‘வைபவ் ஷிவா’ என்பது பார்வதிக்கு சிவன் மிக நெருக்கத்தில் வழங்கிய வழிமுறைகளை அனுபவப் பூர்வமாக அறியும் ஓர் பயணமாக இருந்தது. இந்நிகழ்வின்போது, ஈஷா யோகா மையத்தின் மூலைமுடுக்கெல்லாம் சக்திவாய்ந்த தியான முறைகள் மூலம் சிவனைச் சுற்றி நிலவிய அதே ஆன்மீக மணம் நிறைந்தது. ஒவ்வொரு தியான முறையும் வாழ்வின் வேறொரு பரிமாணத்தையும் உண்மையையும் உணர்துவதாய் இருந்தது.