வேப்பம்பூ பச்சடி
வேப்பம்பூ என்பது தென் இந்திய சமையலில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள். அதை வைத்து சுவையான வேப்பம்பூ பச்சடியும், ரசமும் வைப்பது எப்படி? படித்து தெரிந்துகொள்வோம்...
ஈஷா ருசி
வேப்பம்பூ என்பது தென் இந்திய சமையலில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள். அதை வைத்து சுவையான வேப்பம்பூ பச்சடியும், ரசமும் வைப்பது எப்படி? படித்து தெரிந்துகொள்வோம்...
வேப்பம்பூ பச்சடி
Subscribe
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1
வேப்பம்பூ - 1 கைப்பிடி
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- சிறிதளவு நீர்த்த புளி கரைசலில் மஞ்சள்தூள் சேர்த்து கொதித்தவுடன் தோல் எடுத்து நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
- மாங்காய் வெந்தவுடன் வெல்லம் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வேப்பம்பூவை வறுத்து, அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும்.
- அதை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து வெந்த மாங்காயுடன் நன்கு சேர்த்து கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி கிளற வேண்டும்.
வேப்பம்பூ ரசம்
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 2 ஸ்பூன்
புளி கரைசல் - 2 டம்ளர்
பருப்பு தண்ணீர் - 1 டம்ளர்
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி பொடி - கால் ஸ்பூன்
வரமிளகாய் - 2
மிளகு - 5
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
வெல்லம் - கால் ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
- புளி கரைசல் மற்றும் பருப்பு தண்ணீர் தயார் செய்துகொள்ள வேண்டும்.
- சீரகம், மிளகு, மிளகாய், கொத்தமல்லி பொடி ஆகியவற்றை தண்ணீர் சிறிதளவு விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து கடுகு தாளித்து, புளி கரைசல், பருப்பு தண்ணீர், அரைத்த கரைசல், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து நுரை கட்டியவுடன் வெல்லம் சேர்த்து இறக்கிவிட வேண்டும்.
- பிறகு வேப்பம்பூவை நெய்யில் சிவக்க வதக்கி ரசத்துடன் சேர்க்கவேண்டும். சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.
குறிப்பு: பங்குனி மாதத்தில் மட்டுமே கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து நிழலில் உலர்த்தி பதப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.