ஈஷா ஹோம் ஸ்கூல்
சத்குருவால் 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஈஷா ஹோம் ஸ்கூலானது, கல்வி முறைக்குள் வாழ்வின் அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது! இசை, கலை மற்றும் நாடகம் போன்ற அனைத்து கலைவடிவங்களும் தனித்திறன்களும் மாணவர்களிடத்தில் மிளிரும் விதமாக ஒரு சூழல் இங்கே வழங்கப்படுகிறது!
2005ம் ஆண்டு ஈஷா ஹோம் ஸ்கூலை சத்குரு ஆரம்பித்து வைத்தார் ஈஷா யோக மையத்தின் அமைதியான சூழலில், வெள்ளையங்கிரி மலையடிவார த்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்துள்ள மாணவர்களும், ஆசிரியர்களையும் ஒரு கூட்டுக் குடும்ப முறையில் செயல்படுகிறது. பல தரப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் சேர்ந்திருப்பதால், முன் கூட்டியே நிர்ணயித்த வயது மற்றும் வேறு எந்த வரம்புமில்லாத பாடத்திட்டம், வாழ்வின் எல்லாவித தன்மையையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டிவிடுவதில் கவனம் செலுத்துகிறது இந்தப் பள்ளி. இயல், இசை, நாடகம் மற்றும் கல்வி பற்றிய முழுமையான ஒரு பாடத்திட்டத்தை அமைத்துக் கொடுக்கிறது.
பல தரப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் சேர்ந்திருப்பதால், முன் கூட்டியே நிர்ணயித்த வயது மற்றும் வேறு எந்த வரம்புமில்லாத பாடத்திட்டம், வாழ்வின் எல்லாவித தன்மையையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டிவிடுவதில் கவனம் செலுத்துகிறது இந்தப் பள்ளி.
65 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பள்ளியில் மூன்று பிரிவுகள் உள்ளன – இளநிலை, நடுநிலை மற்றும் முதுநிலை. இளநிலை மற்றும் நடுநிலையில் உள்ள மாணவர்கள் அவரவர் தங்கும் வளாகத்திலேயே பயில முடியும் – உண்மையான இல்லத்திலிருந்து படிக்கும் ஒரு உணர்வை கொடுக்கும். ஞானசாலை என்ற தனி வளாகத்தில் முதுநிலை மாணவர்கள் படிக்கிறார்கள்.
ஐஸிஎஸ்ஈ வாரியத்துடன் இணைந்த இப்பள்ளியில் டாக்டர்கள், எஞ்சினியர்கள், சிற்பி, சார்டர்ட் அக்கௌன்டன்ட்ஸ், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற தேர்ந்த சர்வதேச தொழில் வல்லுநர்கள் தம் நேரம் மற்றும் திறமைகளை கற்றுத் தர ஈடுபட்டுள்ளார்கள். நம்ப முடியாத விஷயம் என்னவென்றால் இந்த ஆசிரியர்கள் எல்லோரும், தத்தம் தொழில்களை விட்டு விட்டு, முழு நேர தன்னார்வத் தொண்ட தொண்டர்களாக தங்களை நமது இந்த நோக்கத்திற்காக தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள். சிறியவர்கள், முதியவர்கள் என்று இப்பள்ளியில் பல தரப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்துள்ளார்கள்.