முதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு

சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன் என்று தெரியவில்லை ஆனால் சில விண்வெளி நிகழ்ச்சிகளினால் குறைந்தது 15000 – 40000 வருடங்களுக்கு முன் சிவா என்ற ஆதியோகி முக்தி நிலையை அடைந்தார் என்று நம்பப்படுகிறது. ஹிமாலய பர்வதத்தில் . அவர் தீவிர பரவசமாக ஆடத்தொடங்கியதும் அவர் உள்ளே ஒரு அசைவு ஏற்பட்டு, இன்னும் தீவிரமாக ஆடினார். ஆட்டம் தீவிரமாக ஆக, அவர் அசைவற்ற, சலனமற்ற நிலைக்கு உள்ளானார்.

இதைக் கண்டவர்கள், அதுவரை எவருமே உணர்ந்திராத ஏதோ ஒன்றை, தங்கள் அறிவுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை, இவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டார்கள். பலர் ஆர்வத்துடன் இதைத் தெரிந்து கொள்ள வரத்தொடங்கினர். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை துளிக்கூட இல்லாதவராக வாழ்கிறாரே என்று விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஒன்று தீவிரத் தாண்டவம், அல்லது முற்றிலும் அசைவற்ற நிலை - தன்னைச் சிற்றி என்ன நடக்கிறது என்று உணரவே இல்லை. ஏழு பேரைத் தவிர மற்ற எல்லோரும் சென்று விட்டனர். இந்த ஏழு பேரும் தீவிரமாக இதை கற்றுக் கொள்ள வேண்டுமென்று இருந்தார்கள் ஆனால் அவனோ இவர்களை கண்டு கொள்ளவேயில்லை. , “தயவு செய்து அருளுங்கள்! நீங்கள் உணர்ந்திருப்பதை நாங்களும் உணர விரும்புகிறோம்!,” என்று கதறினார்கள்.

ஆனால் அவனோ, “மூடர்களே! நீங்கள் இப்போது இருக்கும் தன்மையில், கோடி வருடங்கள் ஆனாலும் இதை உணர முடியாது, இதற்கு மாபெரும் அளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் கேளிக்கை கிடையாது” என்று அவர்களை துரத்தி விட்டான்.

எண்பத்தி நான்கு ஆண்டு சாதனா செய்தபின் ஒரு நாள், ஆதியோகி அந்த ஏழு பேரைப் பார்த்தான். அவர்கள் தக தக என்று எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையில் மிளிர்ந்தார்கள்.

அவர்கள் தம் பயிற்சியைத் தொடங்கி, நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக மாற, தொடர்ந்து பயிற்சி செய்தார்கள். சிவா அவர்களை திரும்பி பார்க்கக் கூட இல்லை. 84 வருட சாதனா புரிந்தபின் ஒரு நாள் – பௌர்ணமியன்று சூரியனின் ‘கதிர் திருப்பம்’ உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு மாறிய பின்பு – அதாவது சூரியனின் கதிர் பூமியின் வடக்கு பாகத்திலிருந்து தெற்குப் பக்கம் திரும்பும் சமயத்தில் – அந்த பௌர்ணமியன்று, ஆதியோகி இந்த ஏழு பேரின் மீது தன் அருட்பார்வையை செலுத்தினார். அவர்கள் பழுத்த நிலையில், ஞானத்தை பெற முழு தகுதியுள்ளவர்களாக அமர்ந்திருந்தார்கள்.

அவரால் இவர்களை மேலும் புறக்கணிக்க முடியவில்லை. அவர்கள் அவருடைய பார்வையை ஈர்த்தார்கள். அவர்களை அடுத்த 28 நாட்கள் அவர் கூர்ந்து கவனித்தார். அடுத்த பௌர்ணமியன்று அவர்களுக்கு குருவாக அருள் பாலிக்க முடிவு செய்தார். அந்த பௌர்ணமியை குரு பௌர்ணமி என்றும் ஆதியோகி ஆதிகுருவாக மாரியதால் – முதல் குரு அன்று உதயமானார். அந்த ஏழு பேரும், “எங்களுடைய மட்டுமல்லாமல், எங்கள் இனத்திற்கே இந்த ஞானம் போய் சேர வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் அவர் அன்று தெற்கு நோக்கி ஒரு குருவாக அமர்ந்து கொண்டதால் அவரை நாம் தக்ஷினாமூர்த்தி என்றும் அழைக்கிறோம்.

பல வருட பரிமாறலுக்குப் பின் ஞானோதயம் பெற்ற அந்த ஏழு பேரையும் இன்று நாம் சப்தரிஷிகள் என்று அழைக்கிறோம்.

அவர் தெற்குப் பக்கமாகத் திரும்பி மனித இனத்திற்கு, யோக விஞ்ஞானத்தை பரிமாறி அருள் புரிந்தார். யோக விஞ்ஞானம் என்று சொன்னால், நீங்கள் உடலை வளைத்து ( பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும்) மூச்சைப் பிடித்து வைப்பது எப்படி என்று (எல்லா பிறக்காத குழந்தைகளுக்குத் தெரிந்தது) யோக வகுப்புகளில் சொல்லிக் கொடுப்பது அல்ல. மனித உடலின் இயக்கத்தைப் புரிந்து கொண்டு அதன் நுணுக்கங்களை அறிந்து கொள்வதுதான் இந்த விஞ்ஞானம். பல காலம் இந்தப் பரிமாற்றம் நடந்த்து. பல வருட பரிமாறலுக்குப் பின் ஞானோதயம் பெற்ற அந்த ஏழு பேரையும் இன்று நாம் சப்தரிஷிகள் என்று அழைக்கிறோம். “எல்லோரும் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஒருவர் இந்த இனத்திற்கும், மற்றவர்கள் உலகில் பல் வேறு பாகங்களுக்கு சென்று இந்த விஞ்ஞானத்தை பரப்பவும்” என்றார் ஆதியோகி.

மத்திய ஆசியாவிற்கு ஒருவர், மத்திய கிழக்கு மண்டலமும், வட- ஆப்பிரிக்க கண்டத்துக்கு ஒருவரும், தென் அமெரிக்காவுக்கு ஒருவரும், இன்னொருவர் அதே இடத்திலும் ஒருவர் கீழ் - இமாலய பகுதிக்கும், ஒருவர் கிழக்கு ஆசிய பகுதிக்கும், இந்தியர்களுக்கு முக்கியமான ஒருவர் தெற்கு நோக்கியும் பயணமானார்கள். இவர்தான் தென் தீபகர்பத்துக்கு வந்து சேர்ந்த முக்கியப் பட்ட மனிதர் – இவர் அகத்திய முனி என்பவர்.

நாம் ‘தெற்கு’ என்று சொன்னால், இமாலயத்திலிருந்து தென் பகுதி தெற்கு ஆகும். அவர் தென் பகுதிக்கு வந்து ஆன்மீக வழக்கங்களை ஒரு வழிமுறையாக மாற்றினார். இந்த கண்டத்தில் இருக்கும் எந்த மனிதனையும் விட்டு வைக்கவில்லை என்று சொல்கிறார்கள். எல்லா மனித குடியினங்களையும் இவர் ஏதோ ஒரு விதத்தில் தொட்டு, ஒரு படிப்பினையாக அல்லாமல், வாழ்வின் வழிமுறையாக மாற்றினார். இன்றும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையான யோக முறையை, தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றுகிறார்கள். இந்தியர்கள் தம் குடும்பத்தை உற்று நோக்கினால், அவர்கள் அமரும் விதம், செயல்கள் புரியும் முறை, கலாச்சார முறையில் பார்த்தால் அவையெல்லாம் அகத்தியரின் செயல்களின் மிச்சம் - மீதம்தான்.