21 நாட்கள் ஹட யோகா நிகழ்ச்சி
21 நாட்கள் ஹட யோகா நிகழ்ச்சி, 5 பழம்பெரும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளை கற்றுக்கொள்ளும் ஒரு அற்புதமான வாய்ப்பினை வழங்குகிறது!
ஈஷாவின் புதிய 21நாட்கள் ஹடயோகா நிகழ்ச்சி, உங்களின் உடலியல் மண்டலத்திற்கு ஒரு அளப்பறிய துணையாக அமையும் தொன்மைவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த 5 வகையான பயிற்சிகள் ஆகும்.
உபயோகா என்பது 10 பயிற்சிகள் கொண்ட ஒருங்கிணைந்த பயிற்சி. இதைச் செய்வதன் மூலம் உங்கள் மூட்டுக்கள், தசைகள், சக்திநிலை இயக்கப்படுகிறது.
அங்கமர்தனா என்பது 30 வகையான பயிற்சிமுறைகளைக் கொண்டது. இதைச் செய்வதன் மூலம், உங்கள் உடல் மற்றும் மன நலனின் உச்சத்தை நீங்கள் அடைய முடியும்.
சூரியகிரியா என்பது 30 வகையான பயிற்சிமுறைகளைக் கொண்டது. இதைச் செய்வதன் மூலம், உங்கள் உடல் மற்றும் மன நலனின் உச்சத்தை நீங்கள் அடைய முடியும்.
யோகாசனங்கள் என்பது, ஒருவரின் விழிப்புணர்வுநிலையையும், சக்திநிலையயும் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான சக்திவாய்ந்த உடல்நிலைகள்.
பூதசுத்தி என்பது உடலில் உள்ள பஞ்சபூதங்களை சுத்தப்படுத்தும் செயல்முறையாகும்.
21 நாட்கள் ஹட யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேரி தனது ஆரோக்கியம் யோகாவினால் உடனடியாக பெற்ற மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்கிறார்.
"லூப்பஸ் எனும் ஆட்டோ இம்யூன் குறைபாடின் அறிகுறிகள் கடந்த 10 வருடங்களாக என்னை பாதித்திருந்தது. கடுமையான மூட்டு வீக்கம் மற்றும் அதீத களைப்பு போன்ற அதன் அறிகுறிகளை அனுபவித்து வந்த எனக்கு மாயாஜாலம் போல அந்த பிரச்சனை மறைந்தது என்றே சொல்ல வேண்டும்! இந்த நிகழ்ச்சியால் நான் அதிகப்படியான அனுகூலத்தைப் பெற்றேன்.
ஆசிரியர்களின் கனிவான அணுகுமுறையும் அவர்கள் அளித்த குறிப்புகளும் என்னை முழுமையான ஈடுபாடு கொள்ளச்செய்தது. ‘முடிந்தால் செய்கிறேன்’ என்ற மனநிலையிலிருந்து, ‘அனைத்தையும் முயன்று பார்க்கிறேன்’ எனச் சொல்லும் அளவிற்கு மாறினேன். எனக்குள் ஆனந்த உணர்வின் அனுபவம் மலந்ததால் என்னால் அனைத்து தடைகளையும் கடந்து செல்ல முடிந்தது.
ஈஷா யோகா பயிற்சி இதற்கு முன் பயின்றிருந்த போதும், இந்த 21 நாட்கள் நிகழ்ச்சி மூலம் நான் கூடுதல் உணரும்திறன் மிக்கவளாக மாறியுள்ளேன். அதோடு, இதற்கு முன்பு இருந்ததைவிட சந்தேகம் ஏதுமின்றி ஆழமான அனுபவம் பெற்றுள்ளேன். இது எனக்கு கிடைத்துள்ள அற்புதமான பரிசு என்பதை நான் உணர்கிறேன் மற்றும் இதனை தொடர்ந்து ஆழமாக பயிற்சி செய்ய முடிவுசெய்துள்ளேன்.”