வருகிறார்கள் வால்மீகிகள்!
சினிமாக்களில் ரவுடிகளும் வில்லன்களும் கடைசி காட்சியில் திருந்தும் காட்சியை பார்த்திருப்போம்! தன் வாழ்வில் பெரும் அபத்தங்கள் நடக்கும் முன்னரே தன் வாழ்க்கையை அன்பின் பக்கம் திருப்பி, தனை மாற்றிய ஈஷா யோகா வகுப்பை பற்றி மதுரையில் சண்டைக்கோழியாய் வாழ்ந்துவந்த ஒரு முன்னாள் சிறைக்கைதி பகிர்ந்துகொள்கிறார்!
சினிமாக்களில் ரவுடிகளும் வில்லன்களும் கடைசி காட்சியில் திருந்தும் காட்சியை பார்த்திருப்போம்! தன் வாழ்வில் பெரும் அபத்தங்கள் நடக்கும் முன்னரே தன் வாழ்க்கையை அன்பின் பக்கம் திருப்பி, தனை மாற்றிய ஈஷா யோகா வகுப்பை பற்றி மதுரையில் சண்டைக்கோழியாய் வாழ்ந்துவந்த ஒரு முன்னாள் சிறைக்கைதி பகிர்ந்துகொள்கிறார்!
அடையாளங்கள் மாறும்போது அற்புதங்கள் நிகழ்ந்து விடுகிறது. ஈஷாவின் மாயக் கரங்கள்பட்டு எத்தனையோ கற்கள் உயிர் பெற்றிருக்கிறது. வழிப்பறி, கொலை, கொள்ளை செய்த கொடியவனுக்கு தீட்சை கொடுத்து, ஒரு கொடியவனை நாரதர் வால்மீகியாக ஆக்கியது போல், ஒரு நிழல் உலக நபரை வெளிச்சத்தில் வாழ வழி செய்த நிகழ்வு இது.
“குற்றவாளி அண்ணாநகர் ரமேஷ்”-“எழுத்தாளர் ரமேஷாக” மாறுவதற்கு ஈஷா எனும் மந்திரக்கோல் பயன்பட்டு இருக்கிறது.
ஈஷா 1999-2000 வாக்கில், மதுரை சிறைச்சாலையில் கைதிகளுக்காக யோகா வகுப்புகளை எடுத்து வந்த சமயம். அதுநாள் வரை கைதிகளுக்கான பொழுதுபோக்கென்றால் திரைப்படங்கள் மட்டுமே காட்டப்பட்டு வந்து இருந்தது. அங்கிருந்த சிறை அதிகாரி, மாறுதலுக்காக யோகா வகுப்பை நடத்த முடிவு செய்தார். ஈஷாவின் வகுப்பு நடந்தது.
Subscribe
கைதிகளுக்கான யோகா என்றால் சும்மாவா...
ஒரு கணத்தில் உணர்ச்சியில் ஏற்பட்ட மாறுதலால்; ஒரு கணத்தை சரியாக கையாளாமல் போனதால்; சட்டத்தின் பிடிக்குள் சிக்கியவர்களுக்கு, ஈஷா யோகாவில் ‘இந்தக் கணத்தை’ பற்றிய பாடங்கள். தன் சகோதரருக்காக, எடுத்த ஆயுதத்தைக் கீழே வைக்க முடியாமல் போன ரமேஷுக்கு, அன்பைப் பற்றிய பாடம்.
பத்து நாள், கைதிகளின் அன்றாட பேச்சு, பார்வை, செய்கை என எல்லாவற்றிலும் கணிசமாக மாற்றங்கள் தென்பட்டு வந்தது. சிறை அதிகாரி, கைதிகளின் முன்னேற்றங்களை அவர்களுக்குத் தெரியாமலே ஈஷாவிடம் கேட்டு வந்தார், குறிப்பாக ரமேஷைப் பற்றி. அவர் ஒருவரின் மன மாற்றம் அவர்களுக்கு பெரிய நிம்மதியை தந்துவிடும். காரணம், அன்றைய தேதியில் ரமேஷ் போலீசுக்கு பெரிய பிரச்சனை.
யோகா வகுப்பில் ஒரு முக்கியமான கட்டமும் வந்தது. அது எல்லாரும் உலகத்தில் உள்ள உயிர்களை தன் உயிராக பாவிக்கவேண்டும் என பிரமாணம் எடுத்துக்கொள்ளச் சொல்லும் ஒரு முக்கியக் கட்டம். இனி ரமேஷ் அவர்களின் வார்த்தையையும் அவருடைய உணர்வையும் கேட்போமே...
“சத்குரு என்னடானா எல்லாரும் மேல அன்பா இருக்க சொல்றாரு, ஆனால், நாம அசந்தா நம்மள கொல்ல எல்லாம் தயாரா இருக்காய்ங்கே, எப்படி..?!. சத்தியம் செஞ்சுட்டா அதை காப்பாத்தணும். அதனால, என் மீது அன்பு செலுத்துறவங்ககிட்ட நான் அன்பா இருப்பேன்னு சத்தியம் செஞ்சேன்.
அதன் பிறகு யோகா வகுப்பில் எங்களோட அனுபவங்கள பகிர்ந்துக்க சொன்னாங்க, “ஊரில் அன்புக்கு பஞ்சம், அதனால நான் யோகாவிடம் தஞ்சம்” என என்னோட மன மாற்றத்தைப் பற்றி பேசும்போது சொன்னேன். அப்ப என்னோட சிறை அதிகாரி, “ஊரில் அன்புக்கு பஞ்சம், அதனால் யோகாவிடம் தஞ்சம்” என்னும் என்னுடைய வார்த்தைய குறிப்பா சொல்லி என் மேல அவர் வச்சி இருந்த அக்கறைய வெளிக்காட்டிப் பேசினார். அதுநாள் வரை எதிரியாகவே பார்த்து வந்த எங்க சிறை அதிகாரியை முதல் முதலா அன்பா பார்த்தேன். தூக்கமே போயிடுச்சி, ராத்திரி எல்லாம் சத்குரு என் காதுகிட்ட பேசற மாதிரி இருந்தது.
அதுக்குப் பிறகு வாழ்க்கை இப்படி மாறிடும்னு எதிர்பார்க்கல! சிறைக் கம்பிகளுக்குப் பின்னாடி இருந்து நெறைய கவிதைகளை, என்னோட அனுபவங்களை எழுதினேன். சிறை அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்கினேன்.
சிறையை விட்டு வந்து கோயம்புத்தூர் போய் BSP க்ளாஸ் பண்ணேன். சிறையில் நடந்த வகுப்பில் எங்களுக்கு சூன்யா தியானத்திற்கு தீட்சை தரவில்லை, கோயம்புத்தூரில் தான் தீட்சை வாங்கினேன். இரண்டு முறை, சத்குரு நடத்தும் மஹாசிவராத்திரி விழாவுக்கு, கோயம்பத்தூர் போய் கலந்துக்கிட்டேன். அப்ப எல்லாம் என்னோட ஆசையே சத்குருவோட கைலாஷ் போகணும்கிறது தான். விடாம யோகா பயிற்சி செஞ்சிட்டே இருந்தேன். அதனால மனசு லேசா போய்டுச்சு, மனசுலே இருந்த எல்லா வன்மம், கோபம் எல்லாம் எங்க போய்டுச்சுனு தெரியலை. இடையில ஒரு விபத்துல கால் அடிபட்டு படுத்த படுக்கையா ஆகிட்டேன். இன்னொரு திருப்பம், திருமணம் ஆச்சு.. என்னோட மனைவியும் க்ளாஸ் பண்ணாங்க, இப்ப நாங்க இருவருமே தீவிரம்! வீட்டுல தினமும் தொடர்ந்து பயிற்சி செய்யறோம்.
கத்திய எடுத்துட்டா கீழ வைக்கறது கடினம். இந்த சமூகத்துல என்னதான் குற்றவாளி திருந்தினாலும் அவன பார்க்கிற பார்வை மாறுவது ரொம்ப அசாத்தியம், ஆனால் என்னோட வாழ்க்கையில எல்லாமே நடந்தது. 14 வயதில் வழி மாறிப்போனேன், 28 வயது ஈஷா வகுப்பு என்னை அடியோட மாத்திடுச்சி, ஏதோ ரத்தம் ஒடுங்கின வயதில் இந்த மாற்றம் நடக்கல, 23 கொலை முயற்சி வழக்குகள், குண்டர் சட்டம்னு என் மேல நெறைய கேசுங்க. 60 க்கும் மேற்பட்ட ஆளுங்க நான் சொன்னால் வேலை செய்வாங்க... எல்லாம் விட்டுட்டேன். இப்ப எங்க போனாலும் என் வேலைய நாந்தான் செஞ்சுக்கறேன்.
இன்னொரு விசயம். கொலை, அடிதடின்னு போனப்ப வந்த கோபத்தைவிட, நான் திருந்தி வாழும் போது அதிகம் கோபம் நடக்கிற மாதிரி விசயங்கள் நெறையவே நடந்தது. அப்ப எல்லாம் நான் அமைதியா இருந்தேன்னா அதுக்குக் காரணம் ஈஷாதான். என்னோட யோகப் பயிற்சி, பிறகு நான் சாப்பிடும் இயற்கை உணவு. ஆமாம் நான் ஒருவேளை இயற்கை உணவு சாப்பிடறேன்.
இப்ப நான் லைப்ரரி வச்சு இருக்கேன். என்னோட லைப்ரரில சத்குருவோட பெரிய படம் வச்சிருக்கேன். என்னை வழி நடத்துறது அவர்தான்னு நான் ரொம்பவே நம்பறேன். இப்போ, இங்க மதுரையில என்னை எழுத்தாளன் ரமேஷ்னாதான் தெரியும். சிலர் கிண்டலாகவே, ஏம்பா நீ ஒயின் ஷாப் வச்சி இருப்பேன்னு பார்த்தா, நீ என்னடானா லைப்ரரீ நடத்துரனு,” என்னிடமே கேட்பாங்க.
ஈஷா ஒரு தனிப்பட்ட மனுசன மட்டும் இல்லங்க, ஒரு சமுதாயத்தையே மாற்றிவிடும். ஒரு சம்பவத்தை உங்ககிட்ட சொல்லணும். நான் ஒருமுறை என்னோட வண்டில, என் குழந்தை, என் மனைவி மூணு பேரும் போய்ட்டு இருக்கும்போது, எதிர்க்க ரெண்டு பேரு எங்க மேல தெரியாம மோதிட்டாங்க, கீழ விழுந்துட்டோம். எழுந்து பார்த்தேன், அவரும் ஈஷா க்ளாஸ் செஞ்சவர், பிறகு ஒருத்தர ஒருத்தர் பார்த்து சிரிச்சிட்டு பிரிஞ்சி போய்ட்டோம்.
நீங்களே சொல்லுங்க இதே வேற யாராவது இருந்தா என்ன ஆகி இருக்கும். எல்லா இடமும் அன்பு. எப்படி நடந்ததுங்க? ஈஷா தானே காரணம். நான் சண்டைக்காரனா இருந்தபோது இதே விஷயம் நடந்திருந்தா குற்றம் நடந்து இருக்கும். சமுதாயத்துல ஈஷா வகுப்பு பண்ணவங்க அதிகமானா போலீசுக்கு வேலையே இல்லாம போய்டுங்க. அதை குற்றவாளியா இருந்த நானே சொல்றேன். ஒருமுறை என்னோட நெருங்கிய நண்பர், அவருக்கு வேண்டப்பட்டவங்க செய்த துரோகத்தினால் தற்கொலை முடிவுக்கு போயிட்டார். அவருக்கு நான் ஈஷாவை அறிமுகப்படுத்தினேன். ஆனால் அந்த சமயம், எந்த வகுப்புகளும் மதுரைக்கு அருகில் நடக்கல. வகுப்பு வரும் வரை, சத்குரு எழுதின புத்தகங்களை படிக்கச் சொல்லி அவர் மனச தேத்தினேன். பிறகு அவரையும் வகுப்பு செய்ய வச்சேன். அவரும் இப்ப நல்லா இருக்குறாரு.
“அவர் மட்டும் இல்லை நானும் உயிரோட இருக்கேன்னா அதுக்கு காரணம் ஈஷாதான்”
இதோ ஈஷா யோகா ஆசிரியர்கள் தங்களின் அடுத்த வகுப்புக்கான ஆயத்தங்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஒரு வால்மீகி போதுமா என்ன?