இயற்கை உரம் தயாரிக்கும் முறை (Iyarkai Uram in Tamil)
விவசாயிகள் இன்று கடனில் மூழ்கி தற்கொலை செய்வதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று உரத்திற்கான செலவு! ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை உரம் தயாரிப்புக்கான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன. இயற்கை உரம் தயாரிக்கும் முறை பற்றி இங்கே சில குறிப்புகள்!
ஒரு நாட்டுப்பசு இருந்தால்...
இயற்கை விவசாயத்தில் நாட்டு மாடுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டு மாடுகளின் சாணமும் கோமியமும் இயற்கை இடுபொருட்களான ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்ற பல்வேறு இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருட்களாகின்றன. இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் கூறும்போது, 30 ஏக்கர் நிலத்திற்கு ஒரே ஒரு நாட்டு பசு மாடு போதும் என்று கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தரலாம். ஆனால், அவரது ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே இயற்கை விவசாய கருத்துக்கள் அனைத்தையும் முன்வைக்கிறார்.
அதாவது ஒரு நாட்டுப்பசு நம்மிடம் இருந்தால் நம் நிலத்திற்கான இடுபொருட்களை நாமே தயாரித்துக்கொள்ளலாம்; விவசாயிகள் வெளியிலிருந்து பண்ணை தொழு உரங்களையோ, மண்புழு உரங்களையோ, இயற்கை உரங்கள் என விற்கும் உரங்களையோ விலைக்கு வாங்கி செலவு செய்யத் தேவையிருக்காது!
பயிர்களுக்கான உணவை சமைத்தல்
சரி… இப்படி நாமே தயாரிக்கும் இடுபொருட்கள் என்னென்ன வேலைகளை செய்கின்றன? இவைதான் பயிர்களுக்கு உணவாகின்றனவா? இல்லை…! இடுபொருட்கள் பயிர்களுக்கான உணவு என்று பாலேக்கர் சொல்லவில்லை. அவை பயிர்களுக்கான உணவை சமைத்து தருகின்றன என்கிறார். அதாவது, பயிர்கள் தங்களது வேர்களின் மூலம் மண்ணிலுள்ள சத்துக்களை உறிஞ்சுகின்றன. மண்ணிலுள்ள சத்துக்கள் வேர்கள் உட்கிரகிக்கும் நிலையில் இல்லாதபோது, அவற்றை சிதைக்கும் பணியை நுண்ணுயிர்கள் மேற்கொள்கின்றன. இதுதான் பயிர்களுக்கான உணவை சமைப்பது என்று பாலேக்கர் அழகாகச் சொல்கிறார். ஆனால் இரசாயன விவசாயத்தில் இடப்படும் உரங்கள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களை அழித்துவிடுகின்றன.
இயற்கை உரம் தயாரிக்கும் முறை
பாலேக்கர் அவர்கள் ஜீவாமிர்தம் எனும் இடுபொருள் மண்ணில் செய்யும் வேலைகள் குறித்து குறிப்பிடும்போது, பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைக் கூறுகிறார். நிலத்தில் நாம் ஜீவாமிர்த கரைசலை பாய்ச்சியவுடன் 15 அடி ஆழத்தில் தியான நிலையில் உறங்கிக்கொண்டிருக்கும் மண் புழுக்கள் அந்த வாசனையை நுகர்ந்தவுடன் மேல்நோக்கி சுறுசுறுப்புடன் கிளம்பி வருகின்றன என்கிறார் பாலேக்கர் அவர்கள். அவ்வாறு வரும்போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுவருகின்றன.
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை
இதேபோல் பீஜாமிர்தம் எனும் விதை நேர்த்தி செய்வதற்கான இயற்கை இடுபொருள் மூலம் முளைக்கும் திறன் விதைகளில் மேம்படுவதோடு, முளைக்கும் திறனை குறைக்கும் பாக்டீரியாவை அவை அழிக்கின்றன. இந்த பீஜாமிர்தமும் மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் போன்ற இயற்கை பொருட்கள் மூலம் நாமே தயாரித்துக்கொள்ளலாம்.
பீஜாமிர்தம் தயாரிப்பு முறை
Subscribe
இதுபோல் இயற்கை விவசாயத்தில் பல்வேறு வகையான இயற்கை உரங்களை விவசாயிகள் தங்கள் நிலத்தில் தாங்களே தயாரித்து செலவில்லாமல் ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சியை ஈஷா விவசாய இயக்கம் வழங்கி வருகிறது.
பஞ்சகவ்ய கரைசல் தயாரிப்பு முறை
பீஜாமிர்தம் தயாரிப்பு முறை
கன ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை
புளித்த மோர் கரைசல் தயாரிப்பு முறை
பழ இ.எம் கரைசல் தயாரிப்பு முறை
அக்னி அஸ்திரம் தயாரிப்பு முறை
பத்திலைக் கஷாயம் தயாரிப்பு முறை
அக்னி அஸ்திரம் தயாரிப்பு முறை
வேம்பு அஸ்திரம் தயாரிப்பு முறை
ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை தமிழகத்தில் கொண்டுசேர்க்கும் ஈஷா!
நிலத்தில் நாம் ஜீவாமிர்த கரைசலை பாய்ச்சியவுடன் 15 அடி ஆழத்தில் தியான நிலையில் உறங்கிக்கொண்டிருக்கும் மண் புழுக்கள் அந்த வாசனையை நுகர்ந்தவுடன் மேல்நோக்கி சுறுசுறுப்புடன் கிளம்பி வருகின்றன என்கிறார் பாலேக்கர் அவர்கள். ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமாக ஈஷா விவசாய இயக்கம் தற்போது பாலேக்கர் அவர்களின் விவசாய முறையை தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறது. செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழிற்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் முறையைக் கற்றுக்கொடுக்க ஈஷா பசுமைக் கரங்களின் அழைப்பின்பேரில் கடந்த 2015ல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் வருகை தந்தார். இயற்கை முறையில் இடுபொருட்கள் தயாரிப்பது எப்படி என்பதும் அங்கே கற்றுத்தரப்பட்டது.
இயற்கை உரம் தயாரிப்பதற்கு பயிற்சி வகுப்புகள்!
தற்போது ஈஷா விவசாய இயக்க தன்னார்வத் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இயற்கை விவசாயத்திற்கான இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை வழங்கி வருகின்றனர். இயற்கை விவசாயத்தை புதிதாக மேற்கொள்ளவிருப்பவர்களும் இதில் கலந்துகொள்ளலாம். இயற்கை விவசாயம் குறித்த அறிமுக உரை, இடுபொருட்கள் தயாரிப்பது குறித்த விளக்க உரை, 12 வகையான இடுபொருட்கள் தயாரிக்கும் முறை, அதற்கான நேரடி செயல் விளக்கங்கள், பங்கேற்பாளர்களே நேரடியாக செய்வதற்கான களப்பயிற்சிகள், கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு அம்சங்களை இந்நிகழ்ச்சி உள்ளடக்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 24 அன்று நாகர்கோயிலில் ஈஷா விவசாய இயக்க தன்னார்வத் தொண்டர்கள் இயற்கை விவசாயி ஒருவரின் நிலத்தில் வைத்து இடுபொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியை வழங்கினர். இதில் ஏராளமான விவசாய பெருமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சிபெற்றுச் சென்றனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களில் விவசாயிகளின் அழைப்பின்பேரில் சென்று, தன்னார்வத் தொண்டர்கள் இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சியை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியில் மதிய உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான நன்கொடை தொகை மட்டுமே பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவும், இயற்கை விவசாயம் குறித்த சந்தேகங்களை ஆலோசனைகளைப் பெறவும் 94425 90062 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்!