ட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ, இன்னொரு புறம் எளிய வெண்ணிற ஆடைகளை அணிந்த மக்கள்! அங்கே இரவுமுழுதும் நடனம் அரங்கேற, இங்கே பல ஆழமான பரிமாணத்திற்கு சென்று வந்துகொண்டிருந்தனர். அதோடு உணவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்! சம்யமா உணவை யாராலும் மறக்க முடியாது. மஹாபாரதம் நிகழ்ச்சியில் 15 வகை பதார்த்தங்களுடன் கூடிய விதவிதமான உணவு வகைகள்... ஆனால் சம்யமா நிகழ்ச்சியிலோ மூன்றே வகை உணவுதான் - கஞ்சி, கஞ்சி மற்றும் கஞ்சி!

ஆனால் அந்தத் தீவிர சாதனையிலிருந்த 1370 பங்கேற்பாளர்களும் உடல் சார்ந்த கட்டுப்பாடுகளிலிருந்து தங்களுக்குள் அசைவில்லா தியானநிலைக்கு அற்புதமாக நகர்ந்துகொண்டிருந்தனர். ஸ்பந்தா ஹாலில்பல்லாயிரம் மக்கள் இதுவரை சம்யமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளபோதிலும், ஆதியோகி ஆலயத்தில் வைத்து நிகழும் முதல் சம்யமா நிகழ்ச்சி இதுவே ஆகும். ஆனால், அதே எண்ணிக்கையிலான மக்கள் அதைவிட 2 மடங்கு பெரிய இடத்தில் இருந்தனர். ஆனால், பங்கேற்பாளர்கள் பெற்ற அனுபவம் என்ற தன்மையில் பார்க்கும்போது குறிப்பிடத்தகுந்த வித்தியாசம் இருந்தது.

“ஸ்பந்தா” என்ற வார்த்தைக்கு பொருள் தொன்மையானது என்பதாகும். குறிப்பாக, பாவ ஸ்பந்தனா மற்றும் சம்யமா நிகழ்ச்சிகளுக்காக ஸ்பந்தா ஹால் உருவாக்கப்பட்டது. அதிலும் சம்யமாவை விட பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சிக்காக! அது ஒரு உருகவைக்கும் கொள்கலனைப் போன்றது, அங்கே வேலை இலகுவாக முடியும்! ஸ்பந்தா ஹால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தன்மையின் காரணமாக பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சிகள் அங்கே இலகுவாக நிகழ்கிறது. பாவ ஸ்பந்தனா ஆசிரியர்கள் வேறொரு இடத்தில் வைத்து இந்நிகழ்ச்சியை வழங்கினால் இதனை தெளிவாக பார்க்கமுடியும்! அது அதிக சிரத்தை இல்லாமலேயே ஒருவரை கரையச் செய்கிறது. அது தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியுடன் குறிப்பிட்ட ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டுள்ளதால் அது குறிப்பிட்ட விதமான தன்மை கொண்டுள்ளது.

ஆதியோகி ஆலயம் என்பது வேறுவிதமான தன்மையில் உள்ளது. அது செயல்படும் விதமும் அதன் செயல்பாடுகளும் வேறுபட்டவை! இது கூடுதலான பலன்தரக்கூடிய வகையில், குறிப்பாக யோக அறிவியலுக்காக அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இது அனைத்தையும் தன்னகத்தே சேர்க்கிறது! யோக அறிவியலின் அடிப்படையான அர்த்தம் இதுதான்: ஒரு சிறு குழந்தையை நீங்கள் லேசாக கிள்ளியவுடன் அது அழுகிறது. ஏனென்றால் அதனால் தனது உடலை உணரமுடிகிறது. ஆனால் அந்த குழந்தையினால் தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உணர முடிவதில்லை, குழந்தை முதலில் உடலையே உணரத்துவங்குகிறது. யோகப் பயணமானது உடலில் துவங்கி பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, உச்சபட்ச தன்மை நோக்கிச் செல்வதாகும். 4 அந்த வகையில் ஆதியோகி ஆலயம் இதற்கு மிகவும் உகந்ததாகும். நாம் வேறெந்த இடத்தையும் இந்த மாதிரி பிரதிஷ்டை செய்யவில்லை; இது யோகப் பரிமாணங்களை குறிப்பிட்ட விதத்தில் உணர்த்துகிறது.

நீங்கள் ஆதியோகி ஆலயத்தில் அமர்ந்து உங்கள் உடலை கவனிக்கத் துவங்கினால், அவர் நீங்கள் நினைத்துப் பார்த்திராத சாத்தியங்களுக்கு விரைவாக உங்களை அழைத்துச் செல்வார். நாம் இங்கே வைத்து ஹட யோகா அல்லது கண்களை மூடி குறிப்பிட்ட கவனம் வைத்து செய்யக்கூடிய எந்தவொரு செயல்முறையைச் செய்தாலும், அது அங்கே அற்புதமாக நிகழ்வதைப் பார்க்கமுடியும். ஆனால் இந்த இடம் கூடுதலான சமநிலையை வழங்குவதால் பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சிக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம். மனிதர்கள் சிறிது பித்துநிலையில் இல்லையென்றால் அங்கே பாவ ஸ்பந்தனா வெற்றிகரமாக நிகழாது. ஆம், நாம் அவர்கள் கீழிறங்கி விடுவதற்குள் அவர்களைச் சற்று பறக்க வைக்க முயற்சிக்கிறோம். இங்கே வைத்து பாவ ஸ்பந்தனா நடத்தமுடியாது என்றில்லை; ஆனால், இந்த இடம் யோகப் பரிமாணங்களை உணர்வதற்கு உகந்ததாக உள்ளது. ஆதியோகி ஆலயம் உணர்ச்சி நிலையிலான தன்மையை காட்டிலும் உள்நிலையில் ஆழமான புரிதலுக்கு ஒருவரை அழைத்துச் செல்வதாய் அமைந்துள்ளது.

ஒருவேளை நீங்கள் ஸ்பந்தா ஹாலிற்குள் நடந்தால் அது மிகவும் உணர்ச்சிமிக்க தன்மையாக இருக்கும். ஆனால், நீங்கள் ஆதியோகி ஆலயத்திற்குள் அமர்ந்தால், அது மெதுமாக உங்களுக்குள் இறங்கும். நீங்கள் தியானலிங்கத்திற்கு சென்றால், நீங்கள் போதுமான தயார்நிலையில் இல்லையென்றால் நீங்கள் அங்கே ஒரு கருங்கல் நின்றுகொண்டிருப்பதை மட்டுமே பார்ப்பீர்கள். உங்களுக்கு ஏதும் தெரியாது. ஆனால், நீங்கள் லிங்கபைரவியின் உள்ளே சென்றால் உங்களால் தேவியை உணரமுடியும். ஏனென்றால் அது உணர்ச்சிமிக்க தன்மை. ஆதியோகி ஆலயம் ஆழ்ந்த அசைவில்லா நிலை. உணர்ச்சிமிக்க தன்மையை உணர்வதைக் காட்டிலும் அசைவற்ற தன்மையை உணர்வதற்கு அதிக சிரத்தை தேவை. உணர்ச்சிமிக்க தன்மையை எளிதில் உணரமுடியும். ஏனென்றால் அது அங்கே நிகழ்கிறது; அசைவற்ற நிலையை உணர நீங்கள் சிரத்தையெடுக்க தேவையுள்ளது. இல்லையென்றால் நீங்கள் அதனை தவறவிட்டுவிடுவீர்கள்.

எனவே ஆதியோகி ஆலயம் தனது இயல்பிலேயே ஆய்வுசெய்து பார்க்கும் விதத்தில் உள்ளது. நீங்கள் ஒருபடி உள்நோக்கிப் பார்த்தால் அது உங்களை மேலும் ஒருபடி கொண்டுசெல்கிறது. இது நீங்கள் 100 ரூபாய் சம்பாதித்தால், அவர் உங்களுக்கு போனஸாக 100 ரூபாய் கூடுதலாகத் தருவதைப் போன்றது. இது நல்ல ஒப்பந்தம்தானே?