ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார்.

சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல தானியங்கியாக செயல்படுகிறது. புத்தகத்தில் வெவ்வேறு பகுதிகளை வைத்து நீங்கள் இப்படி பரிசோதனை செய்து பார்க்கமுடியும். எது உங்களை அதிகம் பாதிக்கிறதோ, உங்கள் சிந்தனையை பாதிப்பதல்ல, ஏதோவொன்றைப் படிக்கும்போது உங்கள் உடலில் புல்லரித்திருக்கலாம், அந்தப் பகுதியை எடுத்து திரும்பத் திரும்ப சிலமுறை படியுங்கள். அதை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். புத்தகத்தை படிக்காத ஒருவரிடம் புத்தகத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு உட்காரச் சொல்லுங்கள். அவர்கள் புத்தகத்தைத் திறக்காமலே அதில் உள்ளதைச் சொல்லக்கூடும், ஏனென்றால் அதன் சில பகுதிகள் அப்படித்தான் யந்திரத்தைப் போல உள்ளது. பல புத்தகங்கள் ஓரளவிற்கு இதே போல உருவாக்கப்படுகின்றன. உலகில் 100 சதவிகிதம் யந்திரமாக இருக்கும் புத்தகம் என்றால் அது பதஞ்சலி யோக சூத்திரங்கள். அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தர்க்கரீதியாக அதற்குப் பெரிய அர்த்தமில்லை, ஆனால் அனுபவப்பூர்வமாக அது ஒரு யந்திர வடிவத்தில் உள்ளது.

யோக சூத்திரங்களை, பூமியிலேயே வாழ்க்கை குறித்த மிக அற்புதமான ஆவணம், ஆனால் துளியும் சுவாரசியமற்ற புத்தகம் என்று சொல்லலாம்.

வேண்டுமென்றே தான் பதஞ்சலி அப்படி எழுதினார், ஏனென்றால் அது வாழ்க்கைத் திறக்கும் சூத்திரமாக இருக்கவேண்டும் என்பதே அவர் நோக்கம். அது ஒரு தத்துவமாக மாறுவதை அவர் விரும்பவில்லை. அது சுவாரசியமே இல்லாமல் இருக்கும், ஆனால் ஒரு சூத்திரம் உங்களுக்குள் உண்மையாகிவிட்டால், அது முற்றிலும் வேறொரு பரிமாணத்தைச் சேர்ந்த அனுபவமாக உங்களுக்குள் வெடிக்க வைக்கும். ஒன்றைப் படித்த உங்கள் வாழ்க்கையில் அதை நிதர்சனமாக்கினால், அதுதான் எல்லாம். அதிலுள்ள இருநூறு சூத்திரங்களையும் நீங்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை.

பதஞ்சலி யோக சூத்திரங்களை இப்படி உருவாக்கினார். உங்களுக்கு அதன் மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை. பார்வையற்றோர் தொட்டுணர்ந்து வாசிக்கும் 'பிரெயில்' முறையை வைத்து யோக சூத்திரங்களை வாசித்தால் கூட அது உங்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யும். சற்றே சாகசத்திற்காக ஞானத்தின் பிரம்மாண்டத்துடைய சில பகுதிகள் கூட அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் எதையும் கற்றூத்தரவில்லை. இது எதையும் அறுதியிட்டுச் சொல்லவில்லை, ஆனால் இது உங்களுக்குத் தற்போது உள்ள அனுபவத்தின் நிலையைத் தாண்டி பல விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, அதன்மூலம் உண்மையைத் தேடவேண்டும் என்று மிகப்பெரிய ஊக்கம் அல்லது மிகப்பெரிய ஏக்கம் உங்களுக்குள் பிறக்கிறது.

இந்த புத்தகத்தை எப்படிப் பயன்படுத்துவது? நீங்கள் அற்புதமான முடிவுகளுக்கு வருவதற்கானதல்ல இப்புத்தகம். இது உங்களை தாகமடையச் செய்வது, அதனால் நீங்கள் பெரிய அளவில் தேடுதல் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம் சரியான மனப்பாங்குடன் படித்தால், நிச்சயமாக தேடுதல் நோக்கி உங்களை இது உந்தித்தள்ளும். இந்த புத்தகம் எதையும் கற்றூத்தரவில்லை. இது எதையும் அறுதியிட்டுச் சொல்லவில்லை, ஆனால் இது உங்களுக்குத் தற்போது உள்ள அனுபவத்தின் நிலையைத் தாண்டி பல விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, அதன்மூலம் உண்மையைத் தேடவேண்டும் என்று மிகப்பெரிய ஊக்கம் அல்லது மிகப்பெரிய ஏக்கம் உங்களுக்குள் பிறக்கிறது. இந்த ஏக்கத்தை நீங்கள் ஊட்டி வளர்த்தால், அதுதான் இப்புத்தகத்தைப் பயன்படுத்த சிறந்த வழி.


நெஞ்சுரமிக்கவர்களுக்கான இப்புத்தகம், நம் பயம், கோபம், நம்பிக்கை, போராட்டம் அனைத்தையும் கடந்திருக்கும் ஓர் உண்மையைப் பற்றிய நம் கேள்விகளுக்கு பதில்கள் கொண்டு நம்மை சிறப்பாக வழிநடத்துகிறது. தர்க்கத்தின் விளிம்பில் நம்மைத் தள்ளாட வைக்கும் அதே சமயம், வாழ்வு, சாவு, மறுபிறப்பு, வேதனை, கர்மவினை, மற்றும் உயிரின் பயணம் குறித்த கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் மூலம் நம் உள்ளத்தைக் கவர்கிறார் சத்குரு

Print Copy (US) | Print Copy (India) | Ebook