வருகிறது நவராத்திரி…. கொண்டாட வாருங்கள்!
நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்துமே தனிமனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான கருவியாகவே அமைகிறது. அந்த வகையில், நவராத்திரி திருவிழா தனிச்சிறப்புமிக்கதொரு கொண்டாடமாகும்! லிங்கபைரவியில் 2019 நவராத்திரி திருவிழாவில் என்னென்ன ஸ்பெஷல் என்பதை சொல்கிறது இந்த பதிவு!
நவராத்திரி திருவிழா இம்முறை ஈஷா யோக மையத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி திருவிழாவையொட்டி சிறப்பு மந்திர உச்சாடனை, அர்ப்பணைகள், விளக்கு பூஜை, பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், பக்தர்களுக்கென பிரத்தியேகமாக நவராத்திரி சாதனா, மேலும், வண்ணமயமான லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலத்தோடு நந்தியின் முன்னே நடைபெறும் மஹாஆரத்தி என பல்வேறு சிறப்பம்சங்கள் காத்திருக்கின்றன.
இந்த நவராத்திரிக் கொண்டாட்டங்கள் வரும் செப்டம்பர் 28ம் தேதி நிகழவிருக்கும் தெய்வீகத்தன்மை கொண்ட இரவான மஹாளய அமாவாசையன்று, இறந்த நம் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் நல்வாழ்விற்காக மேற்கொள்ளப்படும் வருடாந்திர காலபைரவ சாந்தி செயல்முறையுடன் துவங்குகிறது.
நவராத்திரி திருவிழாவின் ஒன்பது நாட்கள் கொண்டாட்டமானது செப்டம்பர் 29ஆம் தேதி துவங்கி அக்டோபர் 8ல் இருளை வெற்றி கண்ட நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி நாளன்று நிறைவடைகிறது.
மஹாளய அமாவாசை - செப்டம்பர் 28
மாலை 6 மணி | லிங்கபைரவியில் அக்னி அர்ப்பணம் – நெருப்பில் எள்ளை அர்ப்பணித்தல் |
இரவு 9:30 மணி | லிங்கபைரவியின் அருகில் மஹாளய அமாவாசை பற்றிய சத்குருவின் வீடியோ ஒளிபரப்பு |
இரவு 11:20 மணி | காலபைரவ சாந்தி |
நவராத்திரி – செப்டம்பர் 29 - அக்டோபர் 7
செப்டம்பர் 29 - அக்டோபர் 1 | துர்க்கைக்கு உரிய நாட்கள் | குங்கும அபிஷேகம் |
அக்டோபர் 2-4 | லட்சுமி தேவிக்கு உரிய நாட்கள் | மஞ்சள் அபிஷேகம் |
அக்டோபர் 5-7 | சரஸ்வதி தேவிக்கு உரிய நாட்கள் | சந்தன அபிஷேகம் |
காலை நேர அட்டவணை:
காலை 7 மணி 7:30 மணி வரை | குங்குமம்/ மஞ்சள்/ சந்தனம் அபிஷேகம் (செப்டம்பர் 29, அக்டோபர் 2 & அக்டோபர் 5 ஆகிய நாட்களில்) |
காலை 7:40 | வழக்கமாக நிகழும் அபிஷேகம் |
மாலை நேர அட்டவணை:
மதியம் 1:20-4:20 மணி வரை மாலை 4:20 மணி – 5 மணி | லிங்கபைரவி நடை சாத்தப்பட்டிருக்கும் லிங்க பைரவி நடைதிறப்பு |
மாலை 5:30- மாலை 6:20 மணி வரை | லிங்கபைரவியில் நவராத்திரி பூஜை |
மாலை 6:10 – 6:45 | சூரிய குண்டத்தில் தரிசன நேரம் |
மாலை 6:45-7:45 | சூரிய குண்டத்தில் கலை நிகழ்ச்சிகள் |
இரவு 8:45 மணி | அன்னதானம் |
இரவு 8:40- 9:45 | லிங்கபைரவியில் நவராத்திரி சாதனா |
இரவு 10 மணி | லிங்கபைரவி நடை சாத்துதல் |
நவராத்திரி சாதனா
இந்நேரத்தில் தேவியோடு, அவளின் அருட்கொடையில் வியாபித்திருக்க வேண்டுபவர்களுக்கு, மிக சாதாரணமான, ஆனால் அதேநேரத்தில், மிக சக்திவாய்ந்த நவராத்திரி சாதனாவை சத்குரு இங்கே வழங்குகிறார். இதை வீட்டில் இருந்தவாறே நீங்கள் பின்பற்றி, தேவியின் அருளை வீட்டிலேயே பெறலாம். இதை செப்டம்பர் 29 அன்று ஆரம்பித்து, அக்டோபர் 8 வரை தினமும் பின்பற்ற வேண்டும்.
சாதனா குறிப்புகள்:
- தேவிக்கு விளக்கு ஏற்றுங்கள்.
- 'ஜெய் பைரவி' ஸ்துதியை குறைந்தபட்சமாக மூன்று முறை தேவியின் முன்னிலையில் உச்சரியுங்கள். இது தேவியின் படத்திற்கு முன்போ, லிங்கபைரவி குடியின் முன்போ, அல்லது லிங்கபரைவி யந்திரம் / அவிஞ்ன யந்திரத்தின் முன்போ அமர்ந்து உச்சரிக்கலாம். (ஸ்துதியில் உள்ள தேவியின் 33 பெயர்களையும் உச்சரிக்கவேண்டும். இப்படி மூன்று முறை செய்யவேண்டும்.)
- தேவிக்கு ஏதேனும் அர்ப்பணம் செய்யுங்கள். எதை வேண்டுமானாலும் தேவிக்கு நீங்கள் அர்ப்பணிக்கலாம்.
இதை ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், பகலோ, இரவோ நீங்கள் செய்யலாம். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எவ்வித உணவுக் கட்டுப்பாடும் கிடையாது. என்றாலும் இந்த நாட்களில் கடைபிடிக்கப்படுவது போல் சாத்வீக உணவை உண்பது அதிக பலனளிக்கும். உங்கள் வழக்கப்படி நீங்கள் செய்யும் பூஜைகளோடு சேர்த்து இதையும் நீங்கள் செய்யலாம்.
Subscribe
லிங்கபைரவி ஸ்துதி
இது தான் தேவியின் 33 மங்களகரமான பெயர்கள். இதை பக்தியோடு உச்சரித்தால், அவள் அருட்பார்வை உங்கள்மீது படரும்.
ஜெய் பைரவி தேவி குருப்யோ நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸ்வயம்போ நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸ்வதாரிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாகல்யாணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாபத்ராணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி நாகேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி விஷ்வேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி சோமேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி து:க்கஸம்ஹாரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஹிரண்யகர்பிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி அம்ருதவர்ஷிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி பக்தரக்ஷிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸௌபாக்யதாயினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸர்வஜனனி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி கர்பதாயினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஷூன்யவாஸினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாநந்தினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி வாமேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி கர்மபாலினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி யோனீஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி லிங்கரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஷ்யாமஸசுந்தரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி த்ரிநேத்ரினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி சரவமங்களி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாயோகினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி க்லேஷநாசினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி உக்ரரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி திவ்யகாமினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி காலரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி திரிஷுலதாரிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி யக்ஷகாமினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி முக்திதாயினி நமஸ்ரீ
அஉம் மஹாதேவி லிங்கபைரவி நமஸ்ரீ
அஉம் ஸ்ரீ ஷாம்பவி லிங்கபைரவி நமஸ்ரீ
அஉம் மஹாஷக்தி லிங்கபைரவி நமஸ்ரீ
நமஸ்ரீ / நமஸ்ரீ / தேவி நமஸ்ரீ /
விஜயதசமி – அக்டோபர் 8 (சிறப்பு வித்யாரம்பம்)
வெற்றியைக் குறிக்கும் நாளான சிறப்புமிக்க விஜயதசமி நாளன்று, குழந்தைகளுக்கு கல்வியை துவங்கிவைத்து, அவர்களுக்கு துணைசெய்யும் விதமாக ஒரு சிறப்பு வித்தியாரம்பம் நடைபெறுகிறது. (2 வயது முதல் 12 வயதுவரை உள்ள அனைத்து குழந்தைகளும் பங்கேற்கலாம்)
நவராத்திரி 2019 கலை நிகழ்ச்சிகள்
லிங்கபைரவி தேவியின் அளப்பரிய அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது. சிறப்பு மந்திர உச்சாடனை, அர்ப்பணிப்புகள், நவராத்திரி பூஜை மற்றும் மஹா ஆரத்தி ஆகியவை ஒவ்வொரு இரவும் கோலாகலமாய் நடைபெற உள்ளன. பாரம்பரிய இசை, நடனம் மற்றும் கிராமியக் கலைகளும் தினசரி அரங்கேற உள்ளன.
செப்டம்பர் 29, ஞாயிறு | பெருந்துறை KKC சலங்கை ஆட்டக்குழு (நாட்டுப்புறக்கலை) |
செப்டம்பர் 30, திங்கள் | திருமதி. தக்ஷினா வைத்தியநாதன் (பரதநாட்டியம்) |
அக்டோபர் 1, செவ்வாய் | திரு.விக்னேஷ் சங்கரநாராயணன் (கர்நாடக இசை வாய்ப்பாட்டு) |
அக்டோபர் 2, புதன் | திருமதி. சோனாலிகா புரோஹித் மற்றும் குமாரி. ஸ்ரீநிகா புரோகித் (ஒடிசி நடனம்) |
அக்டோபர் 3, வியாழன் | ஈஷா சம்ஸ்கிருதி (பரதநாட்டியம்) |
அக்டோபர் 4, வெள்ளி | திரு.பரத் நாராயன் (கர்நாடக இசை வாய்ப்பாட்டு |
அக்டோபர் 5, சனி | குமாரி. வர்ஷா புவனேஸ்வரி (கதா காலக்ஷேபம் காரைக்கால் அம்மையார்) |
அக்டோபர் 6, ஞாயிறு | காரை ராமன் கிரியேஷன்ஸ் (பொம்மலாட்டம்) |
அக்டோபர் 7, திங்கள் | திரு. ஹேமந்தா மற்றும் திரு.ஹேரம்பா (கர்நாடக புல்லாங்குழல் இசை) |
தினமும் மாலை 6.45 மணி முதல் 7.45 வரை சூரியகுண்ட மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறும். 6.30 மணிக்குள் அமரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
மேலும் தகவல்கள் பெற : +91-83000 83111 அல்லது இமெயில் info@lingabhairavi.org