அன்னையர் தினமான மே 12 2013, சத்குரு மற்றும் அவரோடு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 300 தியான அன்பர்கள், கலிஃபோர்னியாவிலுள்ள சான் ஜான் பாட்டிஸ்டாவில் ஒன்றுகூடி, 1008 ஆலிவ் மரங்களை புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ஈஷா மையத்தில் நட்டனர். இந்த இடமானது சில வருடங்களுக்கு முன் ஒரு தன்னார்வத் தொண்டரால் (62 ஏக்கர்கள்) நன்கொடையாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு மரங்களுக்கும் அதனை நட்ட நபர்கள் ஆளுக்கொரு பெயரை சூட்டினார்கள். முதல் மரம் சத்குருவால் நடப்பட்டது, அதற்கு சத்குரு பூமா எனப் பெயர்சூட்டினார். அந்நிகழ்வையடுத்து அங்கு தன்னார்வத் தொண்டர்களால் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. அதன்பின் பக்கி (தீuநீளீமீஹ்மீ) எனப்படும் அகன்ற மரத்தின் கிளைகள் தந்த நிழலில் சத்குரு சத்சங்கம் நிகழ்ந்தது. அப்போது, சத்குரு பல வருடங்களுக்கு முன் இந்தியாவில் நிறுவப்பட்ட யோகா மையம் குறித்தும், அது வளர்ந்து வந்த வரலாறையும் நினைவுகூர்ந்தார். கலிஃபோர்னியாவிலும் அதேபோல யோகா மையம் வளர்ச்சி பெறவேண்டுமென குறிப்பிட்டார். செப்டம்பர் 2015ல் கலிஃபோர்னியா மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தை உருவாக்கப்போவதாக சத்குரு அறிவித்தவுடன் கூடியிருந்த தன்னார்வத் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அதனை உருவாக்குவதற்கு தங்களது தாங்கள் துணைநிற்பதாக கரகோஷம் செய்தனர்.

Read the full Article on the Isha Blog