ஈஷா புத்துணர்வு மையம்


சத்குருவால் உருவாக்கப்பட்ட இந்த மையம்ஈஷா யோக மையத்தினுள்ளே, இருக்கிறது. இப்புத்துணர்வு மையம், படிப்படியாக புத்துணர்ச்சியையும், சக்தியையும் ஒருவருள் ஒரு நிலைப்படுத்த பல தனித்தன்மையுடன் கூடிய சக்தி வாய்ந்த வழிமுறைகளை கவனமாக உருவாக்குகின்றது. இந்த சமநிலையென்பது ஆரோக்கியமான வாழ்விற்கும், நாட்பட்ட வியாதியை குணப்படுத்தவும் மிக அத்தியாவசியமானது.

பல நிலைகளில் கிடைக்கக் கூடிய ஈஷா புத்துணர்வின் சிகிச்சைகள் பல யோக முறைகள் மற்றும் பயிற்சிகள், பத்தியங்கள், உடலை தேய்த்து விடுதல், மண் குளியல்கள், கஷாயங்கள் மற்றும் மருந்துகள், நாட்பட்ட வியாதிகளுக்கு மாற்று மருத்துவ முறைகள் என எல்லாவற்றையும் இணைப்படுத்தி அளிக்கிறது. உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, உடல் அழுத்தத்தையும், பதட்டத்தையும், வலியையும் நீக்கி, மூளைத்திறனை அதிகப்படுத்துகிறது. விஞ்ஞான முறையில் ஆங்கில வைத்திய முறை, மாற்று வைத்திய சிகிச்சை, கலாச்சார விதிமுறைப்படி மற்ற இந்திய வைத்திய முறைகளையும் கலந்து அளிக்கிறது.