ஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். "ஈஷா" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; "கிரியா" என்றால் உள்நிலையில் செய்யப்படும் செயல்

ஈஷா கிரியாவின் நோக்கமே, ஒவ்வொருவரையும், தன் உயிரின் மூலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்வதுதான். அதன் மூலம் ஒவ்வொருவரும் தன் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். பலவித யோகா வழிமுறைகள் இன்று உலகில் கற்றுக்கொடுக்கப்பட்டு வர, இதில் என்ன சிறப்பு எனப் பார்க்கும்போது, இதன் எளிமையும் அதே சமயத்தில் இதன் பலனகளும் தனித்துவப்படுத்துகிறது. இதற்காக நீங்கள் ஓரிடத்தில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமர்ந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை! ஆனால், நீங்கள் இதனை பிறருக்கு எளிதில் எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் கற்றுக்கொடுக்க முடியும்! தினமும் 12 முதல் 18 நிமிடங்கள் மட்டுமே இதற்காக நீங்கள் செலவிட்டால் போதும், இதன்மூலம் அமைதி, உத்வேகம் மற்றும் நல்வாழ்வு போன்ற சிறப்பான பலன்களை உங்கள் வாழ்வில் பெறலாம்!

Available as a free guided meditation online and through live classroom sessions as well, Isha Kriya has the potential to transform the life of anyone who is willing to invest just a few minutes a day.