் புரிய வைப்பதாலும் அவர்கள் தம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பினார்கள்.

பொது இடத்திலுள்ள யந்த்ரங்களை பராமரிப்பதென்பது இக்காலக் கட்டத்தில் மிகக் கடினம், ஆகையால் பல தனிப்பட்ட யந்த்ரங்கள் உருவாக்கப் படுகிறது. லிங்க பைரவி யந்த்ரா அப்படிப் பட்ட ஒன்றுதான். மிகவும் சக்தி வாய்ந்த, தனிப்பட்ட முறையில், தனி ஒருவருக்காக உருவாக்கப் பட்ட ஒரு கருவி. அதாவது தனித்தன்மை வாய்ந்த இட்த்தையும், சூழ்நிலையையும் நீங்கள் வசிக்குமிட்த்திலேயே இக்கருவி உருவாக்குவதால், உங்களுடைய வாழ்க்கை நலமும், ஆரோக்கியமும் பாதுகாக்கப் படுகிறது.